அடேங்கப்பா.. "கமலும் ரஜினியும்" இணைந்தால்.. இத்தனை ஓட்டுக்களை அசால்ட்டா பிரிக்க முடியுமாமே!
ரஜினிகாந்த் எடுக்கப்போகும் தேர்தல் வியூகங்கள் எப்படி இருக்கும்?
சென்னை: இன்னொரு விஜயகாந்த்தாக ரஜினிகாந்த் உருவெடுப்பாரா? அதிமுக, திமுகவின் ஓட்டுக்களை பிரிப்பதே ரஜினிதானா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது!
அரசியலுக்கு வரப்போவதும், கட்சி ஆரம்பிக்க போவதும், தேர்தலை சந்திக்க போவதும் உறுதி என்று ரஜினிகாந்த் தரப்பில் தெரிந்துவிட்டது.. ஆனால், அவர் பாஜக பக்கம் சாய்வாரா என்பதில் பல்வேறு கருத்துக்கள் நிலவி வருகின்றன.
அதேசமயம், ரஜினிகாந்த்தை, விஜயகாந்த்துடன் தொடர்புபடுத்தி பார்க்கும் மனோபாவமும் தமிழக மக்களுக்கு ஏற்பட்டுள்ளது.

தனித்து களம்
அன்று, 2006 தேர்தலின்போது, இரு பிம்பங்களை எதிர்த்து கொண்டுதான் விஜயகாந்த் போட்டியிட்டார். அதிலும் தனித்து போட்டியிட்டதால்தான், அந்த இரு கட்சிகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தினார். அதாவது, 8.5 சதவீத வாக்குகளை பிரித்து சாதனை புரிந்தார்.. இது கிட்டத்தட்ட 100 தொகுதிகளின் வெற்றி, தோல்வியையே அடியோடு சாய்த்து மாற்றி அமைத்தது.

ஜாம்பவான்கள்
அப்படித்தான் இப்போதும் ஒருசூழல் ஏற்பட்டுள்ளது.. அதே ரஜினி நினைத்திருந்தால், விஜயகாந்த் எதிர்கொண்ட இரு ஜாம்பவான்களையும் எதிர்கொண்டிருக்க முடியும்.. ஆனால் இப்போதைக்கு எடப்பாடி & ஸ்டாலின் இருவரை எதிர்கொள்ளும் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளார் அல்லது தானே அத்தகைய சூழலை ஏற்படுத்தி கொண்டுள்ளார் என்றே சொல்லலாம்.

கணிப்பு
அந்த வகையில் ரஜினியும் மாற்றத்தை ஏற்படுத்தினால், விஜயகாந்த்தை போலவே 100-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி, தோல்வி மாறும் என்றே கணிக்கப்படுகிறது.. இதில் திமுகவுக்கு அதிக பாதிப்பும் தலைவலியும் கூடியுள்ளது.. கொரோனா பாதிப்பு, புயல்பாதிப்புகளை லிஸ்ட் போட்டு அதிமுகவை குறை சொல்லலாம், அதை வைத்தே ஆட்சியை பிடிக்கலாம் என்று நினைத்திருந்த வேளையில், மொத்த கணக்கிலும் மண்ணை வாரி போட்டுள்ளார் ரஜினி.

விஜயகாந்த்
இனனொரு பக்கம், ரஜினி விஜயகாந்த்தை போல தனித்து நிற்பாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.. ஆனால் ஆலோசனை கூட்டத்தில், தனித்தே களம் காணலாம் என்று பெருமளவில் நிர்வாகிகள் சொல்லவில்லை போல தெரிகிறது.. கூட்டணி வைக்கலாம் என்றே தெரிவித்துள்ளனர்.

கூட்டணி
மேலும், தனித்து போட்டியிட்டால் எத்தனை தொகுதிகள் கிடைக்கும் என்று ஒரு ரகசிய சர்வே கூட ரஜினி நடத்தினார் என்று ஒரு செய்தி கசிகிறது.. அது உண்மையா என்று தெரியவில்லை.. ஆனால், அவர் நடத்திய அந்த ரகசிய சர்வேயில் சாதகமான சூழ்நிலை இல்லை என்றுதான் சொல்லப்பட்டதாம். அதனால் கூட்டணி அமைக்க பெருமளவு வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.

சான்ஸ்
அந்த வகையில் கமலுக்கு நிறையவே சான்ஸ் உள்ளது.. இவர்கள் 2 பேரும் சேர்ந்து குறைந்தபட்சம் 20 சதவீத வாக்குகளை சுலபமாகவே பிரித்து விடக்கூடும்.. அப்படி பிரித்தால், இதல் திமுக மட்டும் பாதிக்காது.. அதிமுகவின் ஓட்டுக்களும்தான் சேர்ந்து பிரியும்.. இன்னொரு ஆப்ஷன்படி, ரஜினியை முன்னிறுத்தியும் பாஜக தேர்தலை சந்திக்கலாம்.

அமித்ஷா
காரணம், அமித்ஷா அதிமுகவுடன் கூட்டணி உறுதி செய்துவிட்ட பின்பும்கூட, இன்று கூட்டணி பற்றி இன்னும் முடிவு செய்யவில்லை என்று முருகன் சொல்கிறார். இதற்கு காரணம், ரஜினியின் வருகையாகவும் இருக்கலாம். அப்படி ரஜினியை முன்னிறுத்தி பாஜக புது கூட்டணியை உருவாக்கினால் இந்த கூட்டணியும் கிட்டத்தட்ட 10 சதவீத வாக்குகளையாவது பிரிக்க நேரிடும்.. ஆக, ரஜினி தனித்து நின்றாலும் சரி, கூட்டணி வைத்தாலும் சரி.. அதிமுக, திமுக என்ற இரு கட்சிகளின் ஓட்டுக்களையும் பிரிக்கும் சக்தியாகவே இருப்பார் போலும்!
-
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
மொத்தமாக காலியாகும் மம்தா கட்சி.. பாஜகவுக்கு தாவும் 50 திரிணாமுல் MLAகள்? 20 எம்பிக்களும் ராஜினாமா? -
நிர்மலா சீதாராமனை சந்திக்கும் விஜய்.. 20 நிமிடத்தை தாண்டுமா? மோடி சந்தித்த கையோடு அடுத்த முக்கிய அப்பாயின்மென்ட்! -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது?












Click it and Unblock the Notifications