மார்க் பண்ணியாச்சு.. கல்பாக்கம் அணு உலை + 3 இடங்கள்.. தமிழ்நாட்டில் எங்கெல்லாம் போர் ட்ரில்?
சென்னை: சென்னை தலைமை செயலகத்தில் உள்துறை செயலாளர் தலைமையில் போர் ஒத்திகை நடைபெற உள்ளது தொடர்பாக ஆலோசனை நடைபெற்று வருகிறது.
தமிழ்நாட்டில் கல்பாக்கம் அணுமின் நிலையம், சென்னை விமான நிலையம், ஆவடி ராணுவ தளவாடம், மணலி பெட்ரோலிய நிறுவனம் ஆகிய நான்கு இடங்களில் போர் ஒத்திகை நிகழ்ச்சி நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
குறிப்பாக போர் பதற்ற சூழலின் போது மக்களை எப்படி பாதுகாப்பது மற்றும் வெளியேற்றுவது உள்ளிட்ட ஒத்திகைகள் நடத்த திட்டம் போடப்பட்டு உள்ளது.
போர் ஒத்திகை
போர்ச் சூழலில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து நாளை ஒத்திகை நடத்த, பல மாநிலங்களுக்கு ஒன்றிய அரசு கடிதம் அனுப்பியது. விமான தாக்குதல் அபாயச் சங்கு ஒலிக்க விடுவது, தாக்குதல் நடந்தால் மக்கள் பாதுகாப்பாக இருப்பதற்கான நடைமுறைகள் உள்ளிட்டவை ஒத்திகை பார்க்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இது தொடர்பாக மாநில அரசுகளுக்கு பின்வரும் கடிதத்தை மத்திய அரசு எழுதி உள்ளது.

போர் ஒத்திகை பயிற்சியின் முக்கிய விவரங்கள்
தேதி: மே 7, 2025
இடம்: உங்கள் மாநில அரசின் அதிகார வரம்பிற்குள் வகைப்படுத்தப்பட்ட அனைத்து சிவில் நகரங்கள்/மாவட்டங்கள்
ஒத்திகை பயிற்சியின் முதன்மை நோக்கங்கள் பின்வருமாறு:
விமானத் தாக்குதல் எச்சரிக்கை அமைப்புகளின் தாக்கத்தை மதிப்பிடுதல். அவர் எப்படி இருக்கின்றன, சரியாக இயங்குகிறதா? விமானங்கள் வருவதை முறையாக அறிவிக்கிறதா என்பதை மதிப்பிடுவது.
இந்திய விமானத்துடன் ஹாட்லைன்/ரேடியோ தொடர்பு இணைப்புகளை இயக்குதல். சோதனை செய்தல்.
படை கட்டுப்பாட்டு அறைகள் மற்றும் நிழல் கட்டுப்பாட்டு அறைகளின் செயல்பாட்டைச் சோதிப்பது.
எதிரி தாக்குதல் ஏற்பட்டால் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள சிவில் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து பொதுமக்கள், மாணவர்கள் போன்றோருக்கு பயிற்சி அளித்தல்.
விபத்து தடுப்பு நடவடிக்கைகளை வழங்குதல்.
முக்கியமான ஆலைகள்/நிறுவல்களை முன்கூட்டியே மறைப்பதற்கான ஏற்பாடுளை செய்தல்.
அவசர சேவைகள், தீயணைப்பு, மீட்பு நடவடிக்கைகள் மற்றும் கிடங்கு மேலாண்மை உள்ளிட்ட சிவில் பாதுகாப்பு சேவைகளின் செயல்பாடுகள் மற்றும் வேகத்தை கண்டுபிடித்தல் .
விபத்து தடுப்பு நடவடிக்கைகளை ஆய்வு செய்தல்.
பாதிக்கப்பட்ட இடங்களில் இருந்து வேகமாக செல்ல வெளியேற்றத் திட்டங்களை வகுத்தல் போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
மோடி தந்த பவர்
தீவிரவாதத்திற்கு அழிவு தரும் அடியை கொடுக்க உங்களுக்கு அதிகாரம் உள்ளது. இதற்கான முழு அதிகாரம் உங்களுக்கு தருகிறோம். இந்திய ஆயுதப் படைகளின் திறன்களில் எனக்கு முழு நம்பிக்கையை உள்ளது,. உங்களுக்கு ராணுவ தாக்குதல் திட்டமிடலில் முழு அதிகாரம், சுதந்திரத்தை தருகிறோம்., என்று பிரதமர் மோடி உத்தரவிட்டு உள்ளார்.
பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா முஹம்மது ஆசிப் அளித்த பேட்டியில், பாகிஸ்தான் மீது இந்தியா உடனடியாக பதிலடி தாக்குதல் நடத்த வாய்ப்புகள் உள்ளன. பாகிஸ்தான் படைகளை தயாராக இருக்க சொல்லி இருக்கிறேன். இந்தியா எப்போது வேண்டுமானாலும் தாக்கலாம் என்பதால் எங்கள் படைகளை பலப்படுத்தியுள்ளோம்.
இது போன்ற சூழ்நிலையில் சில மூலோபாய முடிவுகளை எடுக்க வேண்டும், எனவே அந்த முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. இந்தியா நம் மீது தாக்குதல் நடத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து பாகிஸ்தான் ராணுவம் எங்கள் நாட்டு அரசுக்கு விளக்கம் அளித்துள்ளது. இதை பற்றிய கூடுதல் விவரங்களை சொல்ல முடியாது. ஆனால் இந்திய ராணுவத்தின் தாக்குதல் ஊடுருவல் உடனடியாக நடக்க வாய்ப்புகள் உள்ளன, என்று பாக். பாதுகாப்பு அமைச்சர் கவாஜா முஹம்மது ஆசிப் பேசி உள்ளார்.
-
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
சிறகடிக்க ஆசை: முத்து- மீனா சொன்ன மகிழ்ச்சி செய்தி! கேக் கொடுத்து கொண்டாட்டம்! மனம் மாறிய விஜயா! -
முடியாதுனு முடியாது.. கட் அண்ட் ரைட்டாக பேசிய அண்ணாமலை! விடிய விடிய பேசிய கோயல்! கடைசி சான்ஸ்? -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்! -
அமெரிக்காவை ஏமாற்றிய டிரம்ப்.. எல்லாமே ஒரு லிமிட் தான்.. அடுத்து என்ன! உற்று பார்க்கும் உலக நாடுகள் -
குக் வித் கோமாளி 7 தொடங்கும் முன்பே பஞ்சாயத்து.. புகழ் பற்றி நெட்டிசன் போட்ட கமெண்டுக்கு வந்து விழுந்த அடி! -
இல்லத்தரசி கூப்பன்.. கிராமங்களில் உள்ளவர்களுக்கு செம சான்ஸ்.. ஸ்டாலின் மாஸ்டர்பிளான்? கசிந்த தகவல் -
திருச்சி ரோடு ஷோவில்.. வேனில் இருந்து எகிறி குதித்து ஓடிய விஜய்.. பதறிய பவுன்சர்கள்.. யாரந்த பெண்? -
அண்ணன் சொல்லிட்டாரு.. சட்டென களத்திற்கு வந்த பிரேமலதா.. இல்லத்தரசி கூப்பன் பற்றி செம அப்டேட்! -
ஆத்திரத்தின் உச்சியில் அண்ணாமலை..டெல்லியை ஆட்டி படைக்கும் அடிவருடிகள்! கருப்பு சிகப்பாகும் காவிகள்?












Click it and Unblock the Notifications