தமிழகத்தில் அடிக்கடி சிறிய அளவில் பவர் கட் .. என்ன காரணம் தெரியுமா? அமைச்சர் அளித்த பதில்
சென்னை: தமிழகத்தில் அண்மைக்காலமாக அடிக்கடி சிறிய அளவில் மின் தடை ஏற்படும். மின்சாரம் போன சில நிமிடங்களிலேயே வந்துவிடும். சில இடங்களில் அரை மணி நேரம் வரை கூட ஆகும். இப்படியான மின் தடைக்கு என்ன காரணம் அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கி உள்ளார்.
தமிழகத்தில் மின்தடை என்பது தற்போது பெரிய அளவில் இல்லை. ஆனால் எல்லா ஊர்களிலுமே அண்மைக்காலமாக சிறிய அளவில் தினசரி மின் தடை இருந்து வருகிறது.
திடீரென 5 நிமிடம் அல்லது 10 நிமிடம் போகும் மின்சாரம் அதன்பிறகு வந்துவிடும். இப்படி மின்சாரம் திடிரென கட்டாகும் சம்பவங்கள் அண்மைக்காலங்களில் அதிமாகி உள்ளது.

ஏன் நிறுத்தம்
ஊரடங்கால் வீடுகளில் முடங்கி உள்ள மக்கள், இந்த மின் தடைக்கு என்ன காரணம் என்று தெரியாமல் தவித்து இருப்பார்கள். இதற்கு காரணம் மின் கம்பங்களில் பாராமரிப்பு பணி என்று ஒற்றை வார்த்தையில் மின்வாரியம் கூறியிருக்கும். ஆம், சில இடங்களில் ஏற்பட்ட பழுதை நீக்க, அவ்வப்போது மின்சாரம் நிறுத்தப்படும். இது எல்லா காலங்களிலும் உள்ள நடைமுறை தான்,

பராமரிப்பு காரணம்
ஆனால் அண்மைக்காலத்தில் தினசரி மின்தடை சிறிய அளவில் ஏற்படுகிறது. இதற்கான காரணத்தை தமிழ்நாடு மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி விளக்கி உள்ளார்,. டிசம்பர் 2020 முதல் ஆறு மாத காலமாக எந்தவித பராமரிப்புப் பணிகளும் மேற்கொள்ளப்படாததால், ஆங்காங்கே மின்தடை ஏற்பட்டது. தற்பொழுது மிகவும் அவசியமான தவிர்க்க முடியாத பராமரிப்புப் பணிகள் மட்டும் போர்க்கால அடிப்படையில் செய்யப்பட்டு வருகிறது என்று கூறியுள்ளார்,

அடிக்கடி பவர் கட்
அதாவது கடந்த 7 மாதங்களாகவே தமிழகத்தில் மின்சார வாரியம் பராமரிப்பு பணிகளை பெரும்பாலான பகுதிகளில் மேற்கொள்ளவில்லை. மாதத்தில் ஒரு நாள் காலை முதல் மாலை வரை மின் தடையை நாம் சந்தித்து இருப்போம். அப்படியான மின் தடையை நாம் கடந்த 6 மாதத்தில் சந்தித்து இருக்க வாய்ப்பு இல்லை. இதற்கு காரணம் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளாதது தான். அதேபோல் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளதால் சிறிய பழுதுகள் அவ்வப்போது ஏற்படுவதால் இப்போது அடிக்கடி பவர் கட் ஏற்படுகிறது

செந்தில் பாலாஜி தகவல்
மிகவும் அவசியமான தவிர்க்க முடியாத பராமரிப்புப் பணிகள் மட்டும் கடந்த ஆறு மாதங்களாக செய்யப்படுகிறது. ஊரடங்கு முடியும் வரை பராமபரிப்பு பணிகளுக்கு அனுமதி தருவது தற்காலிமாக நிறுத்தப்படுவதாக அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவித்துள்ளார். எனவே தீவிர ஊரடங்கு முடியும் காலம் வரை மின் தடை தமிழகத்தில் ஏற்படாது என்று அரசு உறுதி தெரிவித்துள்ளது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications