Akshaya Tritiya: அட்சய திருதியை நாளான இன்று தங்கம் வாங்க முடியலையா? வேறு என்ன பொருட்கள் வாங்கலாம்?
சென்னை: அட்சய திருதியை நாளான இன்று தங்கம் வாங்கினால் வீட்டில் தங்கம், செல்வம் பெருகும் என்று நம்பப்படுகிறது. அட்சய திருதியை நாளில் தங்கம் தான் வாங்க வேண்டும் என்று இல்லை. இந்த நாளில் வேறு பொருட்களையும் வாங்கலாம் கார், பைக் போன்றவற்றையும் வாங்கலாம். புதிதாக தொழில் தொடங்குபவர்கள் இந்நாளில் தொழில் தொடங்கலாம். தங்கம் தவிர்த்த பிற உலோகங்களையும் வாங்கலாம்.
அட்சய திருதியை அன்று என்ன பொருட்கள் வாங்கினாலும் பெருகும் என்று சொல்லப்படுகிறது. இதனால் பெரும்பாலான மக்கள் இந்த நாளில் தங்கம் வாங்குவதை வாடிக்கையாக வைத்துள்ளனர். அப்படி தங்கம் வாங்க முடியாதவர்கள் என்னென்ன பொருட்கள் வாங்கலாம்?

தங்கம் வாங்க உகந்த நாள்
அட்சய திருதியை நாளான இன்று தங்க நகைகள் வாங்குவது அதிர்ஷ்டம் என்றும், இன்று தங்கம் வாங்கினால் வாழ்வில் செழிப்பு பெருகும் என்பது நம்பிக்கை. இந்து வேதங்களின்படி, செழிப்பின் தெய்வமான லட்சுமி தேவி இந்த நாளில் பிறந்தார், எனவே அட்சய திருதியை அன்று தங்கத்தில் முதலீடு செய்வது லட்சுமியை வரவேற்பதாக கருதப்படுகிறது.
மற்ற பொருட்களும் வாங்கலாம்
தங்கம் வாங்குவதற்கு மட்டுமல்ல. நிலம், வீடு மற்றும் பிற சொத்துக்களை வாங்க இது சரியான நாள். நமக்கு வளமான எதிர்காலத்தைத் தனக்குத்தானே அமைத்துக் கொள்ள இது ஒரு நல்ல நேரம். ஏனென்றால் மகாலட்சுமி அம்சம் அள்ளி தரக்கூடிய நாளாக அட்சய திருதியை விளங்குகிறது.
வெள்ளிப் பொருட்கள் வாங்கலாம்
அட்சய திருதியையின் போது நல்ல அதிர்ஷ்டத்தையும் செழிப்பையும் வரவேற்கும் விதமாக வெள்ளியை வாங்கலாம். பலர் பாத்திரங்கள், நாணயங்கள், நகைகள் அல்லது ஆபரணங்கள் போன்ற வெள்ளியால் செய்யப்பட்ட பொருட்களை இந்த நாளில் வாங்குகின்றனர். குடும்பத்தில் இருப்பவர்களுக்கும், மற்றவர்களுக்கும் வெள்ளியை பரிசாக அளிக்கலாம்.
பித்தளை பாத்திரங்கள்
அட்சய திருதியை நாளில் உங்களால் தங்கம், வெள்ளி வாங்க முடியவில்லை என்றால் பித்தளை பாத்திரங்களை வாங்குவதும் மிகவும் மங்களகரமானதாக கருதப்படுகிறது. இந்த நாளில் பித்தளை பாத்திரங்களை வாங்கினால் செல்வம் பெருகும்.
வாகனங்கள் வாங்கலாம்
அட்சய திருதியை அன்று கார், பைக் போன்ற வாகனங்களை வாங்குவதும் வழக்கத்தில் உள்ளது. இந்த நாளில் வாகனங்கள் வாங்குவது பாதுகாப்பான மற்றும் வெற்றிகரமான பயணங்களின் ஆசீர்வாதங்களை அழைப்பதாகக் கருதப்படுகிறது.
சொத்துகள் வாங்க நல்ல நாள்
ஜோதிட மற்றும் வாஸ்து நிபுணர்கள் அட்சய திருதியை நாளில் சொத்தில் சொத்து வாங்குவது ஒரு அதிர்ஷ்டம் என்கின்றனர். ஏனெனில் இது நீண்டகால வெற்றியையும் நல்ல அதிர்ஷ்டத்தையும் உறுதி செய்கிறது. நிலம், வீடு மற்றும் பிற சொத்துக்களை வாங்க இது சரியான நாள்.
பர்னிச்சர்கள் வாங்கலாம்
அட்சய திருதியை அன்று புதிய பொருட்களை வாங்குவது அதிர்ஷ்டம் என்பது இந்துக்களின் நம்பிக்கை. எனவே நம் வீட்டு இண்டீரியரை புதுப்பிக்க இது சிறந்த நேரம். சோபா செட் அல்லது டைனிங் டேபிள் போன்ற புதிய பர்னிச்சர்களை வாங்கலாம்.
மின்னணு சாதனங்கள்: அட்சய திருதியை நாளான இன்று, பெரும்பாலான மக்கள் ஸ்மார்ட்போன்கள், லேப்டாப், டேப்லெட்டுகள் அல்லது டிவி போன்ற மின்னணு சாதனங்களை வாங்க விரும்புகிறார்கள். இந்த அதிர்ஷ்ட நாளில் இந்த விலையுயர்ந்த பொருட்களை வாங்குவது நல்ல அதிர்ஷ்டத்தையும் செழிப்பையும் தரும் என்று கருதப்படுகிறது.
ஷேர் மார்க்கெட்
அட்சய திருதியை என்பது பங்குச் சந்தையில் முதலீடு செய்ய சரியான நேரம். இந்த நல்ல நாளில் பலர் பங்குகள் அல்லது பரஸ்பர நிதிகளை வாங்குகிறார்கள், ஏனெனில் இன்று செய்யப்படும் முதலீடுகள் நீண்ட கால வருமானத்தைத் தரும் என்று கருப்படுகிறது.
உணவு வழங்கலாம்
ஒரு சிலரால் எந்த பொருளையும் வாங்க முடியாத சூழ்நிலை இருக்கலாம், தங்கம் வாங்குவதற்கு வசதி இல்லை என்பவர்கள், உணவு பொருட்களை வாங்கலாம். அரிசி, வெல்லம், பருப்பு, காய்கறிகள், மளிகை பொருட்கள் போன்ற உணவுக்கு தேவையான பொருட்களை வாங்கலாம். குறைந்தபட்சம் ஒரு வேளை உணவாவது மற்றவர்களுக்கு வாங்கி தரலாம்.
அட்சய திருதியை நாளில் உப்பு, பூஜை பொருட்கள், பூ, அரிசி, தானியங்கள் போன்ற பொருட்களையும் வாங்கலாம். உப்பு வாங்கினால் வாழ்க்கையில் இன்பங்கள் பெருகும் மன அமைதி உண்டாகும். தங்கம் வாங்க முடியாதவர்கள் இந்த நாளில் இந்த பொருட்களை வாங்கி பூஜை அறையில் வைத்து வழிபடலாம்.












Click it and Unblock the Notifications