ஒரு ஐஏஎஸ் அதிகாரியின் சம்பளம் எவ்வளவு? வீடு முதல் மின்சாரம் வரை வேறு என்ன சலுகைகள் எல்லாம் கிடைக்கும்
சென்னை: நமது நாட்டில் ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் உள்ளிட்ட உயர் பதவிகளில் இருப்போருக்குச் சம்பளம் எவ்வளவு கிடைக்கும் என்ற கேள்வி பலருக்கும் இருக்கும்.. மத்திய ஊதிய குழு அவர்களுக்கு முன்மொழிந்துள்ள ஊதியம் குறித்த தகவல்களைப் பார்க்கலாம்.
நமது நாட்டின் யுபிஎஸ்சி தேர்வு முடிவுகள் சமீபத்தில் வெளியானது. இதில் மொத்தம் 1016 பேர் தேர்ச்சி பெற்றுள்ள நிலையில், அதில் ஆதித்ய ஸ்ரீவஸ்தவா என்பவர் முதல் இடத்தை பிடித்துள்ளார். அவர்களில் 664 பேர் ஆண்கள் மற்றும் 352 பெண்கள் ஆவர்.

அதேநேரம் நம்மில் பலருக்கும் இதுபோன்ற ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு எந்தளவுக்கு ஊதியம் இருக்கும் என்ற சந்தேகம் இருக்கும். அது குறித்து நாம் பார்க்கலாம்.
சம்பளம்: ஐஏஎஸ் உள்ளிட்ட குடிமைப் பணிகளுக்கான ஊதிய கட்டமைப்பை 7ஆவது மத்திய ஊதியக் குழு மறுசீரமைத்துள்ளது. இதில் பே கிரேட் முறைக்குப் பதிலாக பே லெவல்கள் முறை முன்மொழியப்பட்டுள்ளன. சரி நமது நாட்டில் ஐஏஎஸ் அதிகாரிகள் எந்தளவுக்கு ஊதியம் பெறுகிறார்கள்.. ஒவ்வொரு பே லெவலுக்கும் ஊதியம் எந்தளவுக்குக் கிடைக்கிறது என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
சீனியாரிட்டி மற்றும் ஒருவர் இருக்கும் பதவியின் அடிப்படையில் ஊதியத்தில் மாற்றங்கள் வரும்.. அடிப்படையில் ஒரு ஐஏஎஸ் அதிகாரியின் சம்பளம் மாதம் ரூ.56,100ஆக உள்ளது. சர்வீஸ் அதிகரிக்கும் போது அவர்களின் உயர் பதவிகளுக்குச் செல்வார்கள். அப்போது அவர்களின் அடிப்படை ஊதியம், அலவுன்ஸ் அதிகரிக்கும்.. உதாரணமாக, ஐஏஎஸ் அதிகாரி ஒருவரால் அதிகபட்சம் இந்திய கேபினட் செயலாளர் பொறுப்பு வரை செல்ல முடியும். அப்போது அவர்களுக்கு ரூ.2.5 லட்சம் வரை சம்பளம் கிடைக்கும்.
அடிப்படை ஊதியம்: பொதுவாக ஐஏஎஸ் அதிகாரிகள் சப்-டிவிஷனல் மாஜிஸ்திரேட் உள்ளிட்ட லெவல் 10 பதவிகளில் இருந்தே தங்கள் கேரியரை தொடங்குவார்கள். அவர்கள் மெல்லப் பதவி உயர்வைப் பெற்று அதிகபட்சம் லெவல் 18இல் இருக்கும் கேபினட் செயலர் பதவிக்கு வரலாம்.
லெவல் 10இல் இருக்கும் ஒரு ஐஏஎஸ் அதிகாரியின் அடிப்படை ஊதியம் மாதம் ரூ.56,100இல் தொடங்குகிறது. பொதுவாக ஒருவர் தங்கள் கேரியரின் முதல் நான்கு வருடங்கள் இந்த பே லெவலில் இருப்பார்கள்.
அடுத்தகட்டம்: அதற்கு அடுத்துக் கூடுதல் மாவட்ட மாஜிஸ்திரேட் உள்ளிட்ட லெவல் 11-13 பதவிகளில் இருப்போருக்கு அடிப்படை ஊதியம் ரூ.67,700இல் தொடங்கும்.. இதில் அவர்கள் அதிகபட்சம் 1,18,500 ரூபாய் வரை ஊதியம் கிடைக்கும். அடுத்த கட்டமாகக் கூடுதல் மாவட்ட மாஜிஸ்திரேட் உள்ளிட்ட பதவிகளைக் கொண்ட லெவல் 14-15இல் இருப்போருக்கு அடிப்படை ஊதியம் ரூ.1,44,200இல் இருந்து தொடங்குகிறது. இதில் முதன்மைச் செயலாளர் மற்றும் கூடுதல் செயலாளர் போன்ற லெவல் 15இல் இருப்போருக்கு ரூ.1,82,200 அடிப்படை ஊதியமாகக் கிடைக்கும்.
அதிகபட்ச சம்பளம் எவ்வளவு: அடுத்துக் கூடுதல் தலைமைச் செயலாளர் உள்ளிட்ட பதவிகளைக் கொண்ட லெவல் 16இல் அடிப்படை ஊதியமாக ரூ. 2,05,400 கிடைக்கிறது. தலைமைச் செயலாளர் உள்ளிட்ட உச்சபட்ச பதவிகளைக் கொண்ட லெவல் 17 மற்றும் 18இல் ஒருவருக்கு ரூ.2,25,000 மற்றும் ரூ.2,50,000 வரை ஊதியமாகக் கிடைக்கும்.
சலுகைகள்: மேலும் ஒரு ஐஏஎஸ் அதிகாரிக்கு வீட்டில் காவலர்களும், 2 தனிப்பட்ட காவலர்கள் என மொத்தம் 5 பேர் பாதுகாப்பிற்கு வழங்கப்படுவார்கள்.. அவர்களின் உயிருக்கு அச்சுறுத்தல் இருந்தால் ஸ்பெஷல் டாஸ்க் போர்ஸ் பணி அமர்த்தப்படுவார்கள். மேலும் அவர்களின் பதவி, ஊதியம் மற்றும் சீனியாரிட்டி அடிப்படையில் பங்களாக்கள் ஒதுக்கப்படும். அதில் சில குறிப்பிட்ட ஊழியர்களையும் பணி அமர்த்திக்கொள்ளலாம்.
ஐஏஎஸ் அதிகாரி அதிகாரப்பூர்வ பயணமாகச் சென்றாலும் சரி தனிப்பட்ட பயணமாகச் சென்றாலும் சரி அவர்கள் வெளியூர்களில் அரசு குடியிருப்புகள் அல்லது விருந்தினர் மாளிகைகளை இலவசமாகப் பயன்படுத்தலாம். மேலும், அதிகாரப்பூர்வ இல்லத்தில் அவர்கள் மின்சார கட்டணத்தைச் செலுத்தத் தேவையில்லை. மேலும், அதிகாரப்பூர்வ பணிகளுக்குப் பயன்படுத்த கார்களும் வழங்கப்படும்.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
கும்கி படம் எடுத்த தேனி கொட்டக்குடி கிராமத்தின் 56 வருட கனவு.. நிறைவேற்றிய தமிழக அரசு -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு












Click it and Unblock the Notifications