"மயான அமைதி".. பெருத்த மெளனம் காக்கும் மக்கள்.. மாறும் "தலையெழுத்து".. யார் மனசுல யாரு!
வாக்காளர்களின் மனநிலை தற்போது அமைதியாக உள்ளது
சென்னை: புயல் வேகப் பிரசாரம் முடிந்து விட்ட நிலையில் பெருத்த அமைதி காக்கிறது தமிழகம். வாக்காளர்கள் நாளை என்ன முடிவு எடுக்க போகிறார்களோ என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. கட்சிகளும் பதட்டமாகவே உள்ளன.
இந்த தேர்தல் யாருக்கு முக்கியம் என்று திட்டமிட்டு சொல்ல முடியவில்லை.. ஆட்சியை தக்க வைக்க எடப்பாடி பழனிசாமி அரசு போராடி வருகிறது.. ஆட்சியை பிடிக்க திமுக தரப்பு தீவிரம் காட்டி வருகிறது.
இந்தத் தேர்தலில் திமுக தலைமையில் ஒரு கூட்டணியும், அதிமுக தலைமையில் இன்னொரு கூட்டணியும் எதிரெதிர் நிற்கின்றன. மறுபக்கம் நாம் தமிழர் கட்சியும், மக்கள் நீதி மய்யமும் தனி அணிகளாக களம் கண்டுள்ளன.

அதிமுக
திமுகவை எடுத்து கொண்டால், கடந்த முறையே நூலிழையில் ஆட்சியை தவறவிட்ட ஆதங்கம் நிரம்பி கிடக்கிறது.. அதனால்தான், இந்த முறை பார்த்து பார்த்து கூட்டணி + சீட் பேசப்பட்டது.. 3 மாத காலமாக திமுக கூட்டணி குறித்து எத்தனையோ சலசலப்புகள் வந்தாலும், கடைசியில் ஒருத்தரையும் கூட்டணியை விட்டு போகாமல் அதேசமயம், புதிதாக வேறு சில கட்சிகளை இணைத்து கொண்டு ஸ்டாலின் களம் காணுவது முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

தினகரன்
இன்னொரு பக்கம் அமமுக தலைமையில் மற்றொரு கூட்டணியும் களம் கண்டுள்ளது. இந்த முறை ஐந்து முனை போட்டியை கட்சிகள் கண்டுள்ளன. இதனால் பெருமளவில் வாக்குகள் பிரியும் என்ற பேச்சும் உள்ளது. கடந்த பல நாட்களாக தமிழகம் முழுவதும் சூடு பறக்க தேர்தல் பிரச்சாரம் நடந்து வந்தது. நேற்று மாலையுடன் அது ஓய்ந்து விட்டது.

ஆர்வம்
மக்கள் இந்தப் பிரச்சாரத்தை ரொம்பவே ரசித்துப் பார்த்தனர். காரணம் இதுவரை இல்லாத சுவாரஸ்யத்துடன் கூடியதாக இந்த பிரச்சாரம் இருந்ததால். ஒவ்வொரு கட்சியும் டிசைன் டிசைனாக மக்களைக் கவர முயற்சித்ததை மொத்த மாநிலமும் ஆர்வத்துடன் பார்த்தது.

வாக்காளர்கள்
எல்லா கட்சிகளின் அனல் பறக்கும் பிரச்சாரமும் நேற்று முடிந்துவிட்ட நிலையில், இன்று எந்த வகையிலான பிரசார நடவடிக்கையிலோ, ஓட்டு கேட்டு வாக்காளர்களை ஈர்க்கும் வகையிலோ, வேட்பாளர்களோ அல்லது கட்சியினரோ ஈடுபடக்கூடாது என்று தேர்தல் கமிஷன் எச்சரித்துள்ள நிலையில், வாக்காளர்களிடம் ஒரு அமைதி சூழ்ந்துள்ளது.. வாக்காளர்களின் இந்த அமைதியான மனநிலையை தங்கள் ஓட்டுக்கான ஆயுதமாக்குவதற்கான முழு பிரசாரத்தையும் சில கட்சியினர் மேற்கொள்ள உள்ளதாகவும் கூறப்படுகிறது.

அனுமானம்
இதற்கு காரணம், பிரச்சாரங்கள் ஓய்ந்த நிலையில், இன்றைய தினம்தான், நாளைக்கு யாருக்கு ஓட்டு போடலாம் என்று மக்கள் ஒரு அனுமானத்தில் இருப்பார்கள்.. வாக்காளர்களுக்கு யோசிக்க கிடைத்த நல்ல வாய்ப்பு இது.. எனவே நாளை தாங்கள் அளிக்கப் போகும் தீர்ப்புக்காக மக்கள் ஆர்வத்தோடு காத்துள்ளனர். இன்றைய ஒருபொழுது ஓட்டிவிட்டால், விடிந்ததும் தமிழகத்தின் தலையெழுத்து மாற்றி எழுதப்படும்.. பார்ப்போம்..மக்கள் தீர்ப்பு யார் பக்கம் என்பதை!
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications