12ம் வகுப்புக்கு பின் என்ன படிக்கலாம்.. ஆடிட்டராக என்ன படிக்க வேண்டும்? தேர்வுகள் எப்படி நடக்கும்?
சென்னை: 12ஆம் வகுப்பு முடிவடைத்த மாணவர்கள் அடுத்ததாக என்ன படிக்கலாம் என்பதை யோசித்து வருகிறார்கள். தமிழ்நாட்டில் பொறியியல், மருத்துவம் கடந்து ஏராளமான துறைகள் இருக்கின்றன. அந்த வகையில் 12ஆம் வகுப்பில் பயோ - மேக்ஸ், கம்யூட்டர் சயின்ஸ் ஆகிய குரூப்-களுக்கு பின் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று காமர்ஸ் குரூப்தான்.
அவர்களின் பெரும்பான்மை மாணவர்களின் கனவு ஆடிட்டராக வர வேண்டும் என்பதாக இருக்கும். அப்படி ஆடிட்டராக வர வேண்டும் என்று விரும்புவோர் என்ன படிக்க வேண்டும், எப்படி தயாராக வேண்டும் என்பதை பற்றி பார்க்கலாம். இந்தியா போன்ற அதிக வரிகளை கொண்டுள்ள நாடுகளில் ஆடிட்டர்களின் தேவை அதிகமாக உள்ளது.

சிஏ தேர்வு
ஏனென்றால் தொழிற்சாலைகள், நிறுவனங்கள், சேவை அமைப்புகள், அரசு ஊழியர்கள், முதலீட்டாளர்கள் ஆகியோருக்கு வரிச் சலுகை, வருமானத்தை நிர்வகிப்பது எப்படி உள்ளிட்ட ஆலோசனைகளை அளிப்பது ஆடிட்டர்கள் தான். சார்ட்டர்டு அக்கவுன்டன்ட் என்பதே ஆடிட்டர் என்று சொல்லப்படுகிறது. இதி சிஏ-வுக்கான தேர்வை, தி இன்ஸ்டிட்டியூட் ஆஃப் சார்ட்டர்டு அக்கவுண்ட்ஸ் ஆஃப் இந்தியா என்ற அமைப்பு நடத்தி வருகிறது.
ஆடிட்டராவது எப்படி?
இந்த சிஏ தேர்வில் கணக்கியல், நிதி, தணிக்கையியல் ஆகியவற்றை பற்றி படிப்பார்கள். சிஏ தேர்வு 4 கட்டங்களாக நடத்தப்படும். முதலில் ஃபவுண்டேஷன் கோர்ஸ் தேர்வு நடக்கும். அதன்பின் இண்டர்மீடியர் கோர்ஸ், ஆர்டிகல்ஷிப் கோர்ஸ் மற்றும் இறுதி பயிற்சி ஆகிய 4 தேர்வுகளிலும் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
சிஏ படிப்பில் எப்படி சேரலாம்?
இந்த சிஏ படிப்பில் சேர்வதற்கு 2 வழிகள் உண்டு. இதில் பவுண்டேஷன் கோர்ஸில் சேர்வதற்கு 12ஆம் வகுப்பு முடிந்திருந்தாலே போதும். அதேபோல் பட்டப்படிப்பு முடித்தவர்கள் இண்டர்மீடியட்டில் சேர முடியும். இதில் சேர்வதற்கு வணிகவியல் துறையில் குறைந்தபட்சமாக 55% மதிப்பெண்கள் எடுத்திருக்க வேண்டும்.
இண்டர்மீடியட் தேர்வு
பிபிஏ, பிஎஸ்சி, பிஏ, பிசிஏ, பிஇ, பிடெக் ஆகிய பட்டம் பெற்றவக்ரள் இணைய வேண்டுமென்றால், 60% மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். அதேபோல் ஃபவுண்டேஷன் தேர்வு எழுத விரும்புவோர் 12ஆம் வகுப்பு தேர்வில் கட்டாயம் 50% மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். அதேபோல் இண்டர்மீடியட் தேர்வை பொறுத்த வரை பவுண்டேஷன் தேர்வில் வென்றவர்கள், டைரக்ட் என்ட்ரியில் வந்தவர்கள் எழுதலாம்.
இண்டர்மீடியட் தேர்வுக்கு பின்
இந்த தேர்வில் மொத்தமாக 2 குரூப் உள்ளது. ஒவ்வொரு குரூப்பிலும் தலா 3 தாள்கள். இரண்டு குரூப்களையும் சேர்த்தும், தனித்தனியாகவும் எழுதலாம். அது மாணவர்களின் விருப்பத்தை சார்ந்தது. இந்த தேர்வுக்கு பின் சிஏ தொடர்பான புதிய தொழில்நுட்பங்களை மாணவர்கள் அறிவதற்காக ஒரு தேர்வு நடத்தப்படுகிறது.
ஆர்டிகல்ஷிப்
ஆர்டிகல்ஷிப் சேர்வதற்கு முன்பாக ஐடிஐடிஎஸ்எஸ் மற்றும் ஓரியண்டேஷன் என்று 2 தேர்வுகளும், அதன்பின் 2 தேர்வுகளும் நடத்தப்படும். ஆர்டிகல்ஷிப் என்றால், ஒரு ஆடிட்டருக்கு கீழ் 2 ஆண்டுகள் பயிற்சி பெறுவதுதான். இதற்கு மாணவர்களுக்கு ஊக்கத்தொகை அளிக்கப்படும். இந்த தேர்வை முடித்தால், அந்த மாணவர் ஆடிட்டராக தேர்வு பெற்றவராவார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications