Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தவறுக்கு வருந்துறோம்! பதறிய குரூப் 2, 2A தேர்வர்கள்! TNPSC தேர்வு கடைசி நொடியில் தள்ளிப்போனது எப்படி

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) இன்று, பிப்ரவரி 8, 2026 அன்று நடத்தத் திட்டமிட்டிருந்த குரூப் 2 மற்றும் 2ஏ முதன்மைத் தேர்வுகள் தொழில்நுட்பக் கோளாறுகள் காரணமாகக் கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டுள்ளன. இன்று காலை தேர்வுக் கூடங்களுக்கு வந்த ஆயிரக்கணக்கான தேர்வர்கள், ஹால்கள் ஒதுக்கீடு மற்றும் பதிவு எண்கள் மாறியிருந்தது போன்ற காரணங்களால் கடும் அதிர்ச்சிக்குள்ளாகினர்.

பல மையங்களில் நிலவிய நிர்வாகச் சிக்கல்கள் காரணமாகத் தேர்வாணையம் இந்த இக்கட்டான முடிவை எடுத்துள்ளது. இதற்கு பின் என்ன காரணம் என்று விவரங்கள் வெளியாகி உள்ளது.

Group 2 Exam

ஹால்டிக்கெட்டில் ஏற்பட்ட குளறுபடியால் சாலை மறியலில் ஈடுபட்ட தேர்வர்களிடம் பேசிய டி.என்.பி.எஸ்.சி CEO சண்முகசுந்தரம், மற்ற மாவட்டங்களில் பிரச்சனை இல்லை. சென்னையில் மட்டுமே பிரச்சனை உள்ளது. சென்னையில் சிஎம்சி கல்லூரி, அரும்பாக்கம் சென்டர், நந்தனம் சென்டர் ஆகிய இடங்களுக்கு மட்டும் ஹால்கள் மாறி மாறி வந்துள்ளன.

இது மிகப்பெரிய தவறு.. வருத்தம் தெரிவித்துக்கொள்கிறோம். தமிழ்நாடு முழுக்கவே இதனால் தேர்வை ஒத்தி வைத்துள்ளோம். மாற்று தேதி விரைவில் அறிவிக்கப்படும். இன்று நடைபெறவிருந்த குரூப் 2 மற்றும் 2ஏ முதன்மை தேர்வு ஹால்டிக்கெட்டில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளதால் தேர்வை ரத்து செய்கிறோம். ஒரே நம்பருக்கு இரண்டு சென்டர்கள் வருவது போன்ற தொழில்நுட்ப குளறுபடி ஏற்பட்டு உள்ளது.

நடந்த தவறுக்கு வருந்துகிறோம்... இது ஒரு டெக்னிக்கல் ஃபால்ட்.. தேர்வை தமிழ்நாடு முழுவதும் ஒத்திவைக்கிறோம். தேர்வு நடக்கும் மறு தேதி தேர்வு நடக்கும் நாளுக்கு 15 நாட்களுக்கு முன் அறிவிக்கப்படும். மற்றபடி இரண்டாம் கட்ட தேர்வுகள் குறிப்பிட்ட தேதியில் நடக்கும். இன்றே தேர்வை கடைசி நேரத்தில் திட்டமிட்டு நடத்தி இருக்கலாம். மாணவர்கள் அலைச்சல் காரணமாக தவறுகள் செய்ய கூடாது என்பதால்.. அவர்களின் மனநிலை முக்கியம் என்பதால் தேர்வை தள்ளி வைக்கிறோம், என்று கூறி உள்ளார்.

தேர்வு ரத்து என்ன காரணம்?

சென்னையில் டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2A முதன்மை தேர்வு, அரும்பாக்கத்தில் உள்ள தேர்வு மையத்தில் ஹால் டிக்கெட் குளறுபடி ஏற்பட்டதுதான் பிரச்சனையின் தொடக்கம். தேர்வு எழுத இடம் ஒதுக்கப்படாததால் மாணவர்கள் பலரும் அதிர்ச்சி அடைந்தனர். நந்தனத்தில் தான் இருக்கை ஒதுக்கீடு என கூறி அவர்கள் வெளியே அனுப்பப்பட்டதால் தேர்வர்கள் சாலை மறியல் போராட்டம் செய்தனர்.

பூந்தமல்லி நெடுஞ்சாலையில் அமர்ந்து தேர்வு மைய அதிகாரிகளுடன் 700க்கும் மேற்பட்ட தேர்வர்கள் கடும் வாக்குவாதம் செய்தனர். இதையடுத்து சென்னை முழுக்க பிரச்சனை இருப்பது தெரிந்ததால்.. தமிழ்நாடு முழுக்க தேர்வு ரத்தானது.

டிஎன்பிஎஸ்சி குரூப் 2 முதன்மைத் தேர்வு 2026 கால அட்டவணை மற்றும் தற்போதைய நிலை
முன்னதாக அறிவிக்கப்பட்ட அட்டவணையின்படி, இன்று பிப்ரவரி 8-ஆம் தேதி மதிய அமர்வில் கட்டாயத் தமிழ் மொழித் தகுதித் தேர்வும் (தாள் I), பிப்ரவரி 22-ஆம் தேதி பொது அறிவுத் தேர்வும் (தாள் II) நடைபெறுவதாக இருந்தது. இருப்பினும், இன்றைய குளறுபடிகள் காரணமாக முதல் தேர்வு மட்டும் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தேர்வுக்கான புதிய தேதிகள் குறித்து டிஎன்பிஎஸ்சி அடுத்த இரண்டு வாரங்களுக்குள் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

குரூப் 2 முதன்மைத் தேர்வின் முக்கியத்துவம்

குரூப் 2 தேர்வு முறையில் முதன்மைத் தேர்வு மிகவும் முக்கியமானது. இது விரிவாக விடையளிக்கும் (Descriptive Type) முறையைக் கொண்டது. தேர்வர்களின் எழுத்துத் திறன், நிர்வாகத் திறன், மற்றும் ஒரு கருத்தைப் பகுப்பாய்வு செய்யும் ஆற்றல் ஆகியவற்றைச் சோதிக்கும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, இரண்டாம் தாளில் (பொது அறிவு) பெறும் மதிப்பெண்களே ஒரு விண்ணப்பதாரரின் இறுதித் தரவரிசையையும், அவர்களுக்குக் கிடைக்கப்போகும் பதவியையும் தீர்மானிக்கின்றன.

டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு முறை 2025

டிஎன்பிஎஸ்சி குரூப் 2 ஆட்சேர்ப்பு செயல்முறை பல நிலைகளைக் கொண்டது. முதலில் கொள்குறி வகை (Objective) முறையில் முதல்நிலைத் தேர்வு (Prelims) நடத்தப்பட்டது. அதில் தகுதி பெற்றவர்கள் இப்போது முதன்மைத் தேர்விற்குத் தயாராகி வருகின்றனர். முதன்மைத் தேர்வைத் தொடர்ந்து சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் சில குறிப்பிட்ட பதவிகளுக்கு நேர்முகத் தேர்வு (Interview) நடைபெறும். இறுதியாகக் கலந்தாய்வு மூலம் தகுதியான நபர்களுக்கு அரசுப் பணிகள் ஒதுக்கப்படும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+