Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அவசரத்திற்கு நண்பர்கள், உறவினர்களுக்கு கடன்.. திரும்ப வாங்க முடியவில்லையா.. என்ன செய்யலாம்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: அவசரத்திற்கு நண்பர்கள், உறவினர்களுக்கு கடன் கொடுக்க போகிறீர்களா? அல்லது அவசரத்திற்கு நண்பர்கள், உறவினர்களுக்கு கொடுத்த கடனை திரும்ப வாங்க முடியவில்லையா... இரண்டு தரப்புக்குமே இது நிச்சயம் உதவியாக இருக்கலாம். நண்பர்கள் கேட்கிறார்களே என்று தன்னால் தாங்கி கொள்ள முடியாத கடனை பிறரிடம் சிலர் வாங்கி தர வேண்டிய நிலையில் இருப்பார்கள். சிலர் அப்படி கடன் வாங்கி கொடுத்துவிட்டு வாங்க முடியாமல் தவிப்பார்கள். அவர்கள் என்ன செய்யலாம் என்று பார்ப்போம்.

இன்றைக்கு கடன் வாங்கியவர்களைவிட கடன் கொடுத்தவர்களே கலங்கி நிற்கிறார்கள். வங்கிகள், நிதி நிறுவனங்கள் எல்லாம் சொத்து, சம்பளம்,சிபில் ஸ்கோர், சொத்து விவரம் என அனைத்தையும் தெரிந்து தான் கடன் கொடுக்கின்றன. அப்படி கொடுத்த கடன் வராவிட்டால், அந்த கடன் தொகைக்கு ஈடாக சொத்தை பறிமுதல் செய்கிறது.

loan personal loan home loan mortgage loan

சொத்தின் பெயரில் அல்லது தங்க நகையின் பெயரில் தான் கடன் தருகிறது. தனிநபர் கடனை பொறுத்தவரை, நல்ல சிபில் ஸ்கோர், நாணயமானவர், மாதம் மாதம் நல்ல சம்பளம் வாங்குவோர் மற்றும் கடனை முறையாக திரும்பி செலுத்தியவர்களுக்கே தரப்படுகிறது. அப்படியே அவர்கள் கடனை தராவிட்டாலும், தனிநபர் கடனுக்கு காப்பீடு கட்டாயம் என்று பணம் வசூலிக்கப்படுவதால், கடனை திரும்ப செலுத்தாவிட்டாலும், வங்கிகள் இன்சூரன்ஸ் மூலம் கடன் தொகையை வசூலித்து விடுகின்றன.

பல கோடி கையிருப்பு வைத்துள்ள வங்கிகள், நிதி நிறுவனங்கள், பெரிய பைனான்சியர்கள் யாருமே இவற்றை பார்க்காமல் கடன் தருவது இல்லை.. ஆனால் நம்ம ஊர்களில் ஒரு பங்களா வீடு வைத்திருந்தால், 50 ஆயிரம் தொடங்கி 50 லட்சம் வரை கடன் தருகிறார்கள். அதிலும் மாதம் மாதம் இரண்டு மாதம் தொடர்ந்த வட்டியை திரும்ப தருகிறார் என்றால், ஓடிப்போய் முதல் வரிசையில் நின்று கடனை தருகிறார்கள்.

அவரும் கடனை முடிந்த வரை வாங்கிவிட்டு, அதில் பெயருக்கு சில மாதங்கள் கடனுக்கு வட்டியை கொடுத்து விட்டு, பல லட்சம் பணத்தை சுருட்டுவார். இறுதியாக ஊரை விட்டு எஸ்கேப் ஆகிவிடுவார். அல்லது தனது சொத்தை மனைவி, உறவினர்கள் பெயரில் எழுதி வைத்துவிட்டு, பணமே இல்லை என்று மஞ்சள் நோட்டீஸ் விடுவார். இல்லை என்றால் கடனை திரும்ப தர முடியவில்லை என்று கூறி எழுதி வைத்துவிட்டு இறந்துவிடுவார்கள். இதனால் கடன் கொடுத்தவர்கள், கடனை வாங்கியவரிடம் வசூலிக்க எதுவுமே இல்லாமல் தவிப்பார்கள்.

இந்த பிரச்சனைக்கு ஒரே தீர்வு கடன் கொடுக்காமல் இருப்பது தான். எவ்வளவு பணம் வைத்துள்ளவர் என்றாலும், எவ்வளவு சொத்து இருந்தாலும், கடன் கேட்டு வந்தால் தயவு செய்து மறுத்து விடுங்கள். இன்றைய சூழலில் கடன் வாங்க தகுதி உள்ளவர்களால் வங்கிகள், நிதி நிறுவனங்களில் அவர்களால் எளிதாக கடன் வாங்கி கொள்ள முடியும். அங்கேயே அவர்களால் வாங்க முடியாவிட்டால், ஏதோ வில்லங்கம் இருக்கிறது என்று முடிவு செய்து கொள்ளுங்கள். கிராமங்களில் சிலர், அதிக வட்டி கிடைக்கும் என்ற ஆசையில், நகையை வங்கியில் அடகு வைத்து 5 லட்சம், 10 லட்சம் எல்லாம் கடன் கொடுத்து ஏமாந்துள்ளார்கள். இன்றும் பலர் ஏமாந்து வருகிறார்கள். தங்கள் வாழ்நாள் சேமிப்பை கடனாக கொடுத்து ஏமாற வேண்டாம்.மீறி கடனை வசூலிக்க நீங்கள் கந்துவட்டி சட்டத்தில் சிறைக்கு போக வேண்டியதிருக்கும். ஏனெனில் கந்துவட்டிக்கு கடன் கொடுக்க அனுமதியில்லை.

