முதல்வர் உங்களை தூக்கிட்டாரு! விஷயத்தை கேட்டதும் பரபரவென கிளம்பி போன அமைச்சர்! திடுக் சம்பவம்.. ப்பா
சென்னை: அமைச்சரவை மாற்றம் தொடர்பாக நேற்று செய்திகள் வந்த உடனேயே அமைச்சர் ஒருவர் கடும் அப்செட்டாகி திமுக கூட்டம் ஒன்றில் இருந்து கிளம்பி சென்று இருக்கிறார்.
தமிழ்நாடு முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்று இரண்டு வருடங்கள் முடிந்துவிட்டன. இந்த நிலையில் முதல்வர் ஸ்டாலின் இரண்டு ஆண்டு முடிவில் சில அமைச்சர்களை மாற்ற முடிவு செய்துள்ளார்.
கடந்த ஆண்டும் சில அமைச்சர்கள் மாற்றம் செய்யப்பட்டனர். ஆனால் பெரிய அளவில் அமைச்சரவை மாற்றம் அப்போது நடக்கவில்லை.

கடந்த ஆண்டு மாற்றம்: தமிழ்நாடு அமைச்சரவையில் பெரும் எதிர்பார்ப்பிற்கு இடையில் கடந்த வருடம் டிசம்பர் மாதம் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டன. முதல்வர் ஸ்டாலினின் ஒரு இலாக்காவையும் சேர்த்து மொத்தமாக 11 அமைச்சர்களின் இலாக்காக்கள் மாற்றப்பட்டன. உதயநிதி ஸ்டாலினுக்கு இளைஞர் நலன், விளையாட்டுத்துறை வழங்கப்பட்டது. அதேபோல் சிறப்பு திட்ட செயலாக்கம் துறை வழங்கப்பட்டு உள்ளது.
உதயநிதி ஸ்டாலின் அமைச்சர் ஆனது மட்டுமின்றி மட்டுமின்றி பல சீனியர் அமைச்சர்களின் துறைகளும் மாற்றப்பட்டன. ஐ பெரியசாமி, ராஜகண்ணப்பன், முத்துசாமி, பெரியகருப்பன், சேகர் பாபு, ராமசந்திரன், காந்தி, பிடிஆர், மெய்யநாதன், மதிவேந்தன் ஆகியோரின் இலாக்காக்கள் மாற்றப்பட்டன.
விளையாட்டுத்துறை அமைச்சராக இருந்த மெய்யானாதன், சுற்றுசூழல் துறை கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்டது. அமைச்சராக பதவியேற்ற உதயநிதி ஸ்டாலினுக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை சிறப்பு அமலாக்கத்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டது.
அதே சமயம் டாப் இலாக்கா எதிலும் மாற்றம் செய்யப்படவில்லை. அமைச்சர்கள் துரைமுருகன், கே என் நேரு, அன்பில் மகேஷ், பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், தங்கம் தென்னரசு, ஏவ வேலு, எம்ஆர்கே பன்னீர்செல்வம், ரகுபதி, செந்தில் பாலாஜி, மா சுப்பிரமணியன், சேகர் பாபு ஆகிய 11 அமைச்சர்களின் பதவிகளில் எந்த மாற்றமும் இல்லை.
அப்போது செய்யப்படாத அமைச்சரவை இலாக்கா மாற்றங்கள் சீனியர் அமைச்சர்களுக்கு இந்த முறை செய்யப்பட உள்ளது.
நாசர் நீக்கம்: இந்த நிலையில் முதல் ஆளாக, நேற்று அமைச்சரவையில் இருந்து பால்வளத்துறை அமைச்சர் நாசர் நீக்கப்பட்டார். ஆவடி நாசர் மீது பல்வேறு புகார்கள் சர்ச்சைகள் இருந்தன.
ஆனால் அவரை நீக்குவதற்கு இந்த புகார்கள், சர்ச்சைகளை தாண்டி அவரின் செயல்பாடுகள்தான் காரணம் என்று கூறப்படுகிறது. ஆம்.. அவர் பால்வளத்துறையை மிக மோசமாக நடத்தியது. பால் தட்டுப்பாட்டை தவிர்க்க தவறியது, பால் உற்பத்தியில் நவீனங்களை புகுத்த தவறியது என்று மேற்கொண்ட சில செயல்பாடுகள்தான் இதற்கெல்லாம் காரணம்.

ஷாக்: நேற்று இந்த செய்தி வரும் முன் நாசர் சென்னை திருவேற்காடு பகுதியில் நடந்த திமுக பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிக்கொண்டு இருந்தார். திமுகவின் இரண்டு ஆண்டு சாதனை பொதுக்கூட்டங்கள் தமிழ்நாடு முழுக்க நடக்கிறது.
இந்த சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில்தான் நாசர் பேசிக்கொண்டு இருந்தார். அங்கே பேசி முடித்தவர் அடுத்ததாக திருவேற்காட்டில் இன்னொரு பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ள நாசர் சென்றார். அவர் கார் அந்த பொதுக்கூட்ட மேடையை நெருங்கிய நேரத்தில்தான் நாசரின் அமைச்சர் பதவி பறிக்கப்பட்டு உள்ளது.

அப்போது நாசரிடம்.. உங்களை அமைச்சர் பதவியில் இருந்து முதல்வர் தூக்கிவிட்டார் என்று தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதனால் மனமுடைந்த அமைச்சர் நாசர்.. அந்த மேடையில் ஏறாமல் அப்படியே காரை திருப்பிக்கொண்டு அங்கிருந்து கிளம்பி சென்றுள்ளார் என்று கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications