"மசாஜ்".. 2 மேட்டர்கள்.. பக்கா பிளானை போட்டு பகீரை கிளப்ப போகும் "தலைகள்".. திமுகவே எதிர்பார்க்கல
திமுகவுக்கு எதிராக பாஜக, அதிமுக எடுத்து வைக்க போகும் அதிரடிகள் என்னென்ன
சென்னை: அதிமுக - பாஜகவும் திமுகவுக்கு எதிராக காய் நகர்த்த ஆளுக்கொரு பக்கம் 2 விவகாரங்களை கையில் எடுத்துள்ளனராம்.. இதை திமுகவே கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லையாம்.. எனினும், இதையும் முறியடிக்கும் முயற்சியில் களமிறங்கி உள்ளதாகவே கூறப்படுகிறது.
விரைவில் எம்பி தேர்தல் வரப்போகிறது.. இதற்காக இப்போதே தேசிய அரசியல் தயாராகி வருகிறது.. அந்த வகையில் தமிழகத்திலும் பிரதான கட்சிகள் மும்முரமாகிவிடட்டன.
திமுக அரசு, மக்களுக்கான அறிவிப்புகளை வெளியிட்டும், வாக்குறுதிகளை நிறைவேற்றும் முயற்சியிலும் இறங்கிவிட்டது.. தமிழகத்துக்கு வர வேண்டிய நிதிகள் எவையும் டெல்லியில் இருந்து இன்னமும் கிடைக்கப்பெறாத நிலையில், ஒருவழியாக சமாளித்து கொண்டிருக்கிறது.

ஆளுநர் ரவி
மற்றொரு புறம், டெல்லியை ஒரேடியாக பகைத்து கொள்ளாமல், ஆளுநர் விஷயம் உட்பட அனைத்திலுமே அடக்கி வாசித்தும், பாஜக தலைவர்களுடன் இணக்கத்தை பேணியும் வருகிறது.. ஆனால், அதிமுக, பாஜக போன்ற எதிர்க்கட்சிகள், திமுகவை குற்றஞ்சொல்லியும், விமர்சித்தும், தங்களது அரசியலை நகர்த்தி வருகின்றன.. அதன்படிதான், முதல் ஆயுதமாக, இருகட்சிகளுமே திமுகவின் ஊழல் புகார்களை வெளிச்சம் போட போவதாக சொல்லி அந்த வேலையை முடித்து வருகின்றன.

மசாஜ் சென்டர்கள்
இப்போது அடுத்ததாக, திமுக அரசு மீது, வேறு வேறு புகார்களை இரு கட்சிகளுமே கையில் எடுத்துள்ளதாம்.. இதில் அதிமுகவை எடுத்து கொண்டால், நாமக்கல் பக்கம் தன் வலையை வீசியுள்ளது.. இங்கு கடந்த கால அதிமுக 4 இடங்களில் மசாஜ் சென்டர்கள் ரகசியமாக நடத்தப்பட்டு வந்துள்ளது.. ஆனால், சட்டசபை தேர்தல் சமயத்தில், ஆட்சிக்கு கெட்ட பெயர் வந்துவிடும் என்பதால், உடனடியாக அந்த சென்டர்கள் எல்லாம் இழுத்து மூடப்பட்டு அதிரடி காட்டப்பட்டனவாம்..

ரகசிய மசாஜ் சென்டர்கள்
இப்போது விஷயம் என்னவென்றால், 10 இடங்களில் ரகசியமாக மசாஜ் சென்டர்கள் இயங்கி வருகிறதாம்.. அதுவும் முறைகேடாக, எந்தவிதமான அனுமதியும் இல்லாமல்.. இதைதான் அம்பலப்படுத்த, எதிர்க்கட்சி முயல்கிறதாம்.. ஆனால், அதற்குள் விஷயத்தை மோப்பம் பிடித்த திமுக தரப்பு, இந்த அதிமுக தரப்பில் கிளப்பி விட்டுள்ள தகவல்கள் உண்மையா? ஒருவேளை உண்மையாக இருந்தால், அத்தகைய சென்டர்கள் மீது கடுமையான நடவடிக்கையை எடுக்கவேண்டும், கட்சியின் மீது இம்மியளவுக்குகூட களங்கம் வரக்கூடிய அளவுக்கு எந்தவிதமான குறைபாடுகளும் புகார்களும் இருக்கக்கூடாது என்று உத்தரவிட்டுள்ளதாம்.

கட்டிப்பிடித்த முதல்வர்
அதேபோல, பாஜகவை பொறுத்தவரை, திமுகவை வழக்கம்போல் டேமேஜ் செய்ய தீவிரம் காட்டி உள்ளதாம்.. அந்தவகையில், எந்த தேர்தல் பிரச்சாரமானாலும் சரி, அதில், முதல்வர் ஸ்டாலின், பேரறிவாளனை கட்டிப்பிடித்து வரவேற்ற போட்டோக்களை போஸ்டர் அடித்து ஒட்ட பிளான் செய்து வருகிறதாம்.. முதல்கட்டமாக, விரைவில் நடக்க போகும் குஜராத் சட்டசபை தேர்தலிலேயே இந்த டெக்னிக்கை அமல்படுத்தவும் யோசித்து வருவதாக கூறப்படுகிறது..

வாசகங்கள்
கொலை வழக்கில் விடுதலையானவரை வரவேற்கும் முதல்வருடன், கூட்டணியில் உள்ள இந்த காங்கிரஸை பாருங்கள் என்பன போன்ற வாசகங்களை அச்சிடவும் பிளான் போட்டு வருகிறார்களாம்.. இந்த விஷயத்தை பொறுத்தவரை ஒரே கல்லில் 2 மாங்காய் அடிக்க பாஜக திட்டமிட்டு வருகிறது என்கிறார்கள்.. முதலாவதாக, இந்திய அளவில் பாஜகவுக்கு நிகராக காங்கிரஸ் கட்சி கருதப்படுவதால், அதனை டேமேஜ் செய்யவே திமுகவை குறி வைப்பதாக தெரிகிறது..

குறி வைத்த பாஜக
மற்றொன்று, தேசிய அளவில் முதல்வர் ஸ்டாலின் பேசப்பட்டு வருவதாலு, பாஜகவுக்கு எதிரான கட்சிகளை ஓரணியில் திரட்டி வருவதால், அவருக்கான மவுசு எகிறிவருகிறது.. இதை கட்டுப்படுத்துவதற்காகவும், திமுகவை சீண்ட பாஜக முனைப்பு காட்டுகிறதாம்.. எனினும், எந்த பக்கம் இருந்து பந்து வீசினாலும், அதை திருப்பி போட்டு முறியடிக்கும் வித்தையை திமுக பெற்றிருப்பதால், எதையும் சமாளிக்க தயாராகியும் விட்டதாம்.. அடுத்து என்ன நடக்க போகிறது.. பார்ப்போம்..!
-
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்?












Click it and Unblock the Notifications