தாவி வந்த தங்கத்துக்கு இதெல்லாம் கொடுக்க போகுதாமே திமுக.. பரபரக்கும் டீல்

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    சென்னை: ஸ்டாலின் மட்டுமே தமிழகத்துக்கு நல்லது செய்யவார்..! திமுகவில் சேர்ந்ததும் ஸ்டாலினுக்கு ஐஸ் வைத்த தங்க தமிழ்செல்வன்...

    சென்னை: ஸ்கெட்ச் போட்டு தூக்கிய தங்க தமிழ்செல்வனுக்கு திமுகவில் அப்படி என்ன பொறுப்பு தரப்போகிறார்கள்? என்ன சொல்லி அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டிருக்கும்? என்பது பிரதான யோசனையாக உள்ளது.

    திமுகவில் முன்பை விட நிறைய மாற்றம் இருக்கு. முன்பெல்லாம் கட்சியில் இருந்து விலகி மீண்டும் இணைந்தாலோ, அல்லது மாற்று கட்சியில் இருந்து வந்தாலும், அவர்கள் பெரும்பாலும் கவனிக்கப்பட மாட்டார்கள்.

    இதற்கு உதாரணமாக தமிழ்க்குடிமகன், முல்லைவேந்தன் முதல் பரிதி இளம் வழுதி வரை சொல்லலாம். ஆனால் இப்போது அப்படி இல்லை. நம்பி வந்தவர்களை கைவிட மாட்டோம் என்ற உறுதியை திமுக ஏற்படுத்தி வருகிறது.

    வடசென்னை

    வடசென்னை

    என்றைக்கு சேகர் பாபு திமுகவில் இணைந்தாரோ அப்போது முதலே மாற்றம் ஆரம்பித்துவிட்டது. சிறந்த உழைப்பாளியான சேகர்பாபு திமுகவில் இணைந்தது வட சென்னை பகுதியில் கட்சிக்கு பெரிய பலமாக உள்ளது.

    கலைராஜன்

    கலைராஜன்

    அதுபோலவே நம்பி வந்த செந்தில் பாலாஜிக்கும் மாவட்ட பொறுப்பாளர் பதவியை கொடுத்து அசத்தியது திமுக. இப்போது மறுபடியும் எம்எல்ஏவும் ஆகி விட்டார். அதனால் தங்க தமிழ்செல்வனுக்கு என்ன பொறுப்பு தரப்படும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. செந்தில்பாலாஜி, கலைராஜனை போலவே முக்கிய புள்ளிதான் தங்க தமிழ்செல்வன்.

    அழகிரி

    அழகிரி

    அன்று தென்மாவட்டத்தில் பலமாக அழகிரி இருந்தார். இன்று அந்த இடத்துக்கு தங்க தமிழ்செல்வனை வைத்து அழகு பார்க்க திமுக நினைக்கிறது. திமுக பக்கம் இழுக்க பேச்சுவார்த்தை நடக்கும்போதே, முக்கிய பொறுப்பு தரப்பட வேண்டும் என்ற டீல் பேசிதான் ஆரம்பித்தாராம் தங்க தமிழ்செல்வன்.

    அமைச்சர் பதவி?

    அமைச்சர் பதவி?

    அதனால் எப்படியும் அமைச்சர் பதவி அல்லது மாவட்டப் பொறுப்பாளர் பதவி தரப்படும் என தெரிகிறது. ஒருவேளை இரண்டையும் சேர்த்து தங்க தமிழ்செல்வனுக்கு தந்தாலும் ஆச்சயரியப்படுவதற்கு இல்லையாம். இதெல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும், "என்ன தான் நடக்குது.. எங்க கிட்டயும் ஒருவார்த்தை கலந்து பேசி இருக்கலாமே" என்று தேனி நிர்வாகிகள் புலம்பி வருகிறார்களாம்.

    கமுக்கம்

    கமுக்கம்

    அதாவது தேனி மாவட்ட திமுக நிர்வாகிகளுக்கு தங்கம் குறித்த தகவல்களையும், டீலையும் கட்சித் தலைமை சரிவர தெரிவிக்காமல் கமுக்கமாக பேசி முடித்துள்ளதாக சொல்லப்படுகிறது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+