அதேநேரம் தெரிந்தவர்கள், உறவினர்களுக்கு அவசரத்துக்கு கடன் கொடுத்துவிட்டு திரும்ப வாங்க முடியாமல் பலரும் தவிக்கிறார்கள். கடன் வாங்கியவர்கள், நிதி நெருக்கடி காரணமாக தராமல் போவதால் பலர் மனஉளைச்சலுக்கு ஆளாகும் நிலை அதிகரித்து வருகிறது. பணத்தை திரும்ப வாங்குவதற்கு மிக சிறிய அளவில் தான் நடைமுறைகள் உள்ளன. ஏனெனில் தற்போதைய நிலையில் கடனை வேண்டுமென்றே திரும்ப கொடுக்காமல் ஏமாற்றினால், சட்ட ரீதியாக நிவாரணம் பெறுவது எளிதானது கிடையாது.

போலீஸ் ஸ்டேசனில் போய் நீங்கள் புகார் கொடுத்தால், சிவில் விவகாரம் என்பதால் தலையிட மாட்டார்கள். இதற்கு நீதிமன்றத்தில் போய் வழக்கு தொடர வேண்டும். பணம் கொடுத்தது உண்மை என்பதற்கான ஆதாரம் வேண்டும். அதேபோல் பணத்தை திரும்பத்தரவில்லை என்பதை நிரூபிக்க வேண்டும். கந்துவட்டிக்கு பணம் தரவில்லை என்பதை உறுதி செய்ய வேண்டும். இவை எல்லாம் ஓகே என்றாலும், கடன் வாங்கியவர் பணம் கொடுக்கும் நிலையில் இருந்தால் தான் வாங்க முடியும். பணத்தை தர முடியாத அளவிற்கு கைவிரித்தால் ஒன்றுமே செய்ய முடியாது...

அதேநேரம் வழக்கு தொடரப்போகிறீர்கள் என்றால், நீங்கள் கடன் கொடுத்தவருக்கு பணத்தை ஆன்லைன் வாயிலாக கொடுத்திருந்தால் வழக்கு தொடர எளிதாக இருக்கும். இதேபோல் நீங்கள் பணம் கொடுத்தது தொடர்பான தொலைப்பேசி உரையாடல் தேதி மற்றும் நேரமும் மிக முக்கியமானதாகும். நீங்கள் வட்டி வாங்கும் நோக்கத்தோடு பணம் தரவில்லை என்பது உறுதி செய் கொள்ளுங்கள். இவை சரியாக இருந்தால் இந்திய ஒப்பந்தச் சட்டம் 1872-படி நீங்கள் யாருக்கு கடன் கொடுத்தீர்களோ அவர்கள் மீது வழக்கு தொடரலாம். இந்திய ஒப்பந்தச் சட்டம் உட்பிரிவு 2 (ஹெச்)-ன்படி, செயல்படுத்தக்கூடிய ஒவ்வோர் உடன்படிக்கை மற்றும் வாக்குறுதி என்பது ஒப்பந்தமாகும். இதன்படி, சிவில் கோர்ட்டில் அவர் மீது வங்கி கணக்குகளை காட்டி வழக்கு தொடரலாம்.

இறுதியாக இன்றைக்கு கடன் விவகாரங்களில் மோசமான தவறு என்றால், மற்றவர்களுக்கு உதவி செய்வதாக நினைத்து தகுதிக்கு மீறி கடன் தருவது தான். தகுதிக்கு மீறி யாருக்கும் கடன் கொடுக்காமல் இருப்பதே சிறந்தது. அதையும் மீறி கடன் தர வேண்டும் என்றால், சொத்து இருந்தால் கடன் தரலாம். அதை இத்தனை நாளில் தராவிட்டால், சொத்து உங்களுக்கு சொந்தம் என்று பத்திரப்பதிவு செய்து கடன் தரலாம்.. இல்லை நம்பிக்கையின் பெயரில் தான் கடன் தரப்போகிறீர்கள் என்றால், அதுவும் உங்களுடைய நெருங்கிய நணபர்கள் உறவினர்கள் என்றால்,மிகக்குறைந்த அளவு பணம் தரலாம். அதுவும் திரும்ப வரும் என்ற மனநிலையில் கடனை தர வேண்டாம். அந்த பணம் திரும்ப வராது என்ற மனநிலையில் கடன் கொடுப்பதாக இருந்தால் தாராளமாக கொடுக்கலாம். வட்டிக்கு மட்டும் எந்த காரணம் கொண்டும் கடன் கொடுக்க வேண்டாம்.. இறுதியாக.. யாருக்கும் கடன் கொடுக்காமல் இருப்பதே சாமானியர்களுக்கு நல்லது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+