சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இதான் அசைன்மென்ட்.. ரஜினிக்கு டெல்லி டாஸ்க்.. மொத்த "சவுத்" இந்தியாவிற்கும் குறி.. மீண்டும் போறாராமே

Google Oneindia Tamil News

சென்னை: நடிகர் ரஜினிகாந்த் ஆளுநர் ஆர். என் ரவியை சந்தித்த நிலையில் அரசியல் வட்டாரத்தில் பல்வேறு விவாதங்கள் எழுந்துள்ளன. அவரின் சந்திப்பை மையமாக வைத்து பல விவாதங்கள் சுழன்று அடித்துக்கொண்டு இருக்கின்றன. அவருக்கு டெல்லி பாஜக தரப்பு முக்கியமான அசைன்மென்ட் ஒன்றை கொடுத்துள்ளதாக போயஸ்கார்டன் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தமிழ்நாட்டில் மீண்டும் போயஸ் கார்டன் கவனம் பெறுவதற்கான அறிகுறிகள் தெரிய தொடங்கி உள்ளன. ஜெயலலிதா மறைவிற்கு பின் நடிகர் ரஜினிகாந்த் அவ்வப்போது போயஸ்கார்டனில் பேட்டிகள் கொடுப்பார். இதனால் பரபரப்பாக காணப்பட்ட போயஸ்கார்டன் ரஜினி அரசியலுக்கு வரவில்லை என்றதும் மீண்டும் அமைதியானது.

இந்த நிலையில்தான் ஆளுநர் ரவியுடனான சந்திப்பிற்கு பின் போயஸ்கார்டன் மீண்டும் கவனம் பெற்றுள்ளது. சமீபத்தில் டெல்லியில் ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற சுதந்திர அம்ரித பெருவிழா கூட்டம் ஒன்றில் ரஜினிகாந்த் கலந்து கொண்டார்.

ரஜினிகாந்த் சார்.. ஆளுநரிடம் கூறி நீட் தேர்வை ரத்து செய்யச் சொல்லுங்க! கே.எஸ்.அழகிரி புது யோசனை! ரஜினிகாந்த் சார்.. ஆளுநரிடம் கூறி நீட் தேர்வை ரத்து செய்யச் சொல்லுங்க! கே.எஸ்.அழகிரி புது யோசனை!

ஆபரேஷன் சவுத்

ஆபரேஷன் சவுத்

பாஜக தலைவர்கள், பாஜக அல்லாத பல மாநில அரசியல் தலைவர்கள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் ரஜினி சில பாஜக தலைவர்களை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பிற்கு பின்புதான் ரஜினிக்கு சில டாஸ்க்குகள் கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதை பற்றித்தான் ரஜினிகாந்த் ஆளுநர் ரவியிடம் விவாதம் செய்ததாகவும் கூறப்படுகிறது. அவருக்கு தமிழ்நாடு மட்டுமின்றி மொத்தமாக தென்னிந்தியாவை மையப்படுத்தி ரஜினிக்கு அசைன்மென்ட் ஒன்று கொடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

பல இடங்களில் பேச போகிறார்

பல இடங்களில் பேச போகிறார்

அமித் ஷா ஏற்கனவே பாஜக தென்னிந்தியாவில் கவனம் செலுத்த வேண்டும் என்று உட்கட்சி கூட்டத்தில் தெரிவித்து இருந்தார். பாஜக கால் பதிக்க முடியாமல் இருக்கும் தெலுங்கானா, ஆந்திரா, கேரளா, தமிழ்நாட்டில் கால் பதிக்க தீவிரமாக முயன்று வருகிறது. இதற்கு ரஜினியை ஒரு கருவியாக பயன்படுத்த பாஜக திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. நேரடியாக அரசியலில் ஈடுபடாமல் பாஜகவின் கொள்கைகளை மட்டும் ரஜினி மேடை மேடையாக பேச போகிறார் என்று கூறப்படுகிறது.

வாக்குகளை ஸ்விங் செய்ய பிளான்

வாக்குகளை ஸ்விங் செய்ய பிளான்

அதாவது ஆன்மீகம், ஹிந்துத்துவா, தேசியம், மனுநீதி உள்ளிட்ட விஷயங்களை பற்றி ரஜினி மக்களிடையே பேசுவார் என்று கூறப்படுகிறது. மக்கள் இடையே ஆன்மீக உணர்வுகளை கொண்டு வர வேண்டும். குறைந்தது தன்னுடைய ரசிகர்களை ஆன்மீகம் பக்கம் திருப்ப வேண்டும் என்ற டாஸ்க் ரஜினிக்கு கொடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்துக்களாக இருந்து பாஜகவிற்கு வாக்களிக்கத்தவர்களை பாஜக பக்கம் நகர்த்தும் பணியை ரஜினி பாஜகவில் இல்லாமலே செய்ய போகிறார் என்று கூறப்படுகிறது.

வாய்ஸ் கொடுப்பார்

வாய்ஸ் கொடுப்பார்

அதோடு லோக்சபா தேர்தல் நேரத்தில் நேரடியாக இவர் தனது ரசிகர்கள் எந்த கட்சிக்கு வாக்களிக்க வேண்டும். எந்த கட்சிக்கு வேலை செய்ய வேண்டும் என்றும் வாய்ஸ் கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2024 லோக்சபா தேர்தலுக்கு பாஜக தனது முழு பலத்தையும் பயன்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரஜினிகாந்த் அதில் ஒரு கருவியாக தென்னிந்தியா முழுக்கவே பயன்படுத்தப்படுவார் என்கிறார்கள் விவரக் அறிந்தவர்கள்.

படங்கள் வர வாய்ப்பு

படங்கள் வர வாய்ப்பு

அதோடு வடஇந்தியாவில் அக்சய் குமார் சில தேசியம் தொடர்பான படங்களில் நடிப்பது போல ரஜினியும் தமிழ்நாட்டில் தேசிய கருத்துக்கள் வளரும் வகையில் படங்களில் வரும் நாட்களில் நடிக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. வரும் குடியரசுத் தினத்தை டெல்லியில் கொண்டாட ரஜினிகாந்த் முடிவு செய்துள்ளார். இதற்காக அவர் இரண்டு நாட்களில் டெல்லி செல்வார் என்று கூறப்படுகிறது. மீண்டும் டெல்லி செல்லும் ரஜினிகாந்த் அங்கு பாஜக தலைவர்கள் பலரை சந்திக்க வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது.

English summary
What is the task given to actor Rajinikanth by Delhi BJP?நடிகர் ரஜினிகாந்த் ஆளுநர் ஆர். என் ரவியை சந்தித்த நிலையில் அரசியல் வட்டாரத்தில் பல்வேறு விவாதங்கள் எழுந்துள்ளன.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X