"இதுதான் ஃபோகஸ்.." முதல்வரின் அமெரிக்க பயணம்.. வெளியான அதிமுக்கிய தகவல்.. அடித்து ஆடும் டிஆர்பி ராஜா
சென்னை: முதல்வர் ஸ்டாலின் வெளிநாடுகளில் முதலீடுகளை ஈர்க்க இன்றிரவு அமெரிக்கா செல்கிறார். அங்கு அவர் பல முக்கிய நிறுவனங்களின் சிஇஓ-களை நேரில் சந்தித்து, தமிழகத்தில் முதலீடு செய்ய அழைப்பு விடுக்க உள்ளார். இதற்கிடையே முதல்வரின் இந்த வெளிநாட்டுப் பயணம் தொடர்பாக சில முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளது.
தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் முதலீடுகளை ஈர்க்க அவ்வப்போது வெளிநாடுகளுக்குச் செல்வதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார். அதன்படி முதல்வர் ஸ்டாலின் இன்று இரவு அமெரிக்கா செல்கிறார்.

இதற்கிடையே இந்த பயணம் தொடர்பாக சில முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளது. அறிவுப் பொருளாதாரமாகத் தமிழ்நாடு தன்னை முன்னிறுத்த முயலும் நிலையில், புதுயுகத் துறைகள் அதாவது டெக் சார்ந்த துறைகளில் முதலீடுகளை ஈர்ப்பதிலேயே இந்த பயணத்தில் கவனம் செலுத்தப்படும் என்று தெரிகிறது.
திட்டம் என்ன: முதல்வரின் இந்த அமெரிக்கப் பயணம், தமிழகத்தை அறிவுப் பொருளாதாரமாக நிலைநிறுத்த உதவும் என்று தமிழக தொழில்துறை அமைச்சர் டிஆர்பி ராஜா தெரிவித்தார். இது குறித்து அவர் பிரபல ஆங்கில இதழுக்கு அளித்த பேட்டியில் "சர்வதேச அளவில் அமெரிக்க நிறுவனங்கள் ஆதிக்கம் செலுத்தும் உலகளாவிய திறன் மையங்கள் (GCCs), செயற்கை நுண்ணறிவு, ஆர் & டி உள்ளிட்ட துறைகளில் கவனம் செலுத்தத் திட்டமிட்டுள்ளோம். தமிழ்நாட்டின் இளைஞர்கள் திறமை பெற்றவர்களாக இருக்கும் நிலையில், வரும் காலத்தில் அவர்கள் இந்தத் துறைகளில் சாதிக்க வழியை அமைத்துத் தருவோம்" என்று அவர் தெரிவித்தார்.
முதல்வர் ஸ்டாலின்: முதல்வர் ஸ்டாலின் இன்றிரவு அமெரிக்கா செல்லும் நிலையில், அதற்கான பணிகளைக் கவனிக்க டிஆர்பி ராஜா ஏற்கனவே அமெரிக்காவில் சென்றுவிட்டார். முதல்வர் ஸ்டாலின் அமெரிக்காவில் 15 நாட்கள் முக்கிய நிறுவனங்களின் சிஇஓக்கள், புலம்பெயர்ந்த தமிழர்களைச் சந்திக்க உள்ளார்.
தமிழகத்தில் ஏற்கனவே இருக்கும் நிறுவனங்கள் விரிவுபடுத்துவது, புதிய நிறுவனங்களை மாநிலத்திற்குக் கொண்டு வருவது என இரண்டு நோக்கங்களையும் மனதில் வைத்தே முதல்வரின் பயணம் திட்டமிடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். குறிப்பாக அதிக மதிப்புள்ள ஆராய்ச்சி வேலைகளைத் தமிழக அரசு ஊக்குவிக்கும் என்பதைக் காட்ட இருக்கிறார்கள். இதன் மூலம் தமிழகத்தில் அதிக ஊதியம் பெறும் வேலை வாய்ப்புகளை உருவாக்க முடியும் என அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
ஒப்பந்தங்கள் இருக்குமா: முதல்வர் ஸ்டாலினின் இந்த அமெரிக்கப் பயணத்தில் முதலீட்டுப் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் எதாவது கையெழுