ரொம்ப ரிஸ்க்.. சென்னை டூ பெங்களூர் அதிகாலை பயணம் செய்யுறீங்களா? கவனம்.. இதை நோட் பண்ணுங்க
சென்னை: சென்னை - பெங்களூர் சாலையில் அதிகாலையில் நடக்கும் சம்பவம் தொடர்பான ரீல்ஸ் ஒன்று இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.
சென்னை - பெங்களூர் சாலையில் தினமும் பல லட்சம் பேர் பயணம் செய்கிறார்கள். அந்த வகையில் கடந்த சில நாட்களாக இந்த சாலையில் கடுமையான பனிமூட்டம் நிலவி வருகிறது. முக்கியமாக கடந்த சில நாட்களுக்கு முன் சென்னையில் கடுமையான பனிமூட்டம், புகைமூட்டம் சமீபத்தில் ஏற்பட்டது.

சென்னையின் பல பகுதிகளில் பக்கத்தில் இருப்பதை கூட பார்க்க முடியாத அளவிற்கு கடுமையான புகைமூட்டம் ஏற்பட்டது. இந்த புகைமூட்ட பாதிப்பு தற்போது சென்னை - பெங்களூர் சாலையிலும் ஏற்பட்டு வருகிறது. இதனால் சென்னை - பெங்களூர் சாலையில் பயணம் செய்வது கடுமையான சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.
முக்கியமாக வாகனங்கள் தங்களுக்கு முன்னால் இருப்பதை கூட பார்க்க முடியாத அளவிற்கு கடுமையான பனிமூட்டம் ஏற்பட்டு வருகிறது. சமீபத்தில் ஒரு வாரத்தில் மட்டும் இந்த சாலையில் 3க்கும் மேற்பட்ட விபத்துகள் ஏற்பட்டு உள்ளன. இதனால் அடுத்த சில நாட்களுக்கு இந்த சாலையில் 10 மணிக்கு பின்பாக பயணம் செய்வதே சரியானது என்று மக்கள் பலரும் தெரிவித்து வருகின்றனர்.
ஏற்கனவே பெங்களூர் -சென்னை எக்ஸ்பிரஸ் விரைவுச் சாலையின் கர்நாடகப் பகுதி முழுமையடைந்து போக்குவரத்திற்காக திறக்கப்பட்டுள்ளது. ஆனால் இங்கே பாதுகாப்பற்ற சூழல் நிலவி வருகிறது.
இந்த சாலை பகுதியில் போதிய விளக்குகள் இன்னும் பொருத்தப்படவில்லை. ஒரு பக்கம் பணிகள் வேறு நடக்கின்றன. அதேபோல் பொட்டல் காடாக இருப்பதால் இரவு நேரத்தில் பாதுகாப்பற்ற சூழல் உள்ளது. தற்போது கர்நாடக பகுதி மக்களால் இது நீண்ட டிரைவ்களுக்கும் ஜாலி ரைடுகளுக்கும் பயன்படுத்தப்படுகிறது. ஆந்திரப் பிரதேசம் மற்றும் தமிழ்நாட்டில் இன்னும் முடிக்கப்படாத 260 கிமீ விரைவுச் சாலை ஆகஸ்ட் 2025 க்குள் முழுமையாகச் செயல்படத் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
71 கிலோமீட்டர் நீளமுள்ள கர்நாடகப் பகுதி திறந்திருப்பதால், விரைவுச் சாலையைச் சுற்றி வசிக்கும் உள்ளூர் மக்களும், சாலை முடியும் வரை நீண்ட தூரம் சென்று திரும்பி வந்தவர்களும் இதைப் பயன்படுத்துகின்றனர்.
ஹோஸ்கோட் அருகே ஜின்னகெரா கிராஸில் உள்ள ஒரு கோயில் காரணமாக இங்கே பணிகள் தாமதமாக நடந்தது. கோவில் இடமாற்றம் செய்யப்பட்டு, 400 மீட்டர் தூரம் சாலை அமைக்கும் பணி தற்போது முடிவடைந்தது. இதையடுத்து சாலை மக்களுக்காக திறக்கப்பட்டுள்ளது. சில சிறிய பணிகளைத் தவிர மற்ற பணிகள் எல்லாம் முடிந்துவிட்டது .
விரைவுச்சாலையில் மாலூர், பங்கார்பேட்டை மற்றும் பெத்தமங்களாவில் வெளியேறும் கிளை சாலைகள் உள்ளன. முழு நீளமும் இன்னும் முடிவடையாததால், டோல் சார்பாக எந்த கட்டணத்தையும் வசூலிக்கவில்லை. இந்த விரைவுச் சாலையை இப்போது உள்ளூர்வாசிகள் மற்றும் நீண்ட தூரம் செல்பவர்கள் பயன்படுத்துகின்றனர்.
இந்த விரைவுச்சாலையானது கர்நாடகா, ஆந்திரா மற்றும் தமிழ்நாடு ஆகிய மூன்று மாநிலங்கள் வழியாகச் செல்கிறது மற்றும் அதிகபட்ச வேக வரம்பு மணிக்கு 120 கி.மீ என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. பெங்களூரு மற்றும் சென்னை இடையேயான பயண நேரத்தை இப்போது 6 மணி நேரத்திற்கும் மேலாக உள்ள பயண நேரத்தை மூன்று மணி நேரத்திற்குள் குறைக்க முடிவு செய்துள்ளனர்.
இந்த நான்கு வழிச்சாலையின் கட்டுமானம் கர்நாடகாவில் மூன்று தொகுப்புகளாக பிரிக்கப்பட்டு உள்ளது.
தொகுப்பு 1: ஹோஸ்கோட் மற்றும் மாலூருக்கு இடையே, 27.1 கி.மீ.
தொகுப்பு 2: மாலூர் மற்றும் பங்கார்பேட்டை இடையே 27.1 கி.மீ
தொகுப்பு 3: பங்கார்பேட்டை மற்றும் பெத்தமங்களா இடையே 17.5 கி.மீ












Click it and Unblock the Notifications