முதுகில் குத்துறாங்க.. சீறிய சசிகலா.. "காண்டாக்ட்" செய்த பாஜக தலைவர்கள்? எதுவும் சொல்லாத எடப்பாடி?

Subscribe to Oneindia Tamil

சென்னை: பாஜகவோடு சசிகலா "காண்டாக்ட்டில்" இருக்கிறார். அவர் பாஜகவோடு சேர்ந்து சில வேலைகளை செய்து வருகிறார் என்று மூத்த பத்திரிகையாளர் ப்ரியன் ஒன்இந்தியா அரசியலுக்கு தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் சென்னை கீழ்ப்பாக்கத்தில் சசிகலா கிறிஸ்துமஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சிக்கு பின் பேசிய சசிகலா, அதிமுகவில் தலைவர்கள் மாறி மாறி அடித்துக்கொள்கிறார்கள். எடப்பாடி, ஓபிஎஸ் மாறி மாறி அடித்துக்கொள்கிறார்கள். ஆனால் அதிமுக ஒன்றாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.

நான் எல்லோரின் பக்கமும் நிற்கிறேன். நான் பொதுவாக நிற்கிறேன்.அதிமுகவில் எல்லோரும் ஒன்றிணைய வேண்டும் என்று நினைக்கிறேன். நான் ஒரு பெண்ணாக நெஞ்சை நிமிர்த்திக்கொண்டு இருக்கிறேன். ஆனால் சிலர் முதுகில் குத்துகிறார்கள். முதுகுக்கு பின்னாடி பேசுபவர்கள் நாங்கள் கிடையாது என்று சசிகலா குறிப்பிட்டு இருந்தார்.

இந்த நிலையில் சசிகலாவின் இந்த திடீர் பேச்சிற்கு என்ன காரணம் என்று மூத்த பத்திரிகையாளர் ப்ரியன் ஒன்இந்தியா அரசியலுக்கு பேட்டி அளித்துள்ளார். அவரின் பேட்டி பின்வருமாறு..

பேட்டி

பேட்டி

கேள்வி: சமீபத்தில் கிறிஸ்துமஸ் விழாவில் சசிகலா பேசும் போது எல்லோரையும் ஒருங்கிணைக்கும் பணிகளை தொடங்கிவிட்டேன் என்று கூறினார்.. செய்தியாளர்களை பொதுவாக சந்திக்காத அவர் அன்று 15 நிமிடம் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.. பெண்கள் நாங்களே நெஞ்சை நிமிர்த்திக்கொண்டு நிற்கிறோம்.. ஏன் முதுகில் குத்துகிறீர்கள் என்றெல்லாம் பேசி இருக்கிறார்.. ஏன் இப்படி திடீரென பேசி உள்ளார்?

பதில்: சசிகலா நீண்ட காலமாக சொல்லும் விஷயம்தான் இது. கடந்த தேர்தலுக்கு முன் வாக்குகள் பிரிய கூடாது. இரட்டை இலையை எதிர்க்க கூடாது என்று ஒதுங்கி இருந்தார். அதிமுக வெற்றிபெற வேண்டும் என்று சசிகலா ஒதுங்கி இருந்தார். 2021 தேர்தலுக்கு பின் அதிமுக ஒன்றுபட வேண்டும் என்று கூறி வருகிறார். அதிமுகவில் எல்லோரும் ஒன்றாக இருக்க வேண்டும் என்று அவர் நினைக்கிறார். தனக்கு எதிராக ஜெயக்குமார் போன்றவர்கள் பேசினால் கூட அதை பற்றி எல்லாம் சசிகலா கவலைப்படுவது இல்லை.

அதிமுக ஒருங்கிணைப்பு

அதிமுக ஒருங்கிணைப்பு

ஆனால் அவர் கட்சியை ஒருங்கிணைக்க அவர் என்ன செய்து வருகிறார் என்று தெரியவில்லை. கட்சியை ஒருங்கிணைக்க போகிறேன் என்றெல்லாம் கூறுகிறார். ஆனால் சசிகலா அதற்கான என்ன மாதிரியான பணிகளை செய்து வருகிறார் என்று தெரியவில்லை. சசிகலாவை ஓபிஎஸ் ஏற்றுக்கொண்டாலும், எடப்பாடி ஏற்றுக்கொள்வாரா என்று தெரியவில்லை. எடப்பாடி தரப்பில் இருப்பவர்கள் என்ன நினைக்கிறார்கள்.. கட்சி ஒன்றுபட்டால் தங்களுடைய பதவிக்கு ஆபத்து வந்துவிடும் என்று நினைக்கிறார்கள். கட்சி இணைந்துவிட்டால் ஓபிஎஸ், சசிகலா அணிக்கு பதவி போய்விடும் என்று அச்சத்தில் இருக்கிறார்கள். அதுதான் எடப்பாடிக்கு ஆதரவு தற்போது இருக்க காரணம். சசிகலா பக்கம் யாருமே இல்லமாக இருக்க இதுதான் காரணம்.

சசிகலா பிளான்

சசிகலா பிளான்

கேள்வி: இவ்வளவு நாள் சசிகலா பேசாமல் இப்போது பேச என்ன காரணம்?

பதில்: அவர் பாஜகவோடு எதோ காண்டாக்ட்டில் இருக்கிறார். அவர் பாஜகவோடு எதோ வொர்க் செய்கிறார் என்றுதான் நினைக்கிறேன். பாஜக ஆதரவு இருக்கிறது. பாஜகவின் எண்ணமும் இவர்களை அதிமுகவில் ஒருங்கிணைக்க வேண்டும் என்பதுதான். எடப்பாடியின் இரண்டாம் கட்ட தலைவர்கள் சிலரும் கூட சசிகலாவுடன் தொடர்பில்தான் இருக்கிறார்கள். அதனால்தான் சசிகலா நம்பிக்கையாக பேசி இருக்கிறார். சசிகலாவிற்கு யாருடைய ஆதரவோ இருக்கிறது.

ஜெயக்குமார் பேச்சு

ஜெயக்குமார் பேச்சு

கேள்வி: ஆனால் சசிகலாவை கட்சியில் சேர்க்க வாய்ப்பே இல்லை என்று ஜெயக்குமார் கூறி இருக்கிறாரே?

பதில்: ஜெயக்குமார் பேசுகிறார்.. ஆனால் எடப்பாடி பேசவில்லையே? எடப்பாடி வாயே திறக்கவில்லையே? எடப்பாடி சசிகலா பேச்சை விமர்சனம் செய்யவில்லை. ஜெயக்குமார் போன்ற தலைவர்கள் தனிப்பட்ட காரணங்களுக்காக சசிகலா, ஓபிஎஸ் ஆகியோரை எதிர்க்கிறார். ஜெயக்குமாருக்கு சபாநாயகர் பதவி போனதால் சசிகலா மீது பர்சனல் கோபம். ஜெயக்குமார் பதவியை அப்போது பிடிங்க சசிகலாதான் காரணம். சசிகலா மீண்டும் வந்தால் நமக்குத்தான் சிக்கல் என்று அஞ்சுகிறார். தனிப்பட்ட கோபத்தில்தான் ஜெயக்குமார் சசிகலாவிற்கு எதிராக பேசுகிறார்.

எடப்பாடி நோக்கம்

எடப்பாடி நோக்கம்

கேள்வி: அதிமுக பிரிந்து இருந்தால் கட்சி தோல்வி அடையும் என்று எடப்பாடிக்கும் தெரியும்.. இருந்தும் ஏன் எடப்பாடி தனியாக இருக்க பார்க்கிறார்?

பதில்: அவர் கட்சியை எப்படியாவது கைப்பற்றி ஒற்றை தலைமையாக இருக்க பார்க்கிறார். கட்சியில் எல்லோரும் இருங்கள். ஆனால் தலைமை நான்தான் என்று நினைக்கிறார். அவர் தன்னை ஜெயலலிதா போல நினைக்கிறார். ஆனால் அவருக்கு மக்கள் செல்வாக்கு இல்லை. அவர் அதை புரிந்துகொள்ள வேண்டும். கட்சியில் எல்லோரும் இணைந்தால் அது ஒருவகையில் உதவியாக இருக்கும். ஆனாலும் பாஜக கூட்டணியில் தொடர்ந்தால் 2024ல் அவர்கள் வெல்வதும் கடினம். அதிமுகவில் தலைவர்கள் எவ்வளவு வேகமாக சேர்கிறார்களோ அவ்வளவு வேகமாக சேர வேண்டும், என்று பத்திரிகையாளர் பிரியன் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+