நாயுடு பற்றி சொன்னதும்.. சட்டென மாறிய ஸ்டாலின் முகம்! அடுத்து வந்த பதில்.. நேற்று இரவு என்ன நடந்தது?
சென்னை: பாஜகவுக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்காததும், தமிழகத்தில் திமுக கூட்டணி 40 இடங்களில் ஜெயித்திருப்பதும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை ஏகத்துக்கும் உற்சாகத்தில் வைத்திருக்கிறது.
கடந்த முறை தமிழ்நாடு - புதுவை சேர்ந்து 39 இடங்களில் வென்றது திமுக. இந்த முறையும் தமிழ்நாடு லோக்சபா தேர்தலில் திமுக இமாலய வெற்றி பெற்றுள்ளது. புதுச்சேரி உட்பட 40 இடங்களில் 40லும் திமுக வெற்றி பெற்றுள்ளது. . பாஜக தென்சென்னை, நெல்லை தவிர எங்கும் கடும் போட்டி கொடுக்கவில்லை.

பாஜக நெல்லையில் முன்னிலை வகித்த நிலையில் அங்கே பின்னடைவை சந்தித்தது. கடந்த தேர்தலில் வென்ற ஒரு இடத்தை.. அதாவது தேனியையும் இழந்து அதிமுக படுதோல்வி அடைந்து உள்ளது.
மத்தியில் ரிசல்ட்; கடந்த லோக்சபா தேர்தலில் பாஜக தேசிய அளவில் 303 இடங்களில் வென்றது. பாஜக என்டிஏ கூட்டணி 353 இடங்களில் வென்றது. காங்கிரஸ் 52 இடங்களில் வென்றது. இந்த நிலையில்தான் இன்று வாக்கு எண்ணிக்கை செய்யப்பட்டு தேர்தல் முடிவுகள் வெளியாகின. 543 தொகுதிகள் நாட்டில் உள்ளன. இதில் 272 தொகுதிகளில் வென்றால் ஆட்சியை பிடிக்க முடியும்.
இப்படிப்பட்ட நிலையில் 2024 லோக்சபா தேர்தலில் கிட்டத்தட்ட 292 தொகுதிகளில் என்டிஏ கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. பாஜக தனியாக 240 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் கட்சி 97 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இந்தியா கூட்டணி 229 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.
ஸ்டாலின் கொண்டாட்டம்: பாஜகவுக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்காததும், தமிழகத்தில் திமுக கூட்டணி 40 இடங்களில் ஜெயித்திருப்பதும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை ஏகத்துக்கும் உற்சாகத்தில் வைத்திருக்கிறது.
நேற்று இரவு வெகு நேரம் தனது குடும்பத்தினரிடமும் கட்சியின் முக்கிய நிர்வாகிகளிடமும் ரிசல்ட் குறித்தே குதூகலமாக விவாதித்தபடி இருந்தாராம். நீண்ட மாதங்களுக்குப் பிறகு, ஸ்டாலின் உற்சாகமாக இருந்ததை அவரது குடும்பமே ரசித்திருக்கிறது. சந்திரபாபு நாயுடுவிடம் ஸ்டாலின் பேசியதை சீனியர்கள் சிலர் அவரிடம் கேட்டிருக்கிறார்கள்.
அப்போது மட்டும் அவரது முகம் சற்று மாறியிருக்கிறது. அதாவது, நாயுடுவுக்கு வாழ்த்துச் சொன்னோம். அவரும் நன்றி சொன்னார். இந்தியா கூட்டணிக்கு உங்கள் ஆதரவு தேவை என நாம் அவரிடம் கேட்கவில்லை. ஆனால், சரத்பவார், நமக்காகக் கேட்டிருக்கிறார். ஆனால், நாயுடுவோ, பாஜக கூட்டணியில் இணைந்துதான் தேர்தலை சந்தித்து வெற்றிப் பெற்றிருப்பதால் தன்னால் மாற இயலாது.
ஸ்டாலின் முகம் சுருக்கம்: அரசியல் கணக்குகளைத் தாண்டி நம்பகத்தன்மை சார்ந்த விசயம் இது. அதனால், என்னை வலியுறுத்தாதீர்கள் எனச் சொல்லி மறுத்துள்ளார். இதை காங்கிரஸ் தலைமையிடம் சரத்பவார் சொல்லியிருக்கிறார். அதனால் நாயுடு நம் பக்கம் வருவார் என்பதில் நம்பிக்கை இல்லை'' என்று பகிர்ந்துகொண்டுள்ளார் ஸ்டாலின்.
இன்றும் கூட செய்தியாளர்களை சந்தித்த நாயுடு.. நான் என்டிஏ கூட்டணியில் இருக்கிறேன். அதே கூட்டணியில் தொடருவேன். வரும் நாட்களில் ஏற்படும் மாற்றங்கள் பற்றிய அறிவிப்புகளை வெளியிடுவேன். இப்போதைக்கு நான் கூட்டணியில் தொடருகிறேன், என்று கூறினார். இந்த நிலையில்தான் நிதிஷ் இன்னும் முடிவு எடுக்கவில்லை என்பதால்.. இந்தியா கூட்டணி கட்சிகளின் தலைவர்களின் ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொள்ள உற்சாக மனநிலையுடன் டெல்லிக்கு புறப்பட்டுள்ளார் ஸ்டாலின்.












Click it and Unblock the Notifications