கோட்டையில் பரபரப்பு.. அடித்து ஆடிய எடப்பாடி.. வெளுத்து கட்டும் ஸ்டாலின்.. அதிகாரிகளுடன் திடீர் ஆய்வு
முதல்வர் ஸ்டாலின் இன்று அரசின் திட்டங்கள் குறித்து ஆய்வு செய்கிறார்
சென்னை: அரசின் திட்டங்கள் மற்றும் சட்டப்பேரவை அறிவிப்புகள் குறித்து முதல்வர் ஸ்டாலின் இன்று ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.. இதனால் கோட்டையே பரபரப்பாக காணப்படுகிறது.
திமுக அரசு ஆட்சி பொறுப்பேற்று முதல் வருடத்தை நிறைவு செய்துள்ளது.. இந்த ஒரு வருடத்தில் முதல் 3 மாதங்கள் கொரோனா பாதிப்புகளை சரிசெய்வதிலேயே கழிந்தது..
அடுத்ததாக 2 மாதங்கள் மழை, வெள்ள பாதிப்புகளை சீர் செய்வதிலேயே கழிந்தது.. இப்படியே 5 மாதங்கள் ஓடிவிட்டது..

சக்ஸஸ் அறிவிப்புகள்
மீதமுள்ள மாதங்களில்தான் திமுக மக்களுக்கான அறிவிப்புகளையும், தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற எடுத்து கொண்ட முயற்சிகளையும் கவனத்தில் கொள்ள வேண்டி உள்ளது. அந்தவகையில், தேர்தல் அறிக்கையில் திமுக சொன்னதில் பெண்களுக்கான இலவச பேருந்து பயணம், மக்களைத்தேடி மருத்துவம், இல்லம் தேடி கல்வி போன்ற திட்டங்கள் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றன.. பயிர்க்கடன், நகைக்கடன், மகளிர் சுய உதவிக்குழு கடன் தள்ளுபடி, கிராமப்புற சாலைகள் அமைத்தல் போன்ற திட்டங்களும் சிறப்பாக அமைந்தன..

எடப்பாடி பழனிசாமி
ஆனாலும், எதிர்க்கட்சிகள் திமுகவை சரமாரியாக விமர்சித்து கொண்டே இருக்கிறது.. அதிலும் எடப்பாடி பழனிசாமி, தினமும் ஏதாவது ஒரு குற்றச்சாட்டை திமுக அரசு மீது செலுத்தியபடியே உள்ளார்.. "மக்களுக்கு வாழ்வளிக்கும் திட்டம் எதுவுமே இதுவரை நடைபெறவில்லை. சொத்து வரி உயர்வால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.. பெரிய துரோகம் இது.. சட்டமன்ற தேர்தலின் போது திமுக சார்பில் 500க்கு மேற்பட்ட வாக்குறுதிகளை அதில், ஒன்றிரண்டை மட்டும் நிறைவேற்றினர்.. ஆனால், 70 சதவீதம் வாக்குறுதிகளை நிறைவேற்றியதாக பொய்யாக செய்தியை பரப்பி வருகின்றனர்... சட்டம் ஒழுங்கும் சரியில்லை" என்று விடாமல் குறை கூறி வருகிறார்.

புள்ளிவிவரங்கள்
இன்றைய தின கூட்டத்தில், அனைத்து துறை செயலர்களும், துறை சார்ந்த திட்டங்களின் நிலை குறித்து வீடியோ தொகுப்பு மூலம் விளக்கி கொண்டுள்ளனர்.. அவர்களிடம் பல்வேறு கேள்விகளை முதல்வர் எழுப்பியும் வருகிறார்.. இதனால், அதிகாரிகள் வெலவெலத்து போயுள்ளனர்.. முதல்வரின் இந்த அதிரடி ஆய்வினால், கோட்டையே பரபரத்து காணப்படுகிறது.

நேரடி ஆய்வு
இதில், அரசு அறிவித்த திட்டங்களின் நிலவரம், சட்டப் பேரவை அறிவிப்புகள் ஆகியவற்றின் நிலை குறித்து முதல்வர் ஆய்வு செய்து வருகிறார்.. முதல்நாளான இன்று, அமலாக்கத்துறை மூலம் நடத்தப்படும் ஆய்வுக் கூட்டத்தில், நகராட்சி, நீர்வளம், நெடுஞ்சாலை, பொதுப்பணி, தொழில், மின்சாரம் உள்ளிட்ட துறை செயலாளர்களுடன் கூட்டம் நடந்து வருகிறது.. இதேபோல, கூட்டுறவு மற்றும் உணவு, கல்வி, ஊரக வளர்ச்சி, சமூக நலம் உள்ளிட்ட துறை செயலர்களுடன் நாளை ஆய்வு செய்கிறார்.

கேள்விகள்
இன்றைய தின கூட்டத்தில், அனைத்து துறை செயலர்களும், துறை சார்ந்த திட்டங்களின் நிலை குறித்து வீடியோ தொகுப்பு மூலம் விளக்கி கொண்டுள்ளனர்.. அவர்களிடம் பல்வேறு கேள்விகளை முதல்வர் எழுப்பியும் வருகிறார்.. இதனால், அதிகாரிகள் வெலவெத்து போயுள்ளனர்.. முதல்வரின் இந்த அதிரடி ஆய்வினால், கோட்டையே பரபரத்து காணப்படுகிறது.
-
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
நம்பர் 1 முதல்வர் யார்? டாப் 5 லிஸ்ட்டில் யார் யார்? 1952 ராஜாஜி முதல் 2021 ஸ்டாலின் வரை! -
DMK: 3 அமைச்சர்களுக்கு சீட் இல்லை.. ஸ்டாலின் அறிவித்த திமுக வேட்பாளர் பட்டியலில் ஷாக்! -
பெண்கள், படித்தவர்களுக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்..டாக்டர் பட்டம் பெற்றவர்கள் மட்டும் இத்தனை பேரா? -
Election Exclusive: வரம் கொடுத்த சாமி தலையில் கை வைத்த பிரேமலதா.. திமுக தொகுதிகளை கேட்டு அடம்! குட்டையைக் குழப்பு காங்.! -
கோவையில் 6 சிட்டிங் எம்எல்ஏவுக்கு மீண்டும் வாய்ப்பு.. செங்கோட்டையனை எதிர்த்தவருக்கே வாய்ப்பில்லையா -
ஸ்டாலின் வீட்டில் 3 மணி நேரம் காத்திருந்து! கண்ணீருடன் வெளியேறினார் துரைமுருகன்! வேல்முருகன் பகீர் -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
ஸ்டாலின் கவுன்டவுன் ஸ்டார்ட்.. முன் கூட்டியே தொடங்கும் பிரச்சாரம்.. ஏவப்போகும் அஸ்திரம் -
பூவை ஜெகன்மூர்த்தி கட்சிக்கு 1 தொகுதியை ஒதுக்கியது அதிமுக! மீண்டும் கே.வி.குப்பத்தில் போட்டி -
அவிநாசி, ஊட்டி, நாகர்கோவில்! அதிமுக கோட்டைகளை பாஜகவுக்கு தாரை வார்ப்பதா? கொந்தளிக்கும் நிர்வாகிகள் -
ஸ்டாலின் சொல்லியும் சீட் தரல.. மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி தளர்ந்து விட்டது.. கம்யூனிஸ்ட் ஆதங்கம்










Click it and Unblock the Notifications