துப்பாக்கியோடு வந்த துணை ராணுவம்.. கரூரில் ஐடி ரெய்டு! அந்த 2 பாக்சில் இருந்தது என்ன? திக்திக் திமுக
சென்னை: கரூர் வழக்கறிஞர் செங்கோட்டையன் அலுவலகத்தில் வருமான வரித்துறை சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமான இடங்களில் ரெய்டு முடிந்துவிட்டதாக கருதப்பட்ட நிலையில் கரூரில் இன்று முக்கியமான நபர் ஒருவரின் வீட்டில் ரெய்டு நடத்தப்பட்டது. 5 நாளாக நடந்து வந்த செந்தில் பாலாஜிக்கு நெருக்கமான இடங்களின் ரெய்டு நேற்று முதல்நாள் முடிவிற்கு வந்தது.

இந்த ரெய்டு தொடர்பாக விரைவில் வருமான வரித்துறை அறிக்கை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதோடு ரெய்டு தொடர்பாக வழக்குகள் பதியப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
போக்குவரத்து துறையில் வேலை வாங்கித்தருவதாக கூறி பண மோசடி செய்ததாக அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக புகார் உள்ளது. இதில் அவருக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை தொடர்ந்து விசாரிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இவருக்கு எதிரான வழக்கை கைவிடுவதாக அரசு முடிவு எடுத்த நிலையில் இதில் தொடர்ந்து விசாரிக்க கோர்ட் உத்தரவிட்டுள்ளது. சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்து செந்தில் பாலாஜி உள்ளிட்டோர் மீதான விசாரணையை தொடர வேண்டும் எனவும் உச்சநீதிமன்றம் தனது உத்தரவில் தெரிவித்துள்ளது.
பல்வேறு டெண்டர் முறைகேடுகளை செய்ததாக செந்தில் பாலாஜி மீது பாஜக, அதிமுக சார்பாக புகார்கள் வைக்கப்பட்டு வருகின்றன.இந்த நிலையில்தான் அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்புடைய 40 இடங்களில் வருமானவரித் துறை சோதனை நடைபெற்று வருகிறது.ஆனாலும் வருமான வரித்துறை இந்த ரெய்டிற்கான காரணம் குறித்து முறையான அறிவிப்பை இன்னும் வெளியிடவில்லை.
இந்த நிலையில்தான் கரூர் வழக்கறிஞர் செங்கோட்டையன் அலுவலகத்தில் வருமான வரித்துறை சோதனை நடத்தப்பட்டு வருகிறது. அமைச்சர் செந்தில்பாலாஜியின் சகோதரர் மற்றும் அவரது நண்பர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்த கரூர் வழக்கறிஞர் செங்கோட்டையன் அலுவலகத்தில் வருமான வரித்துறை சோதனை செய்யப்பட்டு வருகிறது. அலுவலகத்தில் இருந்து இரண்டு பெட்டிகளில் ஆவணங்களை எடுத்து சென்ற வருமான வரித்துறை அதிகாரிகள் அதை பற்றி விரிவான விசாரணை நடத்த உள்ளனர்.
துப்பாக்கி ஏந்திய மத்திய துணை ராணுவப் படை வீரர்கள் பாதுகாப்புடன் புறப்பட்ட அதிகாரிகள் விசாரணை செய்து உள்ளனர். இரண்டு பெட்டியில் எடுத்து செல்லப்பட்டது சொத்து ஆவணங்களா என கேள்வி எழுந்துள்ளது. முன்னதாக வருமான வரித்துறையினரை திமுகவினர் தாக்கியதாக புகார் வைக்கப்பட்டது.
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சொந்தமான இடங்களில் ரெய்டு நடத்த சென்ற போது அவர்களிடம் திமுகவினர் கேள்வி எழுப்பி வாக்கு வாதம் செய்தது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில்தான் துப்பாக்கி ஏந்திய மத்திய துணை ராணுவப் படை வீரர்கள் பாதுகாப்புடன் புறப்பட்ட அதிகாரிகள் விசாரணை செய்து உள்ளனர்.
செந்தில் பாலாஜி விளக்கம்: முன்னதாக இந்த ரெய்டு தொடர்பாக அமைச்சர் செந்தில் பாலாஜி அளித்த விளக்கத்தில், எனது இல்லத்தில் வருமான வரித்துறை சோதனை எதுவும் நடைபெறவில்லை,. இது போன்ற சோதனைகளை நாங்கள் எதிர்கொள்வது புதிதல்ல.
எனது சகோதரர் வீட்டின் காம்பவுண்ட் சுவரில் ஏறி அதிகாரிகள் உள்ளே சென்ற வீடியோ எனக்கு வந்துள்ளது, அதை பற்றி விசாரணை மேற்கொள்ளப்படும். எத்தனை நாட்கள் சோதனை நடத்தினாலும் அவர்களுக்கு முழு ஒத்துழைப்புத் தரப்படும் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம் கொடுத்துள்ளார்.












Click it and Unblock the Notifications