சிங்கப்பாதை.. ஆரம்பமே அதிரடி காட்டும் புது டிஜிபி சங்கர்.. இதுதான் முதல் டார்கெட்.. திரும்பிய தலைகள்
சென்னை: தமிழ்நாட்டின் புதிய டிஜிபிக்கு.. அதாவது சங்கர் ஜிவால் ஐபிஎஸ்ஸுக்கு முக்கியமான அசைன்மென்ட் ஒன்றை தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் கொடுக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
தமிழ்நாடு டிஜிபி சைலேந்திர பாபுவின் பதவிக்காலம் இன்றோடு நிறைவு பெற்றது. இவரின் பதவிக்காலம் முடிவதால் கடந்த 4 வாரங்களாக புதிய டிஜிபியை தேர்வு செய்வதற்கான பணிகள் நடந்து வந்தன. சஞ்சய் அரோரா, சங்கர் ஜிவால், ஆபாஷ் குமார், சீமா அகர்வால், பி.கே.ரவி, ஏ.கே.விஸ்வநாதன், அம்ரேஷ் பூஜாரி உள்ளிட்டோரின் பெயர்கள் புதிய டிஜிபிக்கான லிஸ்டில் இடம்பெற்று இருந்தது. இவர்களின் லிஸ்டை மத்திய குடிமைப்பணிகள் ஆணையத்திடம் தமிழ்நாடு அரசு அனுப்பி ஆலோசனை செய்தது.

அங்கே நடத்தப்பட்ட ஆலோசனையில் 3 பேரின் பெயர்கள் தேர்வாகி மீண்டும் தமிழ்நாட்டிற்கு அனுப்பப்பட்டது. இதையடுத்து டெல்லி அனுப்பிய லிஸ்டில் இருந்து தமிழ்நாடு அரசு சென்னை கமிஷ்னர் சங்கர் ஜிவாலை டிஜிபியாக நியமனம் செய்து முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டார். சென்னையின் புதிய போலீஸ் கமிஷனராக சந்தீப் ராய் ரத்தோர் நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.
அதிரடி: இன்று பதவி ஏற்றுக்கொண்ட டிஜிபி சங்கர் ஜிவால் ஆரம்பமே அதிரடியாக செயல்பட தொடங்கி உள்ளார். அதன்படி காவல்துறையில் புதிய தொழில்நுட்பங்களை கொண்டு வருவோம் என்று உறுதி அளித்துள்ளார். அதேபோல் சென்னையில் காவல்துறையில் செய்யப்பட்ட புரட்சிகள் தமிழ்நாடு முழுக்க கொண்டு செல்லப்படும் என்றும் கூறி உள்ளார்.
மேலும் தமிழ்நாடு முழுக்க கள்ளச்சாராய கும்பல்களை தடுப்போம். அவர்களை கைது செய்வோம் ரவுடிகளை கைது செய்வோம். இதை தடுப்பதே முதல் நோக்கம் என்று கூறியுள்ளார். சமீபத்தில் விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டில் கள்ளச்சாராயம் குடித்து 17 பேர் பலியான சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே விழுப்புரத்தில் 12 பேர் உயிரிழந்த நிலையில், ராஜவேல்(38) என்பவர் விழுப்புரத்தில் பலியாகி உள்ளார்.
ஏற்கனவே செங்கல்பட்டில் கள்ளச்சாராயத்தால் 5 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. இதில் பலியான நபர்களின் குடும்பங்களுக்கு முதல்வர் ஸ்டாலின் தலா ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவித்து உள்ளார்.தமிழ்நாட்டில் ஒரு காலத்தில் கள்ளச்சாராயம் உச்சத்தில் இருந்தது. 90 களில் உச்சத்தில் இருந்த பிஸ்னஸ் ஆகும் இது. அதன்பின் அரசு தீவிரமாக செயல்பட்டு இதை முடக்கியது.அப்போது கண்கள் போன பரிதாபமும், உயிர்கள் போன கொடூரமும் அரங்கேறியது. அதன்பின் டாஸ்மாக் வந்ததும் கள்ள சாராயத்திற்கான தேவை குறைந்தது. படிப்படியாக கள்ளச்சாராயம் அதிகம் ஆனது.
இது போக தஞ்சாவூர், கீழவாசல் பகுதியில் உள்ள அரசு அனுமதிக்கப்பட்ட பாரில் மது அருந்திய இரண்டு பேர் மரணம் அடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இவர்கள் அருந்திய மதுவில் சையனைடு கலந்து இருந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில்தான் தமிழ்நாடு முழுக்க கள்ளச்சாராய கும்பல்களை தடுப்போம் என்று டிஜிபி சங்கர் கூறியுள்ளார்.
யார் இவர்?: 1990 பேட்ச் அதிகாரியான ஜிவால், உத்தரகாண்ட் மாநிலம் அல்மோராவைச் சேர்ந்தவர். அவர் சேலம் மற்றும் மதுரையில் காவல் கண்காணிப்பாளராகவும், திருச்சி காவல் ஆணையராகவும், போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் மண்டல இயக்குநராகவும் இதற்கு முன் இருந்துள்ளார். தற்போது சென்னை மாநகர கமிஷனராக இருக்கிறார்.
2008ல் ஐ.ஜி., உளவுத்துறை (உள் பாதுகாப்பு) ஐ.ஜி., ஆக உயர்த்தப்பட்டார். 2011ல், ஆறு ஆண்டுகள் ஈரோட்டைத் தலைமையிடமாகக் கொண்ட சிறப்பு அதிரடிப் படைக்கு தலைமை தாங்கினார். ஜிவாலுக்கு 2007ல் சிறந்த சேவைக்கான போலீஸ் பதக்கமும், 2019ல் சிறந்த சேவைக்காக ஜனாதிபதியின் போலீஸ் பதக்கமும் வழங்கப்பட்டது.
உளவுத்துறையில் சிறந்த அனுபவம் கொண்ட இவர் இன்ஜினீயரிங் படித்தவர். தமிழ், ஆங்கிலம் , இந்தியில் நல்ல புலமை கொண்டவர். அதேபோல் உத்தரகாண்டின் தாய்மொழியான குமானி மொழியும் தெரிந்தவர். கடந்த அதிமுக ஆட்சியில் அதிகமாக ஓரம்கட்டப்பட்ட சங்கர் ஜிவால் திமுக ஆட்சியில் மீண்டும் சீனிற்கு வந்தார். அதன்பின்தான் இவர் சென்னை கமிஷனராக நியமிக்கப்பட்டார்.இதையடுத்து தமிழ்நாட்டின் அடுத்த டிஜிபியாக பதவி ஏற்றுள்ளார்.
-
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
என்னதான் சண்டை போட்டாலும்.. மத்திய அரசுடன் முதல்வர் விஜய் போட்ட டீல்! சுளையா 2,177 கோடி கிடைக்கும்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
ஆளுநரின் செயலாளர் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு -
முடிவுக்கு வந்த 9 மாத காத்திருப்பு.. தமிழக புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் இன்று பொறுப்பேற்பு! -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம்












Click it and Unblock the Notifications