CBI கையில் கரூர் கேஸ்.. தகவல் வந்ததும் ஸ்டாலின் தந்த ரியாக்சன்.. விஜய் எதிர்பார்த்து இருக்க மாட்டார்
சென்னை: கரூர் வழக்கில் சிபிஐ விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு இருப்பது கடுமையான விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது. ஆனால் இதை பற்றி திமுக தரப்பு பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது. முக்கியமாக முதல்வர் ஸ்டாலின் இதை பாசிட்டிவ்வாகவே எடுத்துக்கொண்டதாக கூறப்படுகிறது.
1. சிபிஐ விசாரணை மூலம் தேவையின்றி தமிழக போலீசுக்கு பிரஷர் இருக்காது. இதில் தவெகவை முடக்குகிறோம், விஜயை முடக்குகிறோம் என்றெல்லாம் பிரஷர் இருக்காது.

2. இந்த வழக்கில் போலீஸ் விசாரணை, தமிழக அரசை கோர்ட் விமர்சனம் செய்யவில்லை. அரசு செயல்பட்ட விதத்தை போலீஸ் விமர்சனம் செய்யவில்லை.
3. உச்ச நீதிமன்றம் கேட்டதெல்லாம் கோர்ட் மீதான விமர்சனம் மட்டுமே. சென்னை உயர் நீதிமன்றத்தை மட்டுமே உச்ச நீதிமன்றம் விமர்சனம் செய்தது.
4. இதனால் அரசு அழுத்தம் கொடுக்கிறது என்ற வாதத்தை இனி தவெக வைக்க முடியாது.
5. இன்னொரு பக்கம் சிபிஐ விசாரணையும் தான்தோன்றி தனமாக இருக்காது. ஏனென்றால் இதை முன்னாள் நீதிபதி அஜய் ரஸ்தோகி மேல்பார்வையிட உள்ளார்.
6. முன்னாள் நீதிபதி அஜய் ரஸ்தோகி மற்றும் 2 தமிழக கேடர்ஸ் அதிகாரிகள் ரிப்போர்ட்டை பெறுவார்கள். இதன் காரணமாக சிபிஐ இதை நீண்ட காலம் காலம்தாழ்த்தி விசாரிக்க முடியாது.
7. தமிழக அரசுக்கு எதிராக சிபிஐ தரப்பிற்கு போன வழக்கு எதிலும் தமிழக அரசுக்கு எதிராக சிபிஐ ஆக்சன் எடுக்கவே முடியவில்லை. இன்னும் சொல்லப்போனால் மைக்கேல்பட்டி விவகாரம் உட்பட பல விவகாரங்களில் தமிழக அரசின் வாதமே சரி என்பதை சிபிஐ விசாரணை நிரூபணம் செய்தது. இதை மனதில் வைத்து சிபிஐ போனது நல்லதுதான் என்று ஸ்டாலின் முடிவு செய்துள்ளாராம்.
சிபிஐ விசாரணை
கரூர் கூட்ட நெரிசல் விவகாரத்தில் விசாரணையை சிபிஐக்கு மாற்றி உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. சிபிஐ விசாரணையை உச்ச நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையிலான குழு கண்காணிக்கும் என அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. இதனால் இந்த வழக்கில் மேற்கொண்டு ஐஜி அஸ்ரா கார்க் தலைமையில் விசாரணை செய்ய முடியாது.
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழுவினர் 8-வது நாளாக தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. இதில் ஐஜி அஸ்ரா கார்க் தலைமையிலான SIT முக்கியமான பல ஆதாரங்களை திரட்டி உள்ளதாக கூறப்படுகிறது. இனி அந்த குழு விசாரணையை நடத்த முடியாது. கரூர் வழக்கு சிபிஐ விசாரணைக்கு கீழ் சென்றது மிகப்பெரிய திருப்பமாக பார்க்கப்படுகிறது. அதிமுக மற்றும் பாஜகவுடன் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் கூட்டணிக்கு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக செய்திகள் வரும் நிலையில்தான் இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.
தமிழ்நாடு அரசியலில் புதிய கூட்டணி அமைக்கும் சாத்தியக்கூறுகளை பாஜக ஆராய்ந்து வருகிறது. கரூர் விவகாரத்தில் விஜயை நேரடியாக கடுமையாக தாக்காமல் பாஜக மென்மையான போக்கை கடைப்பிடித்து வருகிறது. அதே சமயம் திமுக தரப்பையும் ஆளும் கட்சி என்பதால் பாஜக தாக்கி வருகிறது.
தமிழ்நாட்டில் தனது கால்தடத்தை வலுப்படுத்தும் நோக்கில், பாஜக அண்மையில் அதிமுகவுடன் மீண்டும் கூட்டணி அமைத்தது. அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலை மனதில் வைத்து இரு கட்சிகளும் கூட்டணி பேச்சுவார்த்தைகளைத் தொடங்கியுள்ளன. கடைசியாக டெல்லியில் ஒரு சுற்று பேச்சுவார்த்தை நடைபெற்றது. விரைவில் இடப்பங்கீடு தொடர்பாக முடிவுகள் எடுக்கப்படும் என்று தெரிகிறது.












Click it and Unblock the Notifications