இரவு 9.30க்கு நடந்த சம்பவம்.. அமைச்சர் சேகர்பாபு சகோதரர் தற்கொலை! இதுதான் காரணம்? போலீஸ் விசாரணை!
சென்னை: தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவின் சகோதரர் தேவராஜ் தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அமைச்சர் சேகர்பாபுவின் சகோதரர் தேவராஜ் இவர் சென்னையில் உள்ள ஓட்டேரியில் வசித்து வந்தார். குடும்பத்தோடு வசித்து வந்த இவர் நேற்று இரவு தனது அறையில் தற்கொலை செய்து கொண்டார்.
இரவில் தனது அறையில் தனியாக இருக்கும் போது அவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. 9.30 மணிக்கு இந்த சம்பவம் நடந்து உள்ளது.

தேவராஜ்
இந்த தற்கொலை நடந்த போது குடும்ப நபர்கள் வீட்டில் வேறு அறையில் இருந்துள்ளனர். அவரின் இந்த மரணம் மொத்த குடும்பத்தையும் உலுக்கி உள்ளது. இதையடுத்து உடனே ஆம்புலன்ஸ் மூலம் கீழ்ப்பக்கம் மருத்துவமனைக்கு அவரின் உடல் கொண்டு செல்லப்பட்டது. ஆனால் மருத்துவமனைக்கு வரும் முன்பே தேவராஜ் உயிர் பிரிந்துவிட்டது. அங்கேயே தேவராஜ் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட உள்ளது.

திமுக
திமுகவினர் இடையே இந்த மரணம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மூத்த அமைச்சர் ஒருவரின் சகோதரர் மரணம் அடைந்தது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. நேற்று இந்த செய்தி கேட்டதும் திமுக தொண்டர்கள் சிலர் தேவராஜ் வீடு முன் குவிந்தனர். ஆனால் அப்போது வீட்டில் யாரும் இல்லை. இதனால் தொண்டர்கள் சிலர் கீழ்பாக்கம் மருத்துவமனைக்கு சென்றனர். அங்கு இதனால் போலீஸ் குவிக்கப்பட்டது.

சேகர்பாபு
இன்று தேவராஜ் உடலுக்கு இறுதிச்சடங்கு செய்யப்பட உள்ளது. முதல்வர் ஸ்டாலின் நேரில் சென்று தேவராஜ் உடலுக்கு அஞ்சலி செலுத்துவார் என்று எதிர்பாக்கப்படுகிறது. நேற்று விஷயம் அறிந்து இரவோடு இரவாக அமைச்சர் சேகர் பாபு தேவராஜ் உடலை சென்று பார்த்தார். அவரின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார்.திமுக நிர்வாகிகள் சிலர் இந்த சந்திப்பில் உடன் இருந்தனர்.

விசாரணை
இந்த நிலையில்தான் தேவராஜ் மரணத்திற்கு என்ன காரணம் என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அவருக்கு கடந்த சில வாரங்களாக கடுமையான வயிற்று வலி இருந்துள்ளது. உடல் ரீதியாக சில பாதிப்புகள் இருந்துள்ளன. இதனால் அவர் கடுமையாக அவதிப்பட்டு வந்துள்ளனர். இந்த நோய்கள் காரணமாக அவர் தற்கொலை செய்து இருக்கலாம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இருப்பினும் இது தொடர்பாக தொடர் விசாரணை நடைபெற்று வருகிறது.
-
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
"போட்டோ, வீடியோக்காக ஆய்வு செய்யமாட்டேன்".. அட தவெகவில் இப்படியும் ஒரு அமைச்சரா!












Click it and Unblock the Notifications