ஜஸ்ட் 18 மணி நேரம்தான்.. அண்ணாமலைக்கு பறந்த தலைவர் "போஸ்டிங்".. பக்கா பிளான்.. என்ன நடந்தது?
சென்னை: தமிழ்நாடு பாஜக தலைவராக அண்ணாமலை நியமனம் செய்யப்பட்டுள்ளார். எல். முருகன் மத்திய இணை அமைச்சர் ஆன மறுநாளே அண்ணாமலை தலைவராகி உள்ளார்.
Recommended Video
தமிழ்நாடு பாஜக தலைவராக இருந்த எல். முருகன் நேற்று மத்திய இணை அமைச்சர் ஆனார். எல். முருகனுக்கு மீன்வளத்துறை மற்றும் விலங்குகள் நலத்துறை & தகவல் ஒளிபரப்புத் துறையின் இணை அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் பாஜக கட்சி விதிப்படி ஒரு நபர் கட்சியில், ஆட்சியில் ஒரு பொறுப்பில் மட்டுமே இருக்க முடியும். அமைச்சராக இருக்கும் நபர் கட்சியிலும் உயர் பதவியை வகிக்க முடியாது.

தலைவர்
இதனால் தமிழ்நாடு பாஜக தலைவர் எல். முருகனின் பதவி வேறு யாருக்காவது கொடுக்கப்பட வேண்டிய கட்டாயம் இருந்தது. தமிழ்நாடு பாஜகவில் பல மூத்த உறுப்பினர்கள் உள்ளனர். எச். ராஜா, பொன். ராதாகிருஷ்னண், நயினார் நாகேந்திரன், சிபி ராதாகிருஷ்னன், இல கணேசன் ஆகியோர் இருக்கிறார்கள். இவர்களில் யாருக்காவது தலைவர் பதவி கிடைக்கலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது.

சீனியர்கள்
சீனியர்கள், கட்சியில் பல காலமாக இருக்கிறார்கள் என்பதால் இவர்களுக்கு தலைவர் பதவி கிடைக்கலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. முக்கியமாக இல கணேசன் அல்லது நயினார் நாகேந்திரன் இரண்டு பேரில் ஒருவருக்கு உயர் பதவி அழைக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. மாறாக தமிழ்நாடு பாஜக தலைவராக அண்ணாமலை நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

18 மணி நேரம்
நேற்று எல். முருகன் மத்திய அமைச்சராக அறிவிக்கப்பட்டு 18 மணி நேர இடைவெளியில் இன்று தமிழ்நாடு பாஜகவின் புதிய தலைவராக அண்ணாமலை நியமிக்கப்பட்டுள்ளார். துணை தலைவராக இருந்தவர் தற்போது தலைவர் ஆகியுள்ளார். கர்நாடகாவில் ஐபிஎஸ் அதிகாரியாக இருந்தவரை தமிழ்நாடு பாஜக அரசியலுக்கு கொண்டு வந்த போதே இவருக்கு உயர் பொறுப்புகள் வழங்கப்படும் என்று கூறப்பட்டது.

உயர் பொறுப்பு
இவரை கடந்த தேர்தலில் பாஜக முதல்வர் வேட்பாளராக அறிவிக்க கூட வாய்ப்பு இருப்பதாக பேசப்பட்டது. தமிழ்நாட்டில் அண்ணாமலையை கட்சியின் முக்கிய எதிர்காலமாக அந்த கட்சி முன்னிறுத்த பார்க்கிறது. ஆனால் மக்கள் மத்தியில் இவருக்கு எதிர்பார்த்த வரவேற்பு இல்லாத நிலையில் சட்டசபை தொகுதியிலும் அரவக்குறிச்சியில் தோல்வி அடைந்தார்.

இளைஞர்
இந்த நிலையில் தற்போது இளைஞர், துடிப்பானவர் என்பதால் அண்ணாமலைக்கு தலைவர் பதவி சென்றுள்ளது. தமிழ்நாட்டில் கட்சியை பலப்படுத்தும், புதிய பாதைக்கு கொண்டு செல்லும் நடவடிக்கையாக இது பார்க்கப்படுகிறது. சீனியர்கள் இருக்கும் போது இளைஞர் அண்ணாமலையை தேசிய தலைமை இதற்காகவே தேர்வு செய்ததாக கூறப்படுகிறது.

ஆதரவு
அதேபோல் சீனியர் தலைவர்களில் யாரை தலைவர் ஆக்கினாலும் பெரிதாக கட்சியில் மாற்றம் இருக்காது என்று தேசிய தலைமை கருதுகிறது. மூத்தவர்கள் யார் வந்தாலும் அதே நிலைமைதான் நீடிக்கும். அதனால் அண்ணாமலையை களமிறக்க அக்கட்சி முடிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
-
Delimitation: கழன்றுக்கொண்ட திமுக.. காணாமல் போகும் இந்தியா கூட்டணி? பாஜக போடும் பலே பிளான்! -
“வெறும் காகிதத்தில் மட்டுமே 717 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதா?”.. முதல்வர் விஜய்க்கு பாஜக கேள்வி! -
ஓரம்கட்டப்படும் நயினார்.. தமிழக பாஜக தலைவர் ரேஸில் முந்தும் ராம சீனிவாசன்? அடுத்தது என்ன? -
மொத்த பார்முலாவையே மாற்றும் அண்ணாமலை.. இதுவரை இல்லாத புதிய திட்டத்தை கையில் எடுக்கிறாரே.. செம -
நிபா அலர்ட்: வவ்வால்களிடமிருந்து மனிதர்களுக்கு.. எல்லை மாவட்டங்கள் உஷார்! கேரளா மூலம் புது பிரச்சனை -
சலசலப்புகளுக்கு இனி இடமில்லை.. அமித்ஷாவை சந்தித்த தமிழக பாஜக உயர்மட்டக்குழு.. அடுத்தது என்ன? -
முரசொலி நிலம் வழக்கு: “புகார் அளித்தவர் பட்டியலினத்தவர் இல்லை”- ஐகோர்ட்டில் திமுக தரப்பு வைத்த வாதம் -
பூட்டி கிடக்கும் பனையூர் கட்சி ஆபீஸ்! தவெகவில் இணைய காத்துக் கிடக்கும் விஜயதாரணி டூ பாலகங்கா வரை! -
கமலாலயம் டூ பனையூர்.. பாஜகவுக்கு அடுத்த அடி! தவெகவில் ஐக்கியமான முன்னாள் எம்எல்ஏ விஜயதரணி -
வேலைக்காகாத பாஜக மாடல்.. “கழக” பாணியைக் கையிலெடுக்கும் அண்ணாமலை! வேற லெவலாகும் வீ தி லீடர்! -
ரஜினிகாந்த் மருமகனுக்கு பெரிய பொறுப்பு.. அப்படியே தூக்கி கொடுக்கும் அண்ணாமலை! விசாகன் வருவாரா? -
பாஜகவை விட்டு விலகுகிறேன்.. 39 ஆண்டு பயணத்திற்கு முற்றுப்புள்ளி.. காரணம் இதுதான்! நடிகர் பாண்டி ரவி ஆதங்கம்












Click it and Unblock the Notifications