கார்த்தி குடும்பம் சர்ச்சையில் சிக்குவது இது முதல் முறையல்ல.. உண்மையில் என்ன நடந்தது.. கஸ்தூரி பதில்
சென்னை: திருப்பதி லட்டு விவகாரத்தில் நடிகர் பவன் கல்யாண் எச்சரிக்கை செய்த நிலையில், நடிகர் கார்த்தி மன்னிப்பு கேட்டார். இந்த விவகாரம் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள நடிகை கஸ்தூரி, சனாதன நடைமுறைகள் குறித்து கார்த்தியின் குடும்பம் சர்ச்சையில் சிக்குவது இது முதல் முறையல்ல. சபரிமலை குறித்த சிவக்குமார் சாரின் கருத்துகள் சம்பந்தப்பட்ட சம்பவங்களும், ஜோதிகாவின் கோவில் எதிர்ப்பு கருத்து பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது என்று கூறியுள்ளார்.
நடிகர் கார்த்தி, அரவிந்த்சாமி நடித்துள்ள மெய்யழகன் படம், தமிழ்,தெலுங்கில் வெளியாகிறது. இந்த படத்தின் தெலுங்கு புரமோஷன் நிகழ்வு ஹைதராபாத்தில் நேற்று நடந்தது. அப்போது நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து வழங்கிய பெண் தொகுப்பாளர், லட்டு குறித்து கார்த்தியிடம் கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு கார்த்தி பதில் அளிக்க மறுத்தார். எனினும், மீண்டும் மீண்டும் ஆங்கர் கேட்டதால், இது சென்செட்டிவ்வான விவகாரம், அதுபற்றி நாம் பேச வேண்டாம் என்று தெரிவித்தார். அப்போது சிரிப்பலை எழுந்தது.

இதுபற்றி செய்தியாளர்களிடம் பேசிய ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண்,"சினிமா நிகழ்வில் லட்டு குறித்தது கிண்டல் செய்வீர்களா என ஆவேசமாக கேள்வி எழுப்பினார்கள். திருப்பதி லட்டு விவகாரத்தில் சென்செட்டிவ் விவகாரம் என்று எப்படி கூறலாம்.. நடிகர்கள் என்பதற்காக தான் மரியாதை கொடுப்பதாகவும், ஆனால், சனாதான தர்மம் என வரும்போது பேசும் வார்த்தையை நூறு முறை யோசித்து பேச வேண்டும் என்றும் நடிகர் கார்த்தியை மறைமுகமாக விமர்சித்தார்.
இதையடுத்து உடனடியாக தான் பேசியதற்காக நடிகர் கார்த்தி மன்னிப்பு கேட்டார். அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், அன்புள்ள பவன் கல்யாண் அவர்களே, நான் உங்கள் மீது மிகுந்த மரியாதை வைத்திருக்கிறேன். . நான் பேசியது தவறாக புரிந்துகொள்ளப்பட்டிருந்தால் அதற்காக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். வெங்கடேஷ்வராவின் பக்தனாக நமது கலாச்சாரத்தை எப்போதும் கடைப்பிடிப்பேன்" என்று கூறியிருந்தார்.
நடிகர் கார்த்தியின் மன்னிப்பு குறித்து பலரும் தங்கள் சமூக வலைதளபக்கத்தில் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள். அந்த வகையில் நடிகை கஸ்தூரியும் பதிவிட்டுள்ளார். அந்த பதவில் அவர் கூறுகையில், " துணை முதல்வர் பவன் கல்யாணின் கடுமையான எச்சரிக்கைக்கு பிறகு, நடிகர் கார்த்தி சிவக்குமார் விரைவில் மன்னிப்பு கேட்டதோடு, தானும் வெங்கடேஸ்வராவின் பக்தன் என்று கூறியுள்ளார். கார்த்திக்கு தெலுங்கில் நல்ல ரசிகர் பட்டாளம் இருக்கிறது. அவருடைய படம் ரிலீஸ் ஆக இருக்கிறது என்பது புரிந்து கொள்ள முடியும். உண்மையில் என்ன நடந்தது தெரியுமா? இதை பாருங்கள்..
கார்த்தி, அரவிந்த் சுவாமி நடித்துள்ள மெய்யழகன் திரைப்படம் தெலுங்கில் சத்யம் சுந்தரம் என்ற பெயரில் வெளியாகிறது. இந்த படத்தின் ப்ரோமோஷன் நிகழ்வில், லட்டு மீம் ஒன்றை நிகழ்ச்சி ஏற்பட்டார்கள் கொண்டு வருகிறார்கள். லட்டு விவகாரத்தில் நிகழ்வு இயக்குனரும் தொகுப்பாளரும் என்ன நினைத்தார்கள் என்று தெரியவில்லை. நகைச்சுவை என்ற பெயரில் வந்தபிரச்சனையை நடிகர் கார்த்தி தவிர்க்க முயன்றார். ஆனால் அப்படி தவிர்க்க முடியாமல் தோல்வியடைந்தார்.
ஏனெனில் ஆங்கர் முட்டாள்தனமாக நடந்து கொண்டார். ஒரு கட்டத்தில் சிரித்தபடி கார்த்தி அந்த கேள்வியை கேலி செய்ய முற்பட, அனைவரும் சிரித்தனர். இது மோசமான நடவடிக்கை ஆகும். அவர் தீவிரமாக எதிர்வினையாற்றியிருந்தால், அல்லது ஆங்கரை எச்சரித்திருந்தால் அல்லது உண்மையாக தனது கவலையை வெளிப்படுத்தியிருந்தால், எந்த பிரச்சனையும் இதில் இல்லை. அவர் பிரச்சனையில் கருத்து சொல்லி சர்ச்சையாக்கூடடாது என்று நினைத்து பலரை காயப்படுத்தினார்.
சனாதன நடைமுறைகள் குறித்து கார்த்தியின் குடும்பம் சர்ச்சையில் சிக்குவது இது முதல் முறையல்ல. சபரிமலை குறித்த சிவக்குமாரின் கருத்துகள், சம்பந்தப்பட்ட சம்பவங்களும், ஜோதிகாவின் கோவில் எதிர்ப்பு கருத்து பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது. அதனால் இன்று அது தெளிவாகிவிட்டது.
தஞ்சை பிரகதீஸ்வர கோவிலைப் பற்றியோ, சபரிமலையைப் பற்றியோ பேசிவிட்டு நீங்கள் தப்பிக்கலாம். ஆனால் திருப்பதி வெங்கடேஸ்வர ஸ்வாமி பக்தர்களுடன் நீங்கள் குழப்பம் செய்ய முடியாது. ஆந்திராவில் இந்து எதிர்ப்புக்கு வரவேற்பு இல்லை. ஓம் நமோ வெங்கடேசாய" இவ்வாறு நடிகை கஸ்தூரி கூறியுள்ளார்.
-
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சிறகடிக்க ஆசை : கண்ணீர் விட்டு அழுத மனோஜ்.. இவருக்கா இந்த நிலைமை? முத்து மீனா செய்த செயல்! கதையே மாறுது -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
Illatharasi: இல்லத்தரசிகளுக்கு ரூ 8000! திமுக கூப்பனில் பிரிட்ஜ், வாஷிங் மெஷின் வாங்க முடியுமா? -
சிறுசேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்தவர்களுக்கு சூப்பர் சர்ப்ரைஸ்.. ஏப்ரல் 1 மத்திய அரசின் அதிரடி -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல் -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications