50 - 50.. திமுகவிற்கு பெரிய செக் வைக்கும் காங்கிரஸ்.. இது லிஸ்டுலேயே இல்லையே.. எழுகிறது மோதல்?
சென்னை: தமிழக காங்கிரசின் மேலிட பிரதிநிதியாக அஜோய்குமார் சமீபத்தில் நியமிக்கப்பட்டார். பொறுப்பேற்றுக்கொண்ட பிறகு முதன்முறையாக சென்னைக்கு நேற்று ( 20/1/23 ) வந்தார்.
தேர்தலை நெருங்குவதால் கட்சியின் மாநில நிர்வாகிகள் மற்றும் மாவட்ட தலைவர்களுடன் சத்தியமூர்த்திபவனில் ஆலோசனை நடத்தினார் அஜோய்குமார். மாநில தலைவர் அழகிரி தலைமையில் நடந்த இந்த ஆலோசனைக்கூட்டத்தில், திமுகவை பற்றி கடுமையாக விமர்சித்திருக்கிறார்கள் மாவட்ட தலைவர்கள்.

இந்த நிலையில், ''திமுகவிடம் கூடுதல் சீட் கேட்டு பேச்சுவார்த்தை நடத்தப்படும் ; அதற்கு நான் உத்தரவாதம் தருகிறேன்'' என்று நம்பிக்கைத் தெரிவித்துள்ளார் அஜோய் குமார்.
ஆலோசனைக்கூட்டம் குறித்து மாவட்ட தலைவர்கள் சிலரிடம் நாம் பேசியபோது, ''கடந்த முறை போட்டியிட்ட தொகுதிகளை விட கூடுதல் சீட்டு களை திமுகவிடம் கேட்டுப்பெற வேண்டும் ; வாரிசுகளுக்கு இந்த முறை சீட் கொடுக்கக்கூடாது; மாவட்ட தலைவர்கள் போட்டியிடும் வகையில் அவர்க ளுக்கு 50 சதவீதம் வாய்ப்புகள் தரவேண்டும் ; நம் கட்சி தொண்டர்களுக்கு திமுகவால் ஒரு பைசாவுக்கும் பிரயோஜனம் இல்லை ; கடந்த தேர்தலில் 60 இடங்களில் சொற்ப ஓட்டுகளில்தான் திமுக ஜெயித்தது. அதற்கு காங்கிரஸ் வாக்குகள்தான் உதவியது ; காங்கிரசை திமுக எதிரிக்கட்சி மாதிரிதான் ட்ரீட் பண்ணுது ;
மோடிக்கு நாம் கறுப்புக்கொடி காட்ட திட்டமிட்டால் திமுகவுக்கு என்ன வந்தது ? காங்கிரஸ்காரர்களை வீட்டுக்காவலில் வைக்கிறது திமுக போலீஸ் ; காங்கிரசை அக்யூஸ்ட் மாதிரி திமுக நடத்துகிறது ; ரெக்கமண்ட் பார்த்து போட்டியிட வாய்ப்புத்தரக்கூடாது ; கட்சிக்காக காலம் காலமாக உழைப்பவர்களுக்கும் துரோகம் செய்யாதவர்களுக்கும் இந்த முறை வாய்ப்புத் தர வேண்டும் என்றெல்லாம் மாவட்ட தலைவர்கள் பேசினார்கள். ஆனால், திமுக ஆதரவாக பேசினார் கே.எஸ்.அழகிரி.
அதாவது, அதிக இடங்களில் நாம் போட்டியிட நினைப்பது நியாயமானதுதான்.
ஆனால், திமுகவை போல காங்கிரசின் கட்டமைப்பு வலிமையாக இருக்க வேண்டும். கட்டமைப்பை வலிமைப்படுத்தாமல் கூடுதல் சீட் எப்படி கேட்கமுடியும்? பூத் கமிட்டியை கூட முழுமையாக நாம் செய்ய முடியவில்லையே? கடந்த தேர்தலில் ராகுல்காந்தியை பிரதமர் வேட்பாளராக முன்மொழிந்தவர் ஸ்டாலின். அதை நாம் மறந்து விடக் கூடாது என திமுக ஆதரவு நிலை எடுத்து பேசினார் கே.எஸ்.அழகிரி.
இறுதியில் பேசிய அஜோய்குமார், எனக்கு கொஞ்சம் கொஞ்சம் தமிழ் தெரியும். நீங்க பேசுற தமிழ் எனக்கு புரியும். உங்க உணர்வுகளை மதிக்கிறேன். திமுகவிடம் கூடுதல் சீட் கேட்டு பேசுவேன்.
நல்லது நடக்கும் . கவலைப்படாதீர்கள். இந்த முறை, புதியவர்களுக்கு நிறைய வாய்ப்புகள் தர மேலிடத்தில் பேசுவேன் என நம்பிக்கையாக சொன்னார் அஜோய்குமார்'' என்று ஆலோசனைக் கூட்டத்தில் பகிரப்பட்ட கருத்துக்களை விவரித்தார்கள் மாவட்ட தலைவர்கள்.
திமுக பிளான்: இன்னொரு பக்கம் 2024 லோக்சபா தேர்தலுக்கு தயாராகும் விதமாக திமுக பல்வேறு குழுக்களை நியமித்து உள்ளது. அதில் மேற்கு மண்டலத்தின் பொறுப்பு அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு வழங்கப்பட்டு உள்ளது.
லோக்சபா தேர்தலுக்கு திமுக தீவிரமாக தயாராகி வருகிறது. ஏற்கனவே மண்டல பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுவிட்டனர்.அதேபோல் பூத் கமிட்டி நிர்வாகிகளும் நியமிக்கப்பட்டுவிட்டனர். பூத் கமிட்டி சார்பாக வாக்காளர்களை சந்திக்கும் பணிகளை திமுக தொடங்கவிட்டது.
சர்வேக்கள்: இந்த நிலையில்தான் கோவை, சென்னை, சேலம், திருச்சி, மதுரை போன்ற பெருநகரங்களில் திமுக சார்பாக பூத் கமிட்டி நிர்வாகிகள் முக்கியமான சர்வே ஒன்றை மேற்கொள்ள தொடங்கி உள்ளனர். இந்த சர்வேபடி நேரடியாக பூத் கமிட்டி நிர்வாகிகள் வீடு வீடாக சென்று சர்வே எடுப்பார்கள்.
அவர்களின் பூர்வீகம், வீடு, நிதி விவரங்களை கேட்பார்கள். இதில் ஜாதி தொடர்பான விவரங்களையும் சேகரிக்க உள்ளனராம். ஜாதி எண்ணிக்கையில் எத்தனை பேர் உள்ளனர் என்பதை தெரிந்து கொள்வதற்காக இந்த கணக்கெடுப்பை திமுக எடுக்கிறதாம். தேர்தல் நேரத்தில் வேட்பாளர்களை நிறுத்துவது தொடங்கி பல்வேறு அறிவிப்புகளை வெளியிடுவதை வரை பல விஷயங்களில் கவனம் செலுத்தும் விதமாக திமுக இந்த கணக்கெடுப்பை கையில் எடுக்கிறதாம்.
-
"கடைசி மூச்சு வரை உங்களுக்காக உழைப்பேன்!" - கலைஞர் கருணாநிதியின் இறுதிப் பேருரை.. என்ன பேசினார்? -
‘அல்காரிதம்’ புரியாததால் வந்த வினை! தவெகவின் அலையைக் கணிக்கத் தவறிய டிஆர்பி ராஜா.. அடியோடு மாறுதாம்! -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
திமுகவுடன் உறவு தொடரும்.. கம்யூனிஸ்ட்கள் அதிரடி முடிவு.. சண்முகம் பளீச்.. விஜய் ஷாக் -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்!












Click it and Unblock the Notifications