ஜெயலலிதாவுக்கு கமல் நன்றி தெரிவித்தது ஏன்? ஜெயா டிவிக்கு நடுவராக போனது ஏன்? எழும் விமர்சனங்கள்
விஸ்வரூபம் பட பிரச்சினையில் உண்மையில் நடந்தது என்ன என்பதை பார்ப்போம்.
சென்னை: விஸ்வரூபம் படம் வெளியீட்டை தடை செய்ததற்கு முன்னாள் முதல்வர் ஜெயலலிதாதான் காரணம் என்றால் அவருக்கு நன்றி சொல்லி கமல் வீடியோ வெளியிட்டதோடு அதே ஆண்டு ஜெயா டிவிக்கு நடுவராக போனது ஏன் என்ற கேள்வி சமூகவலைதளங்களில் எழுந்துள்ளது.
2018 ஆம் ஆண்டு மக்கள் நீதி மய்யம் கட்சியை தொடங்கிய கமல்ஹாசன் யாருடனும் கூட்டணி இல்லை என அறிவித்திருந்தார். அதன் பின்னர் 2021 ஆம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் ஐஜேகே மற்றும் சமத்துவ மக்கள் கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டார்.
இதற்கே விமர்சனங்கள் எழுந்தன. ஆனாலும் அவர் திராவிட கட்சிகளுடன் கூட்டணி வைக்கவில்லையே என மநீம நிர்வாகிகள் பதிலடி கொடுத்தனர் இந்த நிலையில் அண்மையில் ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை யாத்திரையில் கமல்ஹாசன் கலந்து கொண்டார். அத்துடன் ராகுலுடன் உரையாடலையும் நடத்தினார்.

ஈரோடு கிழக்கு தொகுதி
இந்த நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கமல்ஹாசனோ காங்கிரஸ் கட்சி வேட்பாளருக்கு ஆதரவு என அறிவித்தார். இதையடுத்து கமல்ஹாசன் ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தார்.

கருங்கல்பாளையம்
ஈரோடு மாவட்டம் கருங்கல்பாளையம் பகுதியில் கமல்ஹாசன் பேசுகையில் நானும் ஈவிகேஎஸ் இளங்கோவனும் பெரியாரின் பேரன்கள். பெரியார் காந்தியாரின் தம்பி. விட்டு போன கடமையை செய்ய வந்திருக்கிறேன். நான் அரசியலுக்கு வந்தது லாபத்திற்காக இல்லை, இங்கே வந்திருப்பதும் ஆதாயத்திற்காக இல்லை. விஸ்வரூபம் படம் வெளியான போது என்னை தடுமாற வைத்து சிரித்தார் ஓர் அம்மையார்.

கருணாநிதி
கருணாநிதி என்னை தொடர்பு கொண்டு ஏதாவது உதவி வேண்டுமா என கேட்டார். இது தேச பிரச்சினை அல்ல, எனவே நான் பார்த்துக் கொள்கிறேன் என்றேன். உங்களுக்கு ஏதாவது உதவி வேண்டுமானாலும் கேளுங்கள் நான் இருக்கிறேன் என்றார் ஸ்டாலின் என கமல் தெரிவித்தார். விஸ்வரூபம் குறித்து கமல்ஹாசன் கூறியதில் பல்வேறு விவாதங்கள் எழுந்துள்ளன. ஜெயலலிதா குடைச்சல் கொடுத்தார் என்றால் , எதற்காக அவருக்கு நன்றி தெரிவித்து வீடியோ வெளியிட்டீர்கள் என பலர் சமூகவலைதளங்களில் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

அறிவுரை
அது போல் காலத்தில் கனிவுடன் என் நிலை உணர்ந்து நியாயமான அறிவுரை வழங்கிய ஜெயலலிதா அவர்களுக்கு ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் கலைஞர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள், தொழிலாளர்கள் சார்பில் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன், அன்புடன் கமல்ஹாசன் என ஜெயலலிதா புகைப்படத்தை போட்டு நாளிதழ்களில் கமல் நன்றி கூறியுள்ளார். இதுவும் ஏன் என கேட்டு விவாதங்கள் ஏற்பட்டுள்ளன.

விஸ்வரூபம்
அது போல் உண்மையில் விஸ்வரூபம் விஷயத்தில் என்ன நடந்தது என்பது குறித்து துக்ளக் ரமேஷ் ஒரு யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: இந்த தேர்தலில் விஸ்வரூபம் குறித்து கமல் பேசியது பொருந்தாத ஒன்று. ஸ்டாலினையும் திமுகவினரையும் மனம்குளிர வைத்து அதன் மூலமாக ஒரு சீட்டாவது வரும் லோக்சபா தேர்தலில் கிடைக்குமா என்பதற்காக இப்படி பேசியுள்ளார். ஆனால் அவர் பேசியிருப்பது பச்சை பொய், இதற்கு நானே நேரடி சாட்சி இருக்கிறேன்.

கமல்ஹாசனுக்கு அரசியல் ஆதாயம்
கமல்ஹாசன் அரசியல் ஆதாயத்திற்காக இவ்வளவு மலிவாக பொய் பேசுவது வியப்பாக இருக்கிறது. கமல்ஹாசனால் சீமானை போல் உறுதியாக இருக்க முடியவில்லை. அதனால் திமுக கூட்டணி பக்கம் சாய்ந்துவிட்டார். விஸ்வரூபம் படத்திற்கு தமிழக அரசு தடை விதித்ததால் பிரச்சினை வரவில்லை. இந்த படத்தை வெளியிட்டால் மிகப் பெரிய போராட்டத்தை நடத்துவோம் என பகிரங்கமாக இஸ்லாமிய அமைப்புகள் அறிக்கை வெளியிட்டனர்.

திமுக கூட்டணி
இந்த விஷயத்தில் திமுக கூட்டணியில் இருக்கும் மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா உண்மையை பேச வேண்டும். விஸ்வரூபம் படத்தில் ஆட்சேபகரமான காட்சிகள் இருக்கின்றன. அதை தணிக்கை செய்யாவிட்டால் படத்தை வெளியிட விட மாட்டோம் என தவ்ஜீத் ஜமாத் உள்பட பல இஸ்லாமிய அமைப்புகள் போராட்ட அறிவிப்பை வெளியிட்டன. அந்த நேரத்தில் அரசு என்ன செய்யும், சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்பட்டாலும் பரவாயில்லை, இவர் படத்தை ரிலீஸ் செய்ய வைக்க பார்க்குமா?

நடிகர் சரத்குமாருக்கும் தெரியும்
உண்மையில் பிரச்சினை என்ன என்பது குறித்து நடிகர் சரத்குமாருக்கு தெரியும். நான் அப்போது ஜெயலலிதாவை தலைமைச் செயலகத்தில் சந்தித்து பேசினேன். இஸ்லாமிய அமைப்புகள் படத்தை வெளியிட ஆட்சேபம் தெரிவித்ததால் அரசு படத்தை வெளியிட தடை விதித்தது. ஆனால் இந்த பிரச்சினை திசை திருப்பப்பட்டு உங்கள் அரசு மீது தவறான குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்படுகின்றன என்றேன். இதையடுத்து அடுத்த நாளே ஜெயலலிதா செய்தியாளர்களை சந்திப்பிற்கு ஏற்பாடு செய்திருந்தார்.

ஜெயலலிதா கொடுத்த நீண்ட விளக்கம்
அதில் ஜெயலலிதா பேசுகையில் தமிழகத்தில் எத்தனை தியேட்டர்கள் இருக்கின்றன. அந்த தியேட்டர்கள் ஒன்றிற்கு இரு காவலர்கள் என போட்டால் எத்தனை காவலர்கள் தேவைப்படுவார்கள்? இது மதம் சம்பந்தப்பட்ட உணர்வுப்பூர்வமான விஷயம். இஸ்லாமிய அமைப்புகளும் படக்குழுவினர் உட்கார்ந்து சமரசம் பேசி படத்தை வெளியிட்டுக் கொண்டால் அரசுக்கு எந்த பிரச்சினையும் இல்லை என நீண்ட விளக்கம் கொடுக்கப்பட்டது. இதையடுத்து இரு தரப்பினரும் சமரசம் பேசி ஒரு சில காட்சிகளை நீக்குவதற்கு கமல்ஹாசன் ஒப்புக் கொண்டார். இதையடுத்து படத்தை வெளியிட எந்த தடையும் இல்லை என இஸ்லாமிய அமைப்புகள் அறிவித்தனர். அதன் பிறகு படம் வெளியானது. இதில் முதல்வர் மீது பழி போடுவது சரியா என துக்ளக் ரமேஷ் கேள்வி எழுப்பியுள்ளார். இந்த நிலையில் உண்மையை மறைத்து திரித்து கமல்ஹாசன் பேசியுள்ளார் என சமூகவலைதளங்களில் விமர்சனங்கள் எழுந்துள்ளன. அது போல் ஜெயா டிவியில் அதே ஆண்டு அதாவது 2013 இறுதியில் பட்டிமன்ற நடுவராக பணியாற்றியவர் கமல்ஹாசன் என்பது குறிப்பிடத்தக்கது.
-
எங்களை தொட்டுருக்கவே கூடாது குழந்தை.. தவெகவுக்கு அதிமுக பைனல் வார்னிங் -
சினிமா துறைக்கு ரெட் கார்பெட்.. அதிமுக மாஜிக்களுடன் நோ சந்திப்பு.. விஜய்யின் செயலால் அப்செட்! -
“அதிமுக என்ற கட்சியே இருக்காது.. இன்னும் பல MLAக்கள் தவெகவுக்கு வருவார்கள்” - அமைச்சர் செங்கோட்டையன் -
பெரிய தலக்கட்டு..திமுகவுக்கு தாவும் மூவரணி! வேதனையில் எடப்பாடி! சைக்கிள் கேப்பில் புகுந்த அறிவாலயம்! -
அதிமுக எம்எல்ஏக்கள் 4 பேர் ராஜினாமா.. குதிரை பேரமா? ஐகோர்ட் கேட்ட கேள்வி! தீர்ப்பு ஒத்திவைப்பு -
சி.வி.சண்முகம் திண்டிவனத்தில் போட்ட பகீர் குண்டு.. ஆடிப்போன அதிமுக.. இபிஎஸ்-க்கு இப்படியொரு சிக்கலா -
பிரபலங்களால் பாஜகவுக்கு ப்ராப்ளம்.. தவெகவுக்கு தாவும் 2 நடிகைகள்! பக்கா பிளான் போட்ட செங்கோட்டையன்! -
சின்ன புரட்சித் தமிழர்..அதிமுகவில் என்ட்ரி கொடுக்கும் எடப்பாடி மகன்? மிதுனால் மிரளும் அதிமுக தலைகள்? -
“முதல்வர் விஜய் கையில் இருக்கும் காவல்துறை.. கட்சிக்காரர்களுக்கு பயம் இல்லை” - எடப்பாடி பழனிசாமி -
சைலண்ட் கில்லரான ஸ்டாலின்.. அதிமுக நிர்வாகிகளுக்கு பறந்த அழைப்பு.. தவெகவுக்கு செக் -
கரண்ட் கட்.. போராட்டமாக மாறிய பொதுக்கூட்ட மேடை! சூடான திமுகவினர்! சென்னையில் சலசலப்பு! -
லம்பாக அமவுண்டை அமுக்கிய தலைகள்.. ராகுலுக்குப் போன மெசேஜ்! அடுத்தடுத்த ஆக்ஷனுக்கு தயாராகும் காங்.,!












Click it and Unblock the Notifications