கஜா புயல் கரையை கடந்தாச்சு.. சென்னை இப்போ எப்படி உள்ளது தெரியுமா?
Recommended Video

சென்னை: கஜா புயல் தமிழகத்தின் பல மாவட்டங்களில் புரட்டிப்போட்டு இப்போது திண்டுக்கல் அருகே மையம் கொண்டுள்ளது. இந்த புயல் கடலூர் மற்றும் ஸ்ரீஹரிகோட்டா நடுவே கரையை கடக்கும் என்று தான் முதலில் அறிவிக்கப்பட்டிருந்தது.
எனவே இந்த நகரங்களுக்கு நடுவே உள்ள சென்னையில் பலத்த மழை பெய்யக்கூடும் என்று எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், இதன் பிறகு புயலின் திசைமாறி பாம்பன் மற்றும் கடலூர் நடுவே, நாகப்பட்டினம் அருகே கரையைக் கடக்கும் என்று அறிவிக்கப்பட்டது.

அதன்படி, இன்று அதிகாலையில் நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் அருகே புயல் கரையைக் கடந்தது. அதன் பிறகு ஆழ்ந்த காற்றழுத்த மண்டலம் என்ற அளவில் வலு குறைந்து திண்டுக்கல் அருகே மையம் கொண்டுள்ளது.
இதனால் புயலால் நல்ல மழை கிடைக்கும் என்று எதிர்பார்த்து சென்னை மக்கள் ஏமாற்றமடைந்துள்ளனர். நேற்று அதிகாலையில் சென்னையில் பரவலாக மழை பெய்தது. அதன்பிறகு மதியத்திற்கு பிறகு வெயில்தான், பல்லைக் காட்டியது.
இன்றும் சென்னையின் பல பகுதிகளிலும் வெயில் அடித்துக்கொண்டிருந்தது. கஜா புயலா.. அது எப்போது வந்தது.. என்று மக்கள் கேட்கும் அளவுக்கு சென்னையில் வானிலை நிலவி வருகிறது. வேலூரில் கூட காலை முதல் வெயில் தான் விளாசி வருகிறது.
காலை 10 மணி நிலவரப்படி, திருநெல்வேலியில் மேகமூட்டம் காணப்படுகிறது, ஆனால் மழை பெய்யவில்லை. மதுரையில் பரவலாக நல்ல மழை பெய்தது. திருவண்ணாமலை, கோவை நகரங்களிலும் பரவலாக மழை பெய்தது. தாராபுரம், உடுமலைபேட்டை, சேலம் நகரங்களில் நல்ல மழை பெய்தது.
-
அடுத்த 1 மணி நேரம் உஷார்! கோவை டூ கன்னியாகுமரி.. 12 மாவட்டங்களில் கொட்டப்போகும் கனமழை! -
சென்னையில் இன்று விளாசப் போகுது மழை.. நெல்லை, குமரி உள்பட 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
சென்னையை சுத்து போட்ட மழை மேகங்கள்.. நள்ளிரவு முழுக்க 15 மாவட்டங்களில் கொட்டும் மழை -
இனி அரசு ஊழியர்களுக்கு வாரம் 2 நாள் விடுமுறை.. அனைத்து சனிக்கிழமையும் ‘லீவு’ அறிவித்த முதல்வர் -
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா!












Click it and Unblock the Notifications