கவனம் மக்களே! சென்னையில் இன்று முதல் இந்த முக்கிய பகுதியில் போக்குவரத்து மாற்றம்.. எங்கே தெரியுமா

புதிய பாலம் கட்டுமான பணிகளால் சென்னையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.

Subscribe to Oneindia Tamil

சென்னை: தலைநகர் சென்னையில் தொடர்ந்து அதிகரித்து வரும் போக்குவரத்தைக் குறைக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதனிடையே புதிய பாலம் கட்டுமான பணிகளால் சென்னையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தலைநகர் சென்னையில் ஒவ்வொரு நாளும் போக்குவரத்து நெரிசல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நாட்டில் மிகவும் போக்குவரத்து நெரிசல் மிக்க நகரங்களில் ஒன்றாகச் சென்னை இருக்கிறது.

சென்னையில் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இருப்பினும், நகரில் சில இடங்களில் இன்னும் முழுமையாக டிராபிக் குறையவில்லை.

சென்னை

சென்னை

குறிப்பாகச் சென்னையில், பல்வேறு பொது போக்குவரத்து முறைகள் உள்ளன. பஸ், மின்சார ரயில்கள், மெட்ரோ என மூன்று வகையான பொது போக்குவரத்து உள்ளன. இருந்த போதிலும், தலைநகர் சென்னையில் டிராபிக் குறைந்தபாடில்லை. தொடர்ந்து அதிகரித்தே வருகிறது. இதற்கா பல்வேறு காரணங்கள் சொல்லப்படுகிறது. டிராபிக்கை குறைக்கச் சென்னை மாநகராட்சி சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

டிராபிக்

டிராபிக்

குறிப்பாக ஏற்கனவே நகரில் இரண்டு வழித்தடங்களில் மெட்ரோ இயக்கப்பட்டு வரும் நிலையில், இரண்டாம் கட்ட மெட்ரோ பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. இது ஒரு பக்கம் இருந்தாலும் மெட்ரோ இல்லாத பகுதிகளிலும் சாலைகளில் டிராபிக் அதிகம் உள்ள பகுதிகளிலும் புதிய பாலங்களைக் கட்டும் நடவடிக்கையும் அரசு இறங்கியுள்ளது. இதன் மூலம் டிராபிக் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய பாலம்

புதிய பாலம்

அதன்படி கீழ்ப்பாக்கம் கார்டன் சாலை 2-வது தெருவில் ஆஸ்பிரின் கார்டன் முதல் தெரு சந்திப்பு அருகில் உள்ள பழைய பாலம் இடிக்கப்பட்டு சென்னை மாநகராட்சி சார்பில் புதிய பாலம் கட்டுமான பணி தொடங்க உள்ளது. இதன் காரணமாக இன்று (ஜன. 30 ) முதல் அப்பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, கீழ்ப்பாக்கம் கார்டன் இரண்டாவது சாலை வழியாக வாகனங்கள் செல்ல அனுமதியில்லை.

போக்குவரத்து மாற்றம்

போக்குவரத்து மாற்றம்

மேலும், நியு ஆவடி சாலையிலிருந்து கீழ்ப்பாக்கம் 2-வது தெரு வழியாக கீழ்ப்பாக்கம் கார்டன் சாலை நோக்கி செல்லக் கூடிய வாகனங்கள், ஆஸ்பிரின் கார்டன் 1-வது தெரு சந்திப்பில் நேராக நியு ஆவடி சாலை வழியாகச் செல்லலாம் என்று கூறப்பட்டுள்ளது. ஆஸ்பிரின் கார்டன் 1-வது தெருவை நோக்கி இடது புறம் திரும்ப அனுமதியில்லை என்று போலீசார் சார்பில் வெளியிடப்பட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கவனம் மக்களே

கவனம் மக்களே

அதேபோல கீழ்பாக்கம் கார்டன் சாலையிலிருந்து கீழ்ப்பாக்கம் 2-வது தெரு வழியாக ஆஸ்பிரின் கார்டன் நோக்கிச் செல்லக் கூடிய வாகனங்கள், கீழ்ப்பாக்கம் கார்டன் சாலை டெய்லர்ஸ் சாலை சந்திப்பிலிருந்து நேரடியாக கீழ்ப்பாக்கம் கார்டன் சாலை, நியு ஆவடி சாலை மற்றும் ஆஸ்பிரின் கார்டன் முதல் தெரு வழியாகச் செல்லலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, இந்த வழியாகச் செல்லும் வாகன ஓட்டிகள் கவனத்துடன் தங்கள் பயணத்தைத் திட்டமிட வேண்டும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+