சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஸ்டாலினிடம் கிசுகிசுத்த 3 பேர்.. "39-ஐயும் தூக்கிடலாம்".. முதல்வருக்கு முகமெல்லாம் பூரிப்பு..!

ஸ்டாலின் தமிழக வளர்ச்சிக்கான நிறைய திட்டங்களை செயல்படுத்த உள்ளாராம்

Google Oneindia Tamil News

சென்னை: நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முடிவானது, திமுக மேலிடத்தை உற்சாகத்தில் ஆழ்த்தி உள்ளது.. இதனால், அடுத்தடுத்த சில நல்ல காரியங்களை, முதல்வர் ஸ்டாலின் கையில் எடுக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

இந்த தேர்தலின் ரிசல்ட் எதிர்பார்த்த முன்கூட்டியே ஓரளவு ஒன்றுதான் என்றாலும் இந்த அளவுக்கு எதிர்பார்க்கவில்லை.. திமுகவின் வெற்றியாக இருந்தாலும் சரி, அதிமுகவின் தோல்வியாக இருந்தாலும் சரி.

உக்ரைன் பதுங்கு குழியில் கதறிய தமிழர்கள்! பயண செலவை தமிழக அரசே ஏற்கும்! ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு உக்ரைன் பதுங்கு குழியில் கதறிய தமிழர்கள்! பயண செலவை தமிழக அரசே ஏற்கும்! ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு

இதுவரை வெற்றி பெறாத அதிமுகவின் கோட்டைகளை எல்லாம் திமுக அசால்ட்டாகவே வென்றெடுத்துள்ளது.. இது திமுகவின் வரலாற்று வெற்றியாகவே பார்க்கப்பட்டு வருகிறது.

மகிழ்ச்சி

மகிழ்ச்சி

இந்த வெற்றியை திமுக தொண்டர்கள் கொண்டாடி தீர்த்து வருகிறார்கள்.. மற்றொரு பக்கம் கூட்டணி கட்சிகளோ, மேயர், துணை மேயர் பதவிகளை குறி வைத்து காய் நகர்த்த தொடங்கிவிட்டனர்.. இப்படிப்பட்ட சூழலில்தான், விரைவில் எம்பி தேர்தல் வரஉள்ளநிலையில், அடுத்தக்கட்டத்துக்கு திமுக நகர தொடங்கி உள்ளது.. அந்த வகையில் ஒருசில தகவல்கள் கசிய தொடங்கி உள்ளன.. தேர்தலில் வெற்றி பெற்றதையடுத்து, அறிவாலயத்தில், மூத்த அமைச்சர்களும், எம்பிக்கள், நிர்வாகிகளும் முதல்வர் ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார்கள்.

 விவாதம்

விவாதம்

அப்போது தேர்தலில் பதிவான திமுகவின் ஓட்டு சதவீதம் குறித்து அவர்களிடம் ஸ்டாலின் விவாதித்திருக்கிறார்.. அதில் கொங்கு மண்டலம் பற்றின பேச்சுதான் நிறைய இருந்ததாம்.. கொங்கு மண்டல வெற்றியையே ஸ்டாலின் நீண்ட நேரம் பேசினாராம்.. மிகுந்த மகிழ்ச்சியில் அப்போது காணப்பட்டதாகவும் தெரிகிறது.. அந்த நேரத்தில் ஒரு சீனியர் அமைச்சர், இதே வெற்றியை டார்கெட் செய்து நடந்தால், வரப்போகும் எம்பி தேர்தலில் 39 சீட்டையும் ஜெயிச்சிடலாம் என்றாராம்.

 சீனியர் அமைச்சர்

சீனியர் அமைச்சர்

அதற்கு இன்னொரு சீனியர் எம்பி, இந்த வெற்றிக்கு எல்லாம் காரணம் கூட்டணி கட்சிகளின் ஒத்துழைப்பும்தான். கூட்டணி கட்சிகளின் ஓட்டுக்களும் நம்மை கை தூக்கி விட்டுள்ளன என்றாராம்.. உடனே மற்றொரு சீனியர் தலைவர், இனி நாம வளர்ச்சி பணிகளில் கவனம் செலுத்தணும்.. தமிழகத்தில் நாம் கொண்டு வரப்போகும் வளர்ச்சியானது தேசிய அளவுக்கு பேசப்பட வேண்டும் என்றாராம்.. அமைதியாக கேட்டுக் கொண்டிருந்த முதல்வர், சீனியர்கள் சொன்ன கருத்துக்களை ஆமோதித்திருக்கிறார்.

 ஸ்டாலின் நம்பிக்கை

ஸ்டாலின் நம்பிக்கை

இந்த முறை பிரச்சாரத்தில் திமுக வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளையும் விரைவில் கட்சி மேலிடம் களைய போவதாக தெரிகிறது.. முடிந்தவரை விமர்சனத்தை தவிர்த்தால், அது நிச்சயம் வரப்போகும் தேர்தலில் எதிரொலிக்கும் என்றும் பலமாக நம்புகிறது.. ஏற்கனவே பாஜக, எம்பி தேர்தலை கணக்கு செய்து அதிரடியில் குதித்துவிட்ட நிலையில், திமுகவும் தன்னை தயார் செய்து கொள்ள களமிறங்குகிறது..

English summary
What senior ministers told MK Stalin and is DMK going to focus on MP elections
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X