Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மீண்டும் கூட்டணி? வானதி சீனிவாசன்- தங்கமணி பேசியது என்ன.. உடைத்து பேசிய ஜெயக்குமார்! என்ன சொன்னார்

Subscribe to Oneindia Tamil

சென்னை: வானதி சீனிவாசன்- தங்கமணி சட்டசபையில் பேசிக் கொண்டு இருந்ததால் மீண்டும் கூட்டணி ஏற்படலாம் எனத் தகவல் பரவிய நிலையில், இது தொடர்பாக ஜெயக்குமார் முக்கியமான பதிலை அளித்துள்ளார்.

லோக்சபா தேர்தல் விரைவில் நடக்க உள்ள நிலையில், அனைத்து கட்சிகளும் கூட்டணி நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தி உள்ளனர். திமுக ஏற்கனவே தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையை ஆரம்பித்துவிட்டது.

What Vanathi Srinivasan and Thangamani discussed in Assembly answers ADMK Jayakumar

அதேநேரம் அதிமுகவைப் பொறுத்தவரை இன்னும் கூட்டணி பேச்சுவார்த்தை தீவிரமாக ஆரம்பிக்கவில்லை. இதற்கிடையே அவர்கள் மீண்டும் பாஜக உடன் கூட்டணி அமைக்கலாம் என்ற தகவலும் பரவி வருகிறது.

ஜெயக்குமார்: இன்று செய்தியாளர்களிடம் பேசிய ஜெயக்குமார், "அதிமுக தலைமையில் ஒரு மகத்தான கூட்டணி அமைக்கப்படும். தேர்தலுக்கு முன்பு சரியான நேரத்தில் கூட்டணியில் எந்தெந்த கட்சிகள் இருக்கிறது என்பது குறித்து அறிவிப்போம். அதேநேரம் மற்ற கட்சிகள் யாருடன் கூட்டணி வைப்பார்கள் என்றெல்லாம் தெரியாது.

எத்தனை தடவை சொல்வது... திரும்பத் திரும்ப எத்தனை முறை தான் சொல்வது.. பாஜக உடன் நிச்சயம் கூட்டணி இல்லை. எங்கள் பொதுச்செயலாளரும் இதைத் திட்டவட்டமாக விளக்கிவிட்டார். பாஜக உடன் கூட்டணி இல்லை.. இல்லை.. இல்லை. பிறகு ஏன் திரும்ப திரும்ப கேட்கிறீர்கள் எனப் புரியவில்லை.. பாஜகவுக்கான கதவுகள் மூடப்பட்டுவிட்டது. அவர்களுடன் கூட்டணி இல்லை.. இனிமேல் பாஜக உடன் ஒட்டும் இல்லை உறவும் இல்லை.. வேறு என்ன தான் சொல்ல வேண்டும்" என்றார்.

சட்டசபையில் மாஜி தங்கமணியுடன் பேசியது என்ன? விடாமல் கேட்ட செய்தியாளர்.. வானதி ருசிகர பதில்


ஓபிஎஸ்: தொடர்ந்து ஓபிஎஸ் குறித்த கேள்விக்குப் பதிலளித்த அவர், "நட்டா இங்கே வந்த போது ஓபிஎசுக்கு அனுமதி தரவில்லை என்றால் அதற்கு நாங்கள் என்ன செய்ய முடியும். அதிமுக நிலைப்பாடு குறித்துத் தான் நான் பேச முடியும். எங்கள் நிலைப்பாடு தெளிவானது.. பாஜகவுடன் கூட்டணி இப்போதும் இல்லை எப்போதும் இல்லை. அந்த நிலைப்பாட்டை எங்கள் பொதுச்செயலாளர் ஏற்கனவே தெளிவுபடுத்திவிட்டார். இந்தளவுக்குக் கூறிய பிறகும் எதற்காக மீண்டும் மீண்டும் இதைக் கேட்கிறீர்கள் எனப் புரியவில்லை" என்றார்.

வேறு எந்த கட்சிகள் அதிமுக கூட்டணிக்கு வரும் என்ற கேள்விக்கு, "தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா கூட்டணி குறித்துப் பேசியுள்ளதைப் பத்திரிக்கையில் தான் பார்த்தேன். எங்கள் தலைமையில் கூட்டணிக்கு வர பாஜக, திமுக தவிர அனைத்து கட்சிகளும் விரும்புகின்றன. ஆனால், இன்னும் காலம் இருக்கிறது. என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்.. பொறுத்து இருந்து பார்ப்போம்" என்றார்.

பரபர பதில்: வானதி சீனிவாசன்- தங்கமணி சட்டசபையில் பேசிக் கொண்டு இருந்ததால் மீண்டும் கூட்டணி ஏற்படலாம் எனத் தகவல் பரவிய நிலையில் இது குறித்த கேள்விக்குப் பதிலளித்த ஜெயக்குமார், "பாஜக உடன் கூட்டணி இல்லை என்பது ஒட்டுமொத்தமாகக் கட்சி எடுத்த கொள்கை முடிவு.. இரண்டு பேர் நட்பு அடிப்படையில் சந்தித்துப் பேசுவதைக் கண், காது வைத்துப் பேசுவது ரொம்பவே தவறு" என்றார்.

கடந்த வாரம் ஆளுநர் உரைக்கு நன்றித் தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் நடந்த போது, வானதி சீனிவாசன் இருக்கை நோக்கி அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணி சென்றார். அங்கு வானதியுடன் சுமார் 15 நிமிடங்களுக்குத் தீவிரமான ஆலோசனை நடத்தினார். முதலில் தங்கமணி பேச அதற்கு வானதி பதிலளித்தார். பிறகு வானதி கேட்க அதற்குத் தங்கமணி பதிலளித்தார். இப்படியே இந்த பேச்சு 15 நிமிடங்கள் நீண்டது. சட்டசபை நிகழ்வுகள் ஒளிபரப்பப்படும் நிலையில், இது பேசுபொருளாகி இருந்தது.

இதை வைத்து அதிமுக பாஜக இடையே மீண்டும் கூட்டணி ஏற்படலாம் எனக் கூறப்பட்ட நிலையில், இந்தக் கேள்விக்குத் தான் ஜெயக்குமார், அதற்கு வாய்ப்பே இல்லை என்று திட்டவட்டமாக மறுத்து இருக்கிறார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+