பொன்முடி வீட்டில் தொடரும் ரெய்டு.! வந்து விழுந்த கேள்வி.. அமைச்சர் மனோ தங்கராஜ் சொன்ன பதிலை பாருங்க
சென்னை: அமைச்சர் பொன்முடிக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத் துறையினர் ரெய்டு நடத்தி வரும் நிலையில், இது தொடர்பாக அமைச்சர் மனோ தங்கராஜ் சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு உயர்கல்வித் துறை அமைச்சராக இருக்கும் பொன்முடிக்கு சொந்தமான இடங்களில் இன்று காலை முதல் அமலாக்கத் துறையினர் ரெய்டு நடத்தி வருகிறார்கள். காலை 7 மணியளவில் தொடங்கிய ரெய்டு இன்னும் தொடர்ந்து வருகிறது.
சென்னை, விழுப்புரம் என பல்வேறு இடங்களிலும் அமைச்சர் பொன்முடி மற்றும் அவருக்குத் தொடர்புடையோரின் இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்து வருகிறது. குறிப்பாக பொன்முடி மகன் கவுதம சிகாமணி எம்பி வீட்டிலும் சோதனை நடைபெறுகிறது.

சோதனை: மேலும், விழுப்புரம் விக்கிரவாண்டியில் உள்ள பொறியியல் கல்லூரியிலும் அமலாக்கத் துறை சோதனை நடந்து வருகிறது.. இந்த சோதனைக்கு திமுக, அதன் கூட்டணிக் கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. நாடு முழுக்க பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஒரே அணியில் திரள முயலும் நிலையில், அதைத் தடுக்கவே மத்திய பாஜக அரசு அமலாக்கத்துறை பயன்படுத்துவதாகச் சாடி வருகின்றனர்.
எதற்காக இந்த சோதனையை நடத்துகிறார்கள் என்பது குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. இருப்பினும், சட்ட விரோத வெளிநாட்டு முதலீடுகள் விவகாரம் தொடர்பாக இந்த ரெய்டு நடத்தப்படுவதாகக் கூறப்படுகிறது. அதாவது 2008இல் அப்போது திமுக ஆட்சியில் இருந்த சமயத்தில் இந்தோனேசியா, ஐக்கிய அரபு நாடுகளில் உரிய அனுமதியில்லாமல் நடந்த முதலீடுகள் குறித்து சோதனை நடப்பதாகக் கூறப்படுகிறது.
காரில் இருந்த டைரி: சென்னை சைதாப்பேட்டையில் அமைந்துள்ள அமைச்சர் பொன்முடியின் வீட்டிலும் அதிகாரிகள் சோதனை நடத்தினர். அங்கே நின்று கொண்டிருந்த அமைச்சர் பொன்முடி காரிலும் அதிகாரிகள் சோதனை நடத்தினர். அதில் இருந்தும் டைரி உட்பட முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகக் கூறுகின்றனர். இருப்பினும், ரெய்டில் என்னவெல்லாம் கைப்பற்றப்பட்டது என்பது குறித்த தகவல்கள் சோதனை முடிந்த பின்னரே துல்லியமாகத் தெரியவரும்.
திமுக தலைவர்கள் பலரும் இந்த ரெய்டிற்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதற்கிடையே இது குறித்து அமைச்சர் மனோ தங்கராஜ் சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் கன்னியாகுமரி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார்.

அமைச்சர் மனோ தங்கராஜ்: அப்போது அங்கே பாளையத்தில் சாலைப் பணிகளைத் தொடங்கி வைத்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், "மேற்கு வங்கம் முதல் தமிழ்நாடு வரை எங்கெல்லாம் பாஜகவால் ஆட்சியைப் பிடிக்க முடியவில்லையோ.. அங்கெல்லாம் அவர்கள் உள்நோக்கம் மற்றும் குரோத பார்வையோடு அமலாக்கத் துறையைப் பயன்படுத்தி ரெய்டு நடத்துகிறார்கள். இதற்குக் காலம் நிச்சயம் பதில் சொல்லும்.
எதிர்க்கட்சிகள் மீது பாஜக குறுக்கு வழியில் நடவடிக்கை எடுத்து வருகிறது. திமுகவை அரசியல் ரீதியாக எதிர்கொள்ளும் எந்தவொரு சக்தியும் பாஜகவுக்கு கிடையாது. அமலாக்கத் துறை நடத்தும் சோதனையில் அரசியல் உள்நோக்கம் இருக்கிறது. இதைப் பொதுமக்களே கூறுகிறார்கள்" என்று அவர் தெரிவித்தார்.
கடந்த இரண்டு மாதங்களில் அமலாக்கத் துறை சோதனை நடத்தும் இரண்டாவது அமைச்சர் பொன்முடி ஆவார். முன்னதாக கடந்த மாதம் அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் அமலாக்கத் துறை, வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.
-
தமிழ்நாடே குளுகுளுவென மாறப்போகிறது.. 11 மாவட்டங்களில் இன்று கனமழை.. எந்தெந்த மாவட்டம்? -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்!












Click it and Unblock the Notifications