தவெக பொதுக்கூட்டம்.. செல்ஃபோனுக்கு அனுமதி மறுப்பு.. மூட்டைக் கட்டும் நிர்வாகிகள்.. என்ன காரணம்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக வெற்றிக் கழகத்தின் 2ஆம் ஆண்டு தொடக்க விழா அரங்கிற்குள் செல்ஃபோன் கொண்டு செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதனால் செல்ஃபோன்களை டோக்கன் அடிப்படையில் பெற்று சாக்கு மூட்டைகளில் வைத்திருக்கின்றனர். விஜய் பேசும் போது நிர்வாகிகள் வீடியோ எடுப்பதில் கவனம் செலுத்துவதை தடுக்கவே இந்த ஏற்பாடு என்றும் தவெகவினர் தெரிவித்துள்ளனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் 2ஆம் ஆண்டு தொடக்க விழா மாமல்லபுரம் அருகே உள்ள பூஞ்சேரி கிராமத்தில் உள்ள ஃபோர் பாய்ண்ட்ஸ் ரெசார்டில் தொடங்கியுள்ளது. தமிழ்நாடு முழுவதும் இருந்து தவெக உறுப்பினர்கள் கலந்து கொண்டுள்ள நிலையில், நிர்வாகிகள் அனைவரும் பாஸ் இருந்தால் மட்டுமே அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

TVK Vijay Tamilaga Vetri Kazhagam

பாஸ் இல்லாத நிர்வாகிகளுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. அதுமட்டுமல்லாமல் தவெக நிர்வாகிகள் அனைவரும் 8.30 மணியளவிலேயே கூட்டம் நடக்கும் அரங்கிற்குள் அனுமதிக்கப்பட்டு அமர வைக்கப்பட்டு வருகின்றனர். அதேபோல் திட்டமிட்டபடி சரியாக 10 மணிக்கு கூட்டத்தை தொடங்க வேண்டும் என்பதற்காக தனது வீட்டில் இருந்து தவெக தலைவர் விஜய் புறப்பட்டு ரெசார்ட்-க்கு வந்து சேர்ந்துள்ளார்.

அதேபோல் பொதுச்செயலாளர் ஆனந்த், தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர், ஜான் ஆரோக்கியசாமி, தேர்தல் பிரிவு பொதுச்செயலாளரான ஆதவ் அர்ஜுனா உள்ளிட்டோரும் விழாவில் பங்கேற்கின்றனர். இந்த விழாவுக்காக விஜய்-ஐ வரவேற்கும் வகையில் மாமல்லபுரம் வழிநெடுகிலும் பேனர் வைக்கப்பட்டுருக்கிறது.

அதேபோல் திமுக மற்றும் பாஜகவுக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பேனரும் இடம்பெற்றுள்ளன. இந்த விழாவில் கெட் அவுட் என்று மத்திய மற்றும் மாநில அரசுக்கு எதிரான கையெழுத்து இயக்கத்தை விஜய் தொடங்கி வைக்க உள்ளதாகவும் தெரிய வந்துள்ளது. மேலும் 2ஆம் ஆண்டு தொடக்க விழாவில் பங்கேற்கும் தவெக நிர்வாகிகளுக்காக கமகம சைவ விருந்தும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மொத்தமாக 21 வகையான உணவுகள் தயார் செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து நிர்வாகிகள் வந்திருப்பதால், அவர்களுக்கு உடல் உபாதைகள் ஏற்படக் கூடாது என்று சைவ உணவு தயாரிக்கப்பட்டுள்ளதாக அக்கட்சியினர் கூறியுள்ளனர். இந்த நிலையில் தவெக பொதுக்குழுவில் பங்கேற்கும் நிர்வாகிகளின் செல்ஃபோன் அரங்கிற்கு வெளியிலேயே வாங்கி வைக்கப்பட்டு வருகிறது.

செல்ஃபோன்கள் வாங்கப்பட்டு டோக்கன் போட்டு வைத்து வருகின்றனர். கூட்டம் முடிவடைந்த பின் டோக்கம் வழங்கிவிட்டு செல்ஃபோனை வாங்கி செல்லலாம். அரங்கில் விஜய் பேசும் போது, யாரும் வீடியோ எடுக்கக் கூடாது என்பதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. நிர்வாகிகள் கூட்டத்தில் கவனம் வைக்கவே இந்த ஏற்பாடு என்றும் தவெக நிர்வாகிகள் கூறியுள்ளனர்.

மொத்தமாக செல்ஃபோனை வாங்கி ரப்பர் பேண்ட் அணிவித்து ஒரு சாக்கு மூட்டையில் நிர்வாகிகள் வைத்துள்ளனர். அதுமட்டுமல்லாமல் தவெக நிர்வாகிகள் அரங்கிற்கு செல்லும் போது கைகளில் பை, எலக்ட்ரானிக்ஸ் உள்ளிட்ட பொருட்களை எடுத்து செல்லக் கூடாது என்றும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. செல்ஃபோன்களை மூட்டையில் வைத்திருப்பதால், ஸ்க்ரீனில் ஸ்க்ராச் ஏற்பட வாய்ப்புள்ளதாக சிலர் கவலை தெரிவித்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+