Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

விடுதலை வீரர்கள் புறக்கணிப்பு.. ஆளுநர் சொன்னதில் தவறில்லை.. வரம்பு மீறக்கூடாது.. அண்ணாமலை கொதிப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டில் சுதந்திர போராட்ட வீரர்கள் புறக்கணிக்கப்படுகின்றனர் என்று ஆளுநர் ஆர்.என். ரவி சொன்னதில் எந்த தவறும் இல்லை என்று பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

மகாத்மா காந்தி, பகத் சிங், வல்லபாய் பட்டேல், சுபாஷ் சந்திரபோஸ் உள்ளிட்டோர் தமிழ்நாட்டில் பிறந்திருந்தால், அவர்களையும் சாதித் தலைவர்களாக மாற்றியிருப்பார்கள். தமிழ்நாட்டில் பிறந்த சுதந்திரப் போராட்ட வீரர்களை ஒரு சாதியின் தலைவர்களாகச் சுருக்கிவிட்டார்கள். அவர்கள் மறக்கடிக்கப்பட வேண்டும் என்பதற்காகவே இங்கு ஆட்சி செய்தவர்கள் திட்டமிட்டு அப்படிச் செய்தார்கள்" என தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி மீண்டும் தனது சர்ச்சைப் பேச்சைக் கட்டவிழ்த்துவிட்டிருக்கிறார்.

What is wrong with what Governor Ravi said Annamalai is asking for a white report for TN Government

திருச்சியில் தனியார் ஐ.ஏ.எஸ் அகாடமி சார்பில் நடத்தப்பட்ட மருது சகோதரர்கள் நினைவுநாள் விழாவில் கலந்துகொண்ட ஆளுநர் ரவி, நிகழ்ச்சியில் பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, இரண்டாண்டுகளுக்கு முன்பு நான் தமிழ்நாட்டுக்கு வந்தபோது, சுதந்திரத்துக்காகப் போராடிய தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரர்களின் பெயர்ப் பட்டியலைத் தாருங்கள் என தமிழ்நாடு அரசிடம் கேட்டிருந்தேன். ஆனால் அவர்களோ 40க்கும் குறைவான பெயர்ப் பட்டியலைத்தான் என்னிடம் கொடுத்தார்கள். பிறகு, நானாகத் தேடிப் படித்ததில் பல்லாயிரக்கணக்கான வீரர்கள் தமிழ்நாட்டில் பிறந்து, நாட்டின் விடுதலைக்காகப் போராடியிருப்பதைத் தெரிந்துகொண்டேன்.

அந்த வகையில், முத்துராமலிங்கத் தேவர் ஒரு மிகச்சிறந்த சுதந்திரப் போராட்ட வீரர். நேதாஜி சுபாஷ் சந்திர போஸுடன் நெருக்கமாக இருந்தார். ஆனால், அவரை ஒரு சாதியின் தலைவராக இன்று சுருக்கிவிட்டார்கள். சுதந்திரப் போராட்டத் தியாகிகள் எந்தச் சமூகத்திலிருந்து வந்தார்கள் என்பதிலிருந்து அவர்களைச் சாதித் தலைவர்களாக அடையாளப்படுத்தி, மக்களை ஒன்றுபடவிடாமல் தடுக்கிறார்கள்.

தமிழ்நாட்டில் பிறந்த சுதந்திரப் போராட்ட வீரர்களெல்லாம் மறக்கடிக்கப்பட வேண்டும் என்ற நோக்கத்தோடு இங்கு ஆட்சி செய்தவர்கள் திட்டமிட்டு அப்படிச் செய்தார்கள். அதனால்தான், அவர்கள் தமிழ்நாட்டில் கொண்டாடப்படவில்லை. பாடப்புத்தகங்களில் அவர்களின் வரலாறும் அழிக்கப்பட்டது என்று கூறினார்.

ஆளுநரின் கருத்துக்கு தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு, கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக டி.ஆர்.பாலு வெளியிட்டுள்ள அறிக்கையில், வெள்ளையரை எதிர்த்து வீரப் போர் புரிந்து, உயிரைத் துச்சமென நினைத்து, மரணத்தை முத்தமிட்ட மாவீரர்கள் மருது சகோதரர்களின் தியாகத்தை தமிழக அரசு போற்றிவரும் நிலையில், மருதிருவர் விழா ஒன்றில் பங்கேற்ற ஆளுநர் ரவி, பச்சைப் பொய்களை கொட்டிக் கடைவிரித்திருக்கிறார். தமிழகத்தில் விடுதலைப் போராட்டத் தியாகிகளின் வரலாற்றைத் தேடிப் பார்த்தாராம். அவருக்கு எதுவுமே கிடைக்கவில்லையாம். தமிழக அரசு தியாகிகளை மறந்துவிட்டதாம்.

பா.ஜ.க தலைவர்கள் எப்படி அன்றாடம் பொய் பேசி, வதந்தி பரப்புகிறார்களோ, அவர்களுக்குப் போட்டியாக, தமிழகத்தின் பா.ஜ.க தலைவராக வேண்டும் என்ற ஆசையில் ஆளுநரும் பொய்யாகவே பேசுகிறார். பூலித்தேவன், வீரபாண்டிய கட்டபொம்மன், மருது சகோதரர்கள், வேலு நாச்சியார், வீரன் அழகுமுத்துக்கோன், தீரன் சின்னமலை, மகாகவி பாரதியார், கப்பலோட்டிய தமிழர் வ.உ.சி., திருப்பூர் குமரன் போன்ற எண்ணற்ற தியாகிகளை என்றென்றும் மதித்துப் போற்றுகின்ற அரசாகத் தமிழக அரசு திகழ்ந்துவருகிறது. மருதுபாண்டியர் உள்ளிட்ட தமிழகத்தின் சுதந்திரப் போராட்டத் தியாகிகளின் வரலாற்றைச் சித்திரிக்கும் ஊர்திகளை டெல்லி குடியரசு தின விழா அணிவகுப்பில் சேர்க்க முடியாது என மறுத்து மத்திய பா.ஜ.க அரசு திருப்பி அனுப்பியபோது இந்த ஆளுநர் ரவி எங்கே போனார்?

பிரிட்டிஷ் ஆட்சியாளர்களிடம் மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொடுத்தவர்கள் யார், குடியரசு ஏட்டில் 'இந்த ஆட்சி ஏன் ஒழிய வேண்டும்' எனத் தலையங்கம் எழுதி, சிறைக்குச் சென்றவர்கள் யார் என்பதும் வரலாற்றுப் பக்கங்களைப் புரட்டினால் புரியும். அதுவரை ஆளுநர் மாளிகையே... அடக்கிடு வாயை!" என்று டி.ஆர். பாலு வெளியிட்டுள்ள அறிக்கை பரபரப்பை அதிகரித்துள்ளது.

இந்தநிலையில் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை, இந்திய சுதந்திர போராட்ட வீரர்கள் புறக்கணிக்கப்படுவதாக ஆளுநர் ஆர்.என். ரவி கூறியதில் எந்த தவறும் இல்லை என்று தெரிவித்தார். எத்தனை தலைவர்களின் பெயர்கள் தமிழக பாடத்திட்டத்தில் உள்ளன என வெள்ளை அறிக்கை தர வேண்டும் என்றும் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

சுதந்திர போராட்ட வீரர்களை திமுக அரசு சாதிக்குள் அடக்குவதாக தெரிவித்த அண்ணாமலை, கோட்சேவை யாரும் உயர்த்தி பிடிக்கவில்லை என்று கூறினார். மகாத்மா காந்தி விசயத்தில் கோட்சேவை யாரும் ஏற்றுக்கொள்ள போவது கிடையாது. தமிழ்நாட்டில் ஆயிரக்கணக்கான சுதந்திர போராட்ட வீரர்களின் தியாகங்களை முன்னிறுத்தி பெயர்களை வைக்க வேண்டும் என்றும் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

ஆளுநர் தன்னுடைய வேலையை செய்கிறார். ஆளுநர் சொன்னதில் என்ன தவறு இருக்கிறது என்று தெரியவில்லை. ஆளுநர் பேசிய விசயத்தை புரிந்து கொள்ளவில்லை. தென் தமிழகத்தில் குரு பூஜைக்கு போனாலே அதிக பாதுகாப்பு ஏற்பாடு செய்கிறது. ஆளுநரை கொச்சைப்படுத்தக்கூடாது. ஆளுநரின் கேள்வி கொச்சையாக இல்லை டி.ஆர். பாலுவின் பதில்தான் கொச்சையாக உள்ளது.

டி.ஆர். பாலு மீது ஊழல் புகார் உள்ளது. இப்போது சீட் கொடுப்பார்கள் என்ற நப்பாசை உள்ளது. அந்த நப்பாசையில்தான் ஆளுநரை வம்புக்கு இருக்கிறார் டி.ஆர். பாலு என்றும் குற்றம் சாட்டியுள்ளார் அண்ணாமலை.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+