உங்க வீட்ல கரண்ட் போச்சுன்னா சீக்கிரமா வருவதற்கு யோசிக்காம இதை பண்ணுங்க!
சென்னை: உங்கள் வீட்டில் கரண்ட் போச்சுன்னா மின்சாரம் சீக்கிரம் கிடைக்க என்ன செய்ய வேண்டும் தெரியுமா? அது போல் சில நேரங்களில் மின் ஊழியர்கள் உடனே மின் தடையை சரி செய்யாததற்கு காரணம் குறித்தும் தகவல்கள் கிடைத்துள்ளன.
வீடுகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டால் பெரும்பாலானோர் மின்சார ஊழியர்களை கரித்து கொட்டி விடுவார்கள். அதிலும் கோடை காலங்கள், இரவு நேரங்களில் மின் தடை ஏற்பட்டுவிட்டால் சொல்லவே வேண்டாம்.

அதிலும் மழை காலங்கள், காற்று அடிக்கும் நேரங்களில் கூட மின்சாரம் இல்லாவிட்டால் அவ்வளவுதான். அவர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டாலும் பரவாயில்லை, இவர்கள் ஏசி காற்றில் சொகுசாக வாழ வேண்டும் என நினைக்கிறார்கள்.
அவர்களும் மனிதர்கள்தான். அவர்களுக்கும் குடும்பம் இருக்கிறது என்பதை உணராமல் அவதூறாக பேசுவதை தவிர்க்க வேண்டும். ஒரு வேளை உங்கள் வீட்டில் மின்சாரம் இல்லாவிட்டால் மீண்டும் கரண்ட் வருவதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
இதுகுறித்து மின் வாரிய ஊழியருக்கும் சாமானியருக்கும் இடையே நடக்கும் உரையாடல் போல் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. அது குறித்து பார்ப்போம். இரவு கரண்ட் இல்லாததால் அவதிப்பட்ட வாடிக்கையாளர், மின் வாரிய ஊழியரிடம் கோபமாக பேசுகிறார்.
அதற்கு அந்த ஊழியர், "சார் நீங்கள் கால் செய்தது இன்டிவிஜுவல் ப்யூஸ் ஆப் கால் என்கிறார். நாங்கள் உடனடியாக மின் இணைப்பை சரி செய்ய வராததற்கு பல காரணங்கள் உள்ளன. உங்கள் வீட்டில் மட்டும் ப்யூஸ் போனது என்றால் அதை இன்டிவிஜுவல் ப்யூஸ் ஆப் கால் என சொல்வார்கள். கிராமப்புறங்களில் மாலை 6 மணிக்கு பிறகும் நகர்ப்புறங்களில் 7 மணிக்கு பிறகும் நாங்கள் அந்த மாதிரி புகார்களை நிவர்த்தி செய்யக் கூடாது.
இது அரசின் விதி. 6 மணிக்கு உங்கள் வீட்டில் கரண்ட் இல்லை என்றால், 6 மணிக்குத்தான் தெரு விளக்குகளை ஆன் செய்வோம். இந்த வெளிச்சத்தில்தான் சாலையில் போக்குவரத்து நடக்கிறது. உங்கள் வீட்டில் இருக்கும் பிரச்சினைக்காக நான் ஏறுவதற்கு முன்பு எல்லா லைன்களையும் ஆஃப் செய்ய வேண்டும். இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்படும்.
எனவே இதை தவிர்க்க இன்டிவிஜுவல் ப்யூஸ் ஆப் கால்களை எப்படி நிவர்த்தி செய்யலாம் என்பதை முன்கூட்டியே யோசித்து அதை பார்ப்போம். இப்போது ஆள் பற்றாக்குறையும் அதிகமாக இருக்கிறது. ஒரு வேளை ஒரே ஏரியாவில் எல்லா இடங்களிலும் மின் துண்டிப்பு ஏற்பட்டிருந்தால், மின்சாரம் கிடைக்க என்னென்ன சாத்தியக்கூறுகள் இருக்கின்றன என்பதை பார்த்து உடனே பவர் சப்ளை கொடுத்துவிடுவோம் என்றார்.
அதற்கு அந்த வாடிக்கையாளர், சரி போன வாரம் மழைநேரத்தில் பகல் நேரத்தில் போன் செய்த போது யாருமே வரவில்லை என்றார். அதற்கு அந்த ஊழியர், உங்கள் குழந்தை ஈரக்கையுடன் சுவிட்ச் போர்டில் கை வைத்தால் என்ன செய்வீங்க என கேட்டார். அதற்கு அந்த வாடிக்கையாளர் "ஈரக்கையுடன் சுவிட்சை போட்டால் குழந்தையை போடக் கூடாது என அதட்டுவோம்" என்கிறார்.
அதற்கு மின்சார ஊழியர், "சுவிட்ச் தானே சார் ஏன் திட்டுறீங்க" என்கிறார். அதற்கு அந்த வாடிக்கையாளர், "ஏம்ப்பா குழந்தை ஈரக்கையுடன் சுவிட்சை தொட்டால் ஷாக் அடிக்கும்" என்கிறார். அதற்கு அந்த ஊழியர், எங்களுக்கும் அப்படித்தானே சார் ஷாக் அடிக்கும். மழை பெய்த நேரங்களில் என்னதான் மெயின் ஆஃப் செய்தாலும் எர்த் வரும், கம்பங்கள் வழுக்கும்.
இதனால் நிறைய பேர் உயிரிழந்துள்ளனர். இதனால்தான் நாங்கள் கம்பங்கள் காய்ந்தவுடன் வருகிறோம். எனவே கரண்ட் எப்போது போனாலும் எத்தனை மணி ஆனாலும் 9498794987 என்ற எண்ணுக்கு போன் செய்யுங்கள் என்றார். இப்படித்தான் பலர் மின் வாரிய ஊழியர்களின் கஷ்டங்களை புரியாமல் விமர்சிக்கிறார்கள்.












Click it and Unblock the Notifications