துக்ளக் அட்டையை பார்த்தா.. "அதே"தான் போல இருக்கே... அப்ப குருமூர்த்தி போனது "அது"க்குத்தானா!
துக்ளக் அட்டைப்படத்தில் குருமூர்த்தி என்ன சொல்ல வருகிறார்?
சென்னை: குருமூர்த்தி சொல்றதை பார்த்தால், ரஜினி வர வாய்ப்பில்லை போலதான் தெரிகிறது.. அப்படி ஒரு கார்ட்டூனை துக்ளக் பத்திரிகையில் வெளியிட்டுள்ளார்.. இதுதான் ரஜினி ரசிகர்களிடையே மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
"தகுந்த நேரத்தில் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் கலந்தாலோசித்து தன்னுடைய அரசியல் நிலைப்பாட்டை பற்றி மக்களுக்கு தெரிவிப்பேன்" என்று ரஜினி சொல்லவும், அவரது ஆதரவாளர்கள் ஒவ்வொரு நாளாக நேரில் சந்தித்து அவரிடம் பேசினர்.
முதலில் தமிழருவி மணியன் போயஸ் கார்டன் வீட்டுக்கு சென்று வந்தார்.. என்ன பேசினார் என்று தெரியவில்லை.

ரஜினிகாந்த்
நேற்று முன்தினம் துக்ளக் ஆசிரியரும், ஆடிட்டருமான குருமூர்த்தி போயஸ்கார்டன் வீட்டுக்கு சென்று ரஜினிகாந்தை சந்தித்து பேசினார்.. ராத்திரி 7 மணிக்கு சென்றிருக்கிறார்.. ரஜினியின் உடல் நலம், அரசியல் சூழல்கள், அரசியல் செயல் திட்டங்கள் குறித்து சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக 2 பேரும் ஆலோசித்ததாக சொல்லப்படுகிறது.

குருமூர்த்தி
ஒருவேளை கட்சி ஆரம்பித்து, அதை திறன்பட செயல்படுத்த முடியாமல் போனால், இருக்கும் இமேஜும் மொத்தமாக சரிந்துவிடும் என்று ரஜினி சொன்னதாகவும், அதற்கு குருமூர்த்தியோ, அப்படியானால் அன்று எப்படி திமுகவுக்கு ரஜினி வாய்ஸ் தந்தீர்களோ அதுபோலவே இப்போதும் பாஜகவுக்கு வாய்ஸ் தாருங்கள் என்று கேட்டுள்ளதாக தெரிகிறது.. அதாவது திமுகவுக்கு எதிராக வாய்ஸ் தாருங்கள் என்று கேட்டதற்கு, ரஜினி எந்த பதிலையும் சொல்லாமல் அமைதியாக இருந்துள்ளார்.

மீடியா
கடந்த 2 நாட்களாக இது குருமூர்த்தி - ரஜினி பற்றின செய்திகள் மீடியாவில் முக்கிய இடத்தை பிடித்து வந்தநிலையில், தற்போது துக்ளக் பத்திரிகையில் வெளிவந்துள்ள கார்டூன் அதற்கு மேல் பரபரப்பை கூட்டி கொண்டிருக்கிறது. வழக்கமாக இந்த பத்திரிகையில் நிறைய கழுதைகளை வைத்துதான் கார்டூன் போடப்படும்..

கழுதைகள்
அந்த வகையில் இப்போதும் 2 கழுதைகள் பேசி கொள்கின்றன.. ஒரு நாளிதழில் முதல் செய்தியாக "ரஜினி கட்சி தொடங்குவது சந்தேகமே" என்று அச்சிடப்பட்டுள்ளது.. அந்த தலைப்பை பார்த்துவிட்டு, ஒரு கழுதை இன்னொரு கழுதையிடம் "சரிவிடு.. இது உண்மையா இருந்தா நம்ம கூட்டத்தை சேர்ந்த ஒருத்தருடைய ஆட்சிதான் வரும்.. நமக்கு தீனிக்கு பஞ்சம் இருக்காது" என்று சொல்கிறது.

கார்ட்டூன்
இதன் மூலம் என்ன சொல்ல வருகிறார் குருமூர்த்தி என்று தெரியவில்லை.. கார்ட்டூனை பார்த்தால் ரஜினி வர வாய்ப்பில்லைதான் தெரிகிறது.. அநேகமாக ரஜினி இந்த முடிவைதான் குருமூர்த்தியிடம் சொல்லி இருப்பாரோ, அதனால்தான் வெறுத்து போய் இப்படி ஒரு கார்ட்டூனை குருமூர்த்தி பதிவிட்டுள்ளாரோ என்ற சந்தேகம் எழுகிறது.

பாஜக
"நம்ம கூட்டத்தை சேர்ந்த ஒருத்தருடைய ஆட்சிதான்" வரும் என்றால், பாஜக ஆட்சியை பிடிக்கும் என்று குருமூர்த்தி சொல்கிறாரா? என்றும் விளங்கவில்லை.. ஆனால், ரஜினி அரசியலுக்கு வருவது சந்தேகம் என்பது மட்டும் குருமூர்த்தி வாயாலேயே வந்துள்ளதுதான் கார்டூனின் ஸ்பெஷல் நியூஸ்!

திருமா
கடைசிவரை பாஜகவுக்கு ரஜினி பிடிகொடுக்கவே இல்லை என்ற விரக்தியின் உச்சக்கட்டம்தான் இது என்றாலும், இந்த களேபரத்திலும் திருமாவை பாஜக விடவே இல்லை போலும்... அந்த கார்டூனுக்கு கீழே "திருமாவளவனின் பொய் அம்பலம் - 13-ம் பக்கம் பார்க்க" என்று ஒரு பஞ்ச் வைத்துள்ளார் குருமூர்த்தி.. ஆனால் அது எந்த பொய் என்று தெரியவில்லை.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications