புதிது புதிதாக வைரஸ் நோய்கள் பரவ என்ன காரணம்? திட்டமிட்டு பரப்பப்படுகிறதா? - ஐகோர்ட் பரபர கேள்வி!
சென்னை : தமிழகத்தில் புதிது புதிதாக வைரஸ் நோய்கள் பரவுவதற்கான காரணங்களை கண்டறிந்து தெரிவிக்கும்படி, தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகம் உட்பட இந்தியா முழுவதுமே அவ்வப்போது காய்ச்சல்களும், வைரஸ் காய்ச்சல்களும் பரவுவது சர்வ சாதாரணமானது தான். இந்த நோய்களை கண்டு மக்கள் யாரும் பெரிய அளவில் பயப்பட மாட்டார்கள்.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வரை நிலைமை இப்படித்தான் இருந்தது. ஆனால், என்றைக்கு கொரோனா என்ற ஒரு வைரஸ் நோய் வந்ததோ, அதிலிருந்து எந்தக் காய்ச்சல் பரவினாலும் மக்கள் மத்தியில் ஒரு பீதி ஏற்பட்டுள்ளது.

வைரஸ் காய்ச்சல்
இப்போது கூட தமிழகத்தில் டெங்கு காய்ச்சல், பன்றிக் காய்ச்சல் போன்ற சில வைரஸ் காய்ச்சல்கள் வேகமாகப் பரவி வருகின்றன. உண்மையிலேயே, கொரோனாவுக்கு பிறகு புதிய புதிய வைரஸ் காய்ச்சல் பரவுவது அதிகமாகி இருப்பதாகவே தெரிகிறது. சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று நடைபெற்ற ஒரு வழக்கின்போது, இவ்வாறு வைரஸ் காய்ச்சல் பரவுவது குறித்து நீதிபதி தமிழக அரசுக்கு சில கேள்விகளை எழுப்பியுள்ளார்.

சென்னை ஐகோர்ட்
கோவை அரசு மருத்துவமனையில், மருந்துக் கடை பொறுப்பாளராக பணிபுரிந்து வந்தவர் முத்துமாலை ராணி. இவர் நிறுத்தி வைக்கப்பட்ட தனது ஓய்வூதியப் பலன்களை வழங்க உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். மருந்துக் கடை அதிகாரியாக இருந்தபோது, அனுமதிக்கப்பட்ட அளவை மீறி அதிகப்படியான மருந்துகளை வாங்கியதாகவும், அது காலாவதியானதால் அரசு கருவூலத்திற்கு நிதி இழப்பு ஏற்பட்டதாகவும் அவர் மீது புகார் கூறப்பட்டது.

புதிது புதிதாக வைரஸ் நோய்கள்
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், நகர மற்றும் கிராமப்புறங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் ஏழை நோயாளிகளுக்கு காலாவதியான மருந்துகள் வழங்கப்படுவதாக பொதுமக்கள் வட்டாரத்தில் பரவலாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். கொரோனா பாதிப்புக்கு பின்னர், குரங்கு காய்ச்சல், 'இன்ஃப்ளூயன்ஸா' உள்ளிட்ட பல வைரஸ் நோய்கள் தமிழ்நாடு முழுவதும் தொடர்ந்து பரவி வருவதைச் சுட்டிக்காட்டிய நீதிபதி, "இதுபோன்று புதிது புதிதாக வைரஸ் நோய்கள் பரவுவதற்கான காரணத்தை மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகளால் கண்டுபிடிக்க முடியவில்லை" என்றும் தெரிவித்தார்.

மருந்து நிறுவனங்கள் - சந்தேகம்
மேலும், இதுபோன்ற நோய்கள் திட்டமிட்டு பரப்பப்படுவதாக மக்கள் மத்தியில் சந்தேகம் உள்ளதாகக் குறிப்பிட்ட நீதிபதி, மருந்து நிறுவனங்கள் இச்செயலில் ஈடுபடுகின்றனவா என்பதை விசாரிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளார். மருந்து நிறுவனங்களின் செயல்பாடுகளை அரசு கண்காணிக்கிறதா எனக் கேள்வி எழுப்பிய நீதிபதி, புதிது புதிதாக வைரஸ் நோய்கள் பரவுவதற்கான காரணங்களை தெரிவிக்க தமிழக அரசுக்கு நீதிபதி உத்தரவிட்டார். மருந்து நிறுவனங்களின் செயல்பாடுகள் குறித்தும் விசாரித்து அறிக்கை அளிக்க அறிவுறுத்திய நீதிபதி, வழக்கின் விசாரணையை அக்டோபர் 27-ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications