ஓபிஎஸ்ஸுக்கும் இபிஎஸ்ஸுக்கும் பிரதமர் மோடி தனித்தனியே நேரம் கொடுத்தது ஏன்?.. பரபர வியூகம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: எடப்பாடி பழனிச்சாமி, ஓ பன்னீர் செல்வம், டிடிவி தினகரன், சசிகலா ஆகியோரை பாஜக இணைக்கும் என மூத்த பத்திரிகையாளர் ப்ரியன தெரிவித்துள்ளார்.

Recommended Video

    EPS, OPS -ஐ மோடி தவிக்க விடுக்கிறார் - ப்ரியன்

    அதிமுகவில் இரட்டை தலைமைகளாக இருந்த ஓபிஎஸ்ஸும எடப்பாடி பழனிசாமியும் இன்று எதிரும் புதிருமாக இருக்கிறார்கள். அதிமுக ஒற்றைத் தலைமையை விட்டுக் கொடுக்கக் கூடாது என எடப்பாடி பழனிசாமி கருதுகிறார்.

    அது போல் இரட்டை தலைமைதான் சரி, நம் கையிலும் லகான் இருக்க வேண்டும் என ஓபிஎஸ் விரும்புகிறார். இவர்களில் பாஜக ஆதரவு யாருக்கு என்பதே ஒரு கேள்வி. இதனால் டெல்லி மேலிடத்தின் ஆதரவை பெற ஓபிஎஸ்ஸும் எடப்பாடி பழனிசாமியும் பிரதமர மோடியை சந்திக்க படாதபாடுபட்டனர்.

    டெல்லிக்கு போய்

    டெல்லிக்கு போய்

    இருவரும் டெல்லிக்கே போய் முயன்று முடியவில்லை. இந்த நிலையில் செஸ் ஒலிம்பியாட் தொடக்க நிகழ்ச்சிக்காக சென்னை வந்த பிரதமர் நரேந்திர மோடியை வரவேற்பதற்கு எடப்பாடி பழனிசாமிக்கு நேரம் ஒதுக்கப்பட்டது. இதையடுத்து எப்படியோ முட்டி மோதி பிரதமரை வழியனுப்பும் போது நேரத்தை பெற்றுவிட்டார் ஓ பன்னீர் செல்வம்.

    சில வினாடிகள் மட்டும் சந்திப்பு

    சில வினாடிகள் மட்டும் சந்திப்பு

    இதில் எடப்பாடி பழனிசாமியுடன் ஒரு இரு வினாடிகள் மட்டுமே பிரதமர் கைகுலுக்கினார். ஆனால் ஓபிஎஸ்ஸுடன் 5 முதல் 10 நிமிடங்கள் வரை பேசியிருந்தார். அவ்வாறு இருவரும் என்ன பேசியிருப்பார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுகுறித்து மூத்த பத்திரிகையாளர் ப்ரியன் ஒன் இந்தியா தமிழுக்கு அளித்த பேட்டியில் கூறுகையில் பன்னீர் செல்வத்திற்கும் ஓபிஎஸ்ஸுக்கும் நடக்கும் மோதல்களில் பாஜக தற்சமயத்திற்கு பார்வையாளராகவே இருக்க விரும்புகிறார்கள்.

    தேர்தல்கள் இல்லை

    தேர்தல்கள் இல்லை

    இதற்கு காரணம் தமிழகத்தில் தற்போது தேர்தல்கள் ஏதுமில்லை. 2024 ஆம் ஆண்டுதான் நாடாளுமன்றத் தேர்தல் இருக்கிறது. கடந்த 2017ஆம் ஆண்டு சசிகலாவையும் தினகரனையும் பிரித்து வைத்துவிட்டு பன்னீர் செல்வத்தை எடப்பாடி பழனிசாமியுடன் சேர்த்து வைத்தது பாஜகதான். இந்த 5 ஆண்டுகளில் எடப்பாடி பழனிசாமி தனக்கென ஒரு ஆதரவாளர்கள் கூட்டத்தை உருவாக்கிவிட்டார்.

    ஓபிஎஸ் ஆதரவாளர்கள்

    ஓபிஎஸ் ஆதரவாளர்கள்

    ஆனால் ஓபிஎஸ் தனது ஆதரவாளர்களையே இழந்துவிட்டார் என்றுதான் சொல்ல வேண்டும். இந்த நேரத்தில்தான் தேர்தல் தொடங்குவதற்குள் நாம் ஒற்றைத் தலைமை பிரச்சினையை உருவாக்கி தேர்தல் ஆணையம், நீதிமன்றம் சென்று வருவதற்கும் தேர்தல் வருவதற்கும் சரியாக இருக்கும். அதற்கு நாம் கட்சியை கைப்பற்றி விடலாம் என கருதினார் எடப்பாடி.

     பாஜக நினைப்பது என்ன

    பாஜக நினைப்பது என்ன

    ஆனால் பாஜக நினைப்பது என்னவெனில் அதிமுகவில் ஒற்றைத் தலைமை ஏற்படக் கூடாது. அவ்வாறு வந்தால் தாங்கள் நினைத்தபடி அவர்களை ஆட்டுவிக்க முடியாது என கருதுகிறார்கள். குழப்பமான இரட்டை தலைமை இருந்தால் நாம் அவர்களை எளிதில் கையாள முடியும் என கருதுகிறார்கள். இதனால்தான் சசிகலாவை எதிர்த்தார்கள்.

     ஒற்றைத் தலைமை

    ஒற்றைத் தலைமை

    எடப்பாடி பழனிசாமி ஒற்றைத் தலைமையானது பாஜக விரும்பவில்லை. ஓபிஎஸ்ஸோடு அனுசரித்து அதிமுகவில் இரட்டை தலைமையே தொடர வேண்டும் என்றுதான் அவர்கள் விரும்புகிறார்கள். இந்த நேரத்தில் பஞ்சாயத்து செய்யக் கூடாது என்பதால்தான் மோடியும் அமித்ஷாவும் எடப்பாடியை சந்திக்க விரும்பவில்லை. எடப்பாடியை சந்தித்தால் அடுத்து ஓபிஎஸ்ஸை சந்திக்க வேண்டும். இருவரும் மாறி மாறி புகார் செய்வார்கள் என்பதால் தவிர்ப்பது நல்லது என முடிவு செய்தார்கள்.

    பாஜகவை வளர்க்க யுத்தி

    2024 ஆம் ஆண்டுதான் தேர்தல், அந்த நேரத்திற்குள் அதிமுகவே அழிந்தாலும் பரவாயில்லை, அந்த நேரத்தில் நாங்கள் பாஜகவை வளர்த்துக் கொள்வோம் என்ற திட்டமும் பாஜகவிடம் உள்ளது. அப்படியே பாஜகவால் தமிழகத்தில் வெல்ல முடியாத சூழல் ஏற்பட்டாலும் ஓபிஎஸ், இபிஎஸ் ஆகியோரை ஒன்று சேர்த்து இரட்டை இலை வாக்குகளை அறுவடை செய்யும் வாய்ப்பு பாஜகவுக்கு இருக்கிறது.

    பிரதமர் மோடி

    பிரதமர் மோடி

    அதனால்தான் பிரதமர் மோடி சென்னை வந்த போது கூட இருவரையும் தனித்தனியாக சந்தித்தார். தாங்களாக வளர்ந்து தங்கள் தலைமையில் ஒரு கூட்டணி அமையும் வரை அதிமுகவை விட்டுவிடக் கூடாது என்பதே பாஜகவின் கணக்கு. கடந்த 2021 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் சசிகலா, தினகரன் உள்ளிட்டோரை ஒருங்கிணைக்குமாறு அமித்ஷா கூறினார். ஆனால் அதை எடப்பாடி பழனிசாமி மறுத்துவிட்டார். எனவே 2024 ஆம் ஆண்டுக்குள் பாஜக தமிழகத்தில் கால் ஊன்ற முடியாத நிலை ஏற்பட்டால் அப்போது சசிகலா, தினகரன் மட்டுமில்லை, ஓபிஎஸ், எடப்பாடி ஆகிய 4 பேர் இணைந்தால் மட்டுமே இரட்டை இலை வாக்குகளை அறுவடை செய்து நாடாளுமன்றத் தேர்தலில் வெல்ல முடியும் என்ற நிபந்தனையை வைப்பார்கள் என்றார்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+