ரொம்ப “டேஞ்சர்”.. ஈவிகேஎஸ் இளங்கோவனை தாக்கியது XBBயா? சிங்கப்பூரை வதைத்த கொரோனா மாதிரியின் கோர முகம்
XBB இல் ஏராளமான முட்கள் இருக்கிறது என்றும், இது மனிதர்களின் நோய் எதிர்ப்பு சக்தியை உடைத்துக் கொண்டு தாக்கும் சக்தி படைத்ததாகவும் கூறி இருந்தனர்.
சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. ஈவிகேஎஸ் இளங்கோவன் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு இருக்கும் நிலையில் கடந்த ஆண்டு சிங்கப்பூரில் அதிகளவில் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்திய XBB வகை கொரோனாவால் அவர் பாதிக்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன. XBB கொரோனா என்றால் என்னவென்று பார்ப்போம்.
ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்த திருமகன் ஈவேரா கடந்த ஜனவரி மாதம் உடல்நலக் குறைவு ஏற்பட்டு காலமானார். அதை தொடர்ந்து அவரது தந்தை ஈவிகேஎஸ் இளங்கோவன் கடந்த மாதம் நடைபெற்ற இடைத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்றார்.
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது. அதன் தொடர்ச்சியாக சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.

கொரோனா வைரஸ்
சீனாவில் கடந்த 2019 ஆம் ஆண்டு பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் பெருந்தொற்று உலகம் முழுவதும் உள்ள நாடுகளில் கடந்த 3 ஆண்டுக்கும் மேலாக மக்களை ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கிறது. உலகம் முழுவதும் 60 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் கொரோனா உயிர்கொல்லி வைரஸ் தொற்றால் உயிரிழந்தனர். இந்தியாவிலும் 5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவால் இறந்து உள்ளனர்.

மருத்துவ உலகிற்கே சவால்
பெரும்பாலான மக்கள் தடுப்பூசி செலுத்திக் கொண்டாலும் அதற்கு சவால்விடும் வகையில் அடுத்தடுத்த கொரோனா வைரஸ் தொற்றின் புதிய மாதிரிகள் உருமாறி உலகளவில் பரவி பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகின்றன. மருத்துவ உலகமே இதன் காரணமாக என்ன செய்வதென்று புரியாமல் விழிபிதுங்கி நிற்கிறது.

ஓமைக்ரான்
அந்த வகையில் கொரோனா தொற்றின் புதிய மாதிரியான ஓமைக்ரான் கடந்த 2021 ஆம் ஆண்டு இந்தியா உட்பட உலக நாடுகள் முழுவதும் பரவி பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. ஏராளமான மக்கள் இதில் பாதிக்கப்பட்டு உயிரிழந்தனர். இந்த நிலையில் கடந்த ஆண்டு ஓமைக்ரானின் புதிய மாதிரிகளும் உருவாகி பல நாடுகளில் பாதிப்பை ஏற்படுத்த தொடங்கின.

மாதிரி தொற்றுகள்
BQ.1 மற்றும் BQ.1.1 ஆகியவை ஓமைக்ரானின் புதிய மாதிரிகளாக கடந்த ஆண்டு கண்டறியப்பட்டன. இவை மனிதனின் நோய் எதிர்ப்பு சக்தியை உடைத்து தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றன. அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் கடந்த ஆண்டு இந்த மாதிரிகள் பாதிப்பை ஏற்படுத்தி இருந்தன. இந்தியாவில் அப்போது இந்த கொரோனா மாதிரி கண்டறியப்படவில்லை.

XBB கொரோனா
அதன் தொடர்ச்சியாக BA.2.75, BJ.1 ஆகிய கொரோனா மாதிரி வைரஸ் தொற்றுகளும் பரவின. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் இந்தியாவில் BA.2.75 மாதிரி தொற்று பரவியது. மேற்குறிப்பிட்ட BA.2.75 மற்றும் BJ.1 ஆகிய 2 கொரோனா மாதிரிகளும் இணைந்து புதிய ஆபத்தான கொரோனா மாதிரி ஒன்று கடந்த ஆண்டில் உருவானது. அதுதான் XBB. குறிப்பாக இது சிங்கப்பூரில் கடந்த ஆண்டு ஆகஸ்டு பரவி வருகிறது.

XBB ஏற்படுத்தும் பாதிப்புகள்
XBB கொரோனா மாதிரியின் தன்மை குறித்து ஆராய்ச்சியாளர்கள் கடந்த ஆண்டே பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டனர். அப்போது மற்ற கொரோனா மாதிரிகளை விட XBB இல் ஏராளமான முட்கள் இருக்கிறது என்றும், இது மனிதர்களின் நோய் எதிர்ப்பு சக்தியை உடைத்துக் கொண்டு தாக்கும் சக்தி படைத்ததாகவும் கூறி இருந்தனர்.












Click it and Unblock the Notifications