"நீட் விலக்கு மசோதா என்னாச்சு.." வந்து விழுந்த கேள்வி.. பதிலளிக்க மறுத்த மன்சுக் மாண்டவியா! பரபர
தமிழ்நாடு அரசு நீட் விலக்கு கோரி மசோதாவை ஒரு மனதாக நிறைவேற்றி ஒப்புதலுக்காக அனுப்பியுள்ளது.
சென்னை: சவுராஷ்டிரா தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சி குறித்த அறிவிப்பு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. அப்போது தமிழ்நாடு அரசு ஒரு மனதாக நிறைவேற்றி அனுப்பிய நீட் விலக்கு மசோதா குறித்த கேள்விக்கு அமைச்சர் நேரடியாகப் பதிலளிக்காதது பேசுபொருளாகியுள்ளது.
கடந்தாண்டு உத்தரப் பிரதேச மாநிலத்தில் காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சி நடைபெற்றது. வாரணாசியில் நடைபெற்ற இந்த தமிழ் சங்கம் நிகழ்ச்சியைப் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கிவைத்தார்.
இதில் பலரும் கலந்து கொண்ட நிலையில், தமிழ்நாட்டில் இருந்து சிறப்பு ரயில்களும் இயக்கப்பட்டன. இதற்கிடையே இப்போது அதேபோல சவுராஷ்டிரா தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சியை நடத்த முடிவு செய்துள்ளனர்.

சவுராஷ்டிரா தமிழ்ச் சங்கமம்
சவுராஷ்டிரா தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சி அடுத்த மாதம் 14ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை 10 நாட்களுக்கு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சிக்கான அறிவிப்பைச் சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா நேற்று சென்னையில் வெளியிட்டார். இதற்காகத் தனியாக இணையதளம் ஒன்று தொடங்கப்பட்ட நிலையில், அதையும் அமைச்சர் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், குஜராத் அமைச்சர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

திருச்சி என்ஐடி
மொத்தம் 10 நாட்களுக்கு இந்த சவுராஷ்டிரா தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. காசி தமிழ் சங்கத்தைப் போலவே இதற்கும் தமிழ்நாட்டில் இருந்து மக்களை அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்யப்படும். காசி தமிழ் சங்கமத்திற்குச் சென்னை ஐஐடி நிகழ்ச்சி செல்ல ஏற்பாடுகளைச் செய்திருந்த நிலையில், இந்த முறை திருச்சி என்ஐடி நிர்வாகம் இந்த போக்குவரத்து ஏற்பாடுகளைக் கவனிக்கும்.

சுகாதாரம்
காசி சங்கமத்தில் ஆன்மிகம் முன்னிறுத்தப்பட்ட நிலையில், இந்த முறை சுகாதாரம் முக்கியக் கருப்பொருளாக உள்ளது. இதற்காகத் தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளுடன் குஜராத் அரசு ஒப்பந்தங்கள் செய்துகொள்கிறது. இந்த அறிமுக நிகழ்ச்சிக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மன்சுக் மாண்டவியா, "மத்திய அரசும் குஜராத் அரசும் இணைந்து இந்த சவுராஷ்டிரா தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சியை நடத்துகிறது.

நீட் விலக்கு மசோதா
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கத் தமிழ்நாடு அரசு, முதல்வர் மற்றும் அமைச்சர்களுக்கு முறையாக அழைப்பு விடுக்கப்படும். இதில் பங்கேற்க விரும்புவோர் பதிவு செய்து கொள்ளலாம். 3000 பேரைத் தேர்வு செய்து இலவசமாக அங்கே அழைத்துச் செல்ல திட்டமிட்டுள்ளோம்" என்றார். அப்போது அங்கே இருந்த செய்தியாளர் ஒருவர் தமிழ்நாடு அரசு நீட் விலக்கு கோரி மசோதாவை நிறைவேற்றி அனுப்பியுள்ள நிலையில், அதன் நிலை என்ன என்று கேட்டார்.

பதிலளிக்க மறுப்பு
அதற்குப் பதிலளிக்க மறுத்த மன்சுக் மாண்டவியா, இது சவுராஷ்டிரா தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சி பற்றிய நிகழ்ச்சி என்றும் அது தொடர்பான கேள்விகளைக் கேட்கலாம் என்றும் பதிலளித்தார். மேலும், நாடாளுமன்றத்தில் அனைத்து விவகாரங்கள் குறித்தும் விவாதம் நடந்து வருகிறது என்றும் அவர் தெரிவித்தார். தமிழ்நாடு அரசு ஒரு மனதாக நிறைவேற்றி அனுப்பிய நீட் விலக்கு மசோதா குறித்த கேள்விக்கு அமைச்சர் நேரடியாகப் பதிலளிக்காதது பேசுபொருளாகியுள்ளது.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications