தான செட்டில்மெண்ட்.. பத்திரப்பதிவு கட்டணம் திரும்ப பெறப்படுகிறதா? தமிழக அரசு விரைவில் நல்ல முடிவு?
சென்னை: தமிழகத்தில் உயர்த்தப்பட்ட பத்திரப்பதிவு கட்டணத்தை திரும்ப பெற வேண்டும் என்றும், மீண்டும் பழைய கட்டணத்தையே அமல்படுத்த வேண்டும் என்றும் கோரிக்கைகள் வெடிக்க ஆரம்பித்துள்ளன.
தமிழ்நாட்டில் பல காலமாகப் பதிவுத்துறைக்கான கட்டணம் உயர்த்தப்படாமலேயே இருந்த நிலையில், கடந்த 10ம் தேதி தான் கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளன.

பொது அதிகாரம், செட்டில்மென்ட், பாகப்பிரிவினை, கட்டுமான ஒப்பந்தம் போன்ற பத்திரங்களின் பதிவு கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளன. இந்த கட்டண உயர்வு, பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி வருகிறது...
செட்டில்மென்ட் பத்திரம்: காரணம், இந்த கட்டண உயர்வால், புதிதாக வீடு வாங்க நினைப்பவர்களுக்கு ஒருவித தயக்கம் ஏற்படும் என்றும், அதிலும், செட்டில்மென்ட் பத்திரத்தை பதிவு செய்ய, 10,000 ரூபாய் செலுத்த வேண்டும் என்பது, வெகுஜன மக்களை கடுமையாக பாதிக்கும் என்பதால், செட்டில்மென்ட் பத்திரத்துக்கான கட்டண உயர்வை பழைய நிலைக்கே அரசு கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்து வருகின்றன.
அதுமட்டுமல்லாமல், கட்டுமான ஒப்பந்த பதிவுக்கு, ஏற்கனவே 1 சதவீதம் கட்டணம் இருந்த நிலையில், இப்போது 3 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது... இதே போன்று, பொது அதிகார பதிவுக்கு 1 சதவீதம் கட்டணம் செலுத்த வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது. இவைகளுடன் பிற கட்டணங்களையும் சேர்த்தால், சொத்தின் மதிப்பில், 4 சதவீதத்தை கூடுதலாக செலவிட வேண்டி வருகிறது..
தவிரவும், நிலத்துக்கு மட்டுமே வழிகாட்டி மதிப்பு இருக்கும் நிலையில், கட்டடத்துக்கான மதிப்பை எப்படி கணக்கிடுவது என்பதில் குழப்பமும் ஏற்பட்டுள்ளதால், இந்த கட்டண உயர்வை, திரும்ப பெற அரசை வலியுத்த வேண்டும் என்ற கோரிக்கைகளும் வெடித்து கிளம்பி உள்ளன.
பிஏஐ மனு: இப்படிப்பட்ட சூழலில், பொது அதிகார ஆவண பதிவு கட்டணத்தை குறைக்க வேண்டும் என்று பிஏஐ எனப்படும் இந்திய கட்டுனர் வல்லுனர் சங்கத்தின் தென்னக மையம், முதல்வர் ஸ்டாலினுக்கு மனு ஒன்றையும் அனுப்பியிருந்தது. அதில், 6 மாதம் முதல் ஒரு வருடத்துக்கு மட்டுமே பொது அதிகார ஆவணம் பயன்படுத்தப்படுகிறது. இதற்கு சொத்தின் மதிப்பில் ஒரு சதவீதத்தை கட்டணமாக வசூலிப்பதால் வீடு விற்பனையில் தொய்வு ஏற்படும் என்றும் சுட்டிக்காட்டியிருந்தது.
இந்நிலையில், ரியல் எஸ்டேட்கள் தரப்பில் இருந்தும் கோரிக்கைகள் வெடித்துள்ளன.. இந்திய ரியல் எஸ்டேட் மேம்பாட்டாளர்கள் சங்க கூட்டமைப்பான, "கிரெடாய்" நிர்வாகிகள், கட்டண உயர்வை குறைக்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலினுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
அடுத்த கோரிக்கை: இதுகுறித்து, கிரெடாய் அமைப்பு நிர்வாகிகள் ஒரு சேனலுக்கு அளித்த பேட்டியில் சொல்லும்போது, புதிய கட்டணங்களை அமல்படுத்துவதற்கான கால அவகாசம் கூட தரப்படவில்லை.. பொது அதிகாரம், கட்டுமான ஒப்பந்த கட்டணங்கள் உயர்வால், 50 லட்சம் ரூபாய்க்குள் வீடு வாங்கும் மக்களுக்கு, 1.25 லட்சம் ரூபாய் கூடுதலாக செலவு ஏற்படுகிறது.
ஏற்கனவே கொரோனா பிரச்சனை, கட்டுமான பொருட்கள் உயர்வு பிரச்சனைகளில் இருந்து மீண்டு வரும் ரியல் எஸ்டேட் துறைக்கு, அரசின் கட்டண உயர்வானது மிகப்பெரிய பின்னடைவாக உள்ளது.. இதனால், வீடு வாங்க முன்பணம் கொடுக்கும் நிலையில் இருந்த 25 சதவீதம் பேர், தங்களது முடிவையும் தள்ளி வைத்துள்ளனர். இந்த கட்டண உயர்வால், வீடு வாங்குவோருக்கு கடுமையான சுமை ஏற்பட்டுள்ளதால், கட்டண உயர்வை மறுபரிசீலனை செய்யுமாறு முதல்வரிடம் மனு தந்துள்ளோம்" என்கிறார்கள்.
கட்டணம் குறையுமா?: நாலாபக்கமிருந்தும், கட்ட உணர்வை குறைக்க வேண்டும், முன்பிருந்த பழையே நிலைமையே கொண்டுவரப்பட வேண்டும் என்று கோரிக்கைகள் வலுத்து வருவதால், தமிழக அரசு கட்டண உயர்வு வாபஸ் குறித்து பரிசீலிக்கும் என்றும் நம்பப்படுகிறது.
-
கடலூரில் நாளை விஜய் பிரச்சாரத்தால் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரத்திற்கு அனுமதி மறுப்பு.. நடந்தது என்ன? -
அமெரிக்காவை அலறவிட்ட பிரான்ஸ்! 129 டன் தங்கத்தை மீட்க "கோல்டன்" ஸ்கெட்ச்.. அப்போ இந்தியா பிளான் என்ன -
சிறகடிக்க ஆசை: விஜயாவின் மாற்றம்! முத்து, மீனாவை பெருமையாக பேசுறாங்களே! குடும்பத்தில் கொண்டாட்டம் -
ரஷ்யா மாஸ்டர் பிளான்: இந்தியாவுக்கு ஜாக்பாட்.. சீனா உதவி.. ஒன்று கூடிய BRICS நாடுகளால் டிரம்ப் ஷாக்! -
மொத்தமாக மாறிய டிரம்ப்.. ஈரான் விஷயத்தில் தொனியை மாற்றிய அமெரிக்க அதிபர்.. அடேங்கப்பா! -
2 வெர்ஷன்.. ஜனநாயகன் படம் இணையத்தில் லீக்கானது எப்படி? அதிகம் பலன் அடைவது யார்? அந்த மர்ம கை -
23000 ஊழியர்களை பணிநீக்கம் செய்த பின்பும்.. டிசிஎஸ் நிறுவனத்தில் கட்டுப்படுத்த முடியாத செலவு! -
லீக் ஆன ஜனநாயகன்.. நானே ரீலிஸ் பண்ணித்தரேன்னு சொன்னேனே விஜய்.. விட்டு விளாசிய சாட்டை! -
செந்தில் பாலாஜி பெயரை சொல்லும்போது ‘டங் ஸ்லிப்’.. கோவை தெற்கில் உளறிய பியூஷ் கோயல் -
மும்பை ரெஸ்டாரண்டில் நடந்த சந்திப்பு.. சமாதானமான ஸ்மிருதி மந்தனா குடும்பம்.. மீண்டும் திருமணம்? -
ஜனநாயகன் ரூ.500 கோடி பட்ஜெட் படம்! HD பிரிண்ட்டில் வெளியானது எப்படி? தமிழக டிஜிபியிடம் புகார் -
நம்பர் 5.. அடித்து சொல்லும் சர்வேக்கள்! திமுக+ 180 இடங்களை தாண்டுகிறது! அதிமுக ஓவர்? முக்கிய கணிப்பு












Click it and Unblock the Notifications