ஆஹா இதுல கூடவா.. பூங்கொத்தை தந்த முதல்வர்.. அப்போ சட்டென ஆளுநர் செய்த செயல்! இதை நோட் பண்ணீங்களா
சென்னை: பொன்முடி அமைச்சராகப் பதவியேற்கும் விழாவில் தமிழக முதல்வர் ஸ்டாலின் ஆளுநர் ரவிக்குப் பூங்கொத்து தர முயன்ற போது நடந்த சம்பவத்தின் வீடியோ இப்போது இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.
தமிழ்நாடு உயர்கல்வி துறை அமைச்சராகவும் திமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவருமாக இருந்தவர் அமைச்சர் பொன்முடி. கடந்த டிசம்பர் மாதம் சொத்துக்குவிப்பு வழக்கில் பொன்முடி மற்றும் அவரது மனைவிக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி 3 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதால் பொன்முடி அமைச்சர் மற்றும் எம்எல்ஏ பதவியை இழந்தார். இதையடுத்து அவர் தனது தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.
பொன்முடி: இந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட், பொன்முடி குற்றவாளி என்று அறிவித்த தீர்ப்பை நிறுத்தி வைத்து உத்தரவிட்டது. இதன் மூலம் மீண்டும் பொன்முடி எம்.எல்.ஏ பதவியைப் பெற்றார். இதையடுத்து அவரை மீண்டும் அமைச்சராக நியமிக்க ஆளுநர் ரவிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் பரிந்துரைக் கடிதம் அனுப்பினார். இருப்பினும், ஆளுநர் ரவி பொன்முடிக்கு பதவிப் பிரமாணம் செய்து வைக்க மறுத்தார்.
இருப்பினும், அதை ஆளுநர் முதலில் ஏற்கவில்லை. இது தொடர்பாக ஆளுநர் ரவி எழுதிய பதில் கடிதத்தில், "உச்ச நீதிமன்றம் தண்டனையைத்தான் மட்டும் தான் நிறுத்தி வைத்துள்ளது, குற்றவாளி இல்லை எனத் தீர்ப்பளிக்கவில்லை. திருக்கோவிலூர் சட்டமன்றத் தொகுதிக்கு உறுப்பினர் இல்லாமல் இருக்கக்கூடாது என்பதற்காக இந்த தீர்ப்பை அவர்கள் தந்திருக்கலாம்" என்று கூறி பதவிப் பிரமாணம் செய்து வைக்க மறுத்திருந்தார்.
மீண்டும் அமைச்சரான பொன்முடி: இதையடுத்து இந்த விவகாரத்தை திமுக சுப்ரீம் கோர்ட்டிற்கு எடுத்துச் சென்றது. தண்டனையை உச்சநீதிமன்றம் நிறுத்தி வைத்த பிறகும் பொன்முடிக்கு பதவிப் பிரமாணம் செய்து வைக்க ஆளுநர் மறுப்பது ஏன் என்று கேள்வி எழுப்பிய சுப்ரீம் கோர்ட் இது நீதிமன்ற அவமதிப்பு என்றும் காட்டமான கருத்துகளைத் தெரிவித்தது. மேலும் உச்சநீதிமன்றத்துடன் ஆளுநர் விளையாட வேண்டாம் என்ற சுப்ரீம் கோர்ட் பொன்முடிக்கு விவகாரத்தில் ஆளுநர் முடிவெடுக்கவும் கெடு விதித்தது.
வீடியோ: இந்தச் சூழலில் தான் இன்று பொன்முடிக்கு மீண்டும் ஆளுநர் ரவி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். பொன்முடிக்கு மீண்டும் உயர்கல்வி துறை ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதற்கிடையே பொன்முடி அமைச்சராகப் பதவியேற்பு விழாவில் நடந்த சம்பவம் ஒன்றின் வீடியோ இப்போது இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.
அதாவது அமைச்சராக பொன்முடி பதவியேற்ற பிறகு, முதல்வர் ஸ்டாலின் மற்றும் ஆளுநர் ரவிக்கு அவர் பூங்கொத்தை வழங்கினார். அதைத்தொடர்ந்து ஆளுநர் ரவி அமைச்சர் பொன்முடிக்கு பூங்கொத்தை வழங்கினார். அதன் பிறகு முதல்வர் ஸ்டாலின் ஆளுநர் ரவிக்கு பூங்கொத்தை வழங்குவார் என அறிவிக்கப்பட்டது. தமிழக முதல்வர் ஸ்டாலினும் எழுந்த பூங்கொத்தை ஆளுநர் ரவிக்கு கொடுக்கப் போனார்.
ஆனால், அப்போது ஆளுநர் ரவி அதை வாங்கவில்லை. மாறாக அந்த பூங்கொத்தை அமைச்சர் பொன்முடிக்கு வழங்கச் சொல்லிவிட்டார். இதையடுத்து முதல்வர் ஸ்டாலினும் அந்த பூங்கொத்தை அமைச்சர் பொன்முடிக்கு வழங்கினார். முதல்வர் பூங்கொத்தை வழங்கும் போது, அதை வாங்காமல் பொன்முடிக்கு தர சொன்ன ஆளுநர் ரவியின் இந்த வீடியோ இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது. இதற்குப் பலரும் பல வித கருத்துகளைக் கூறி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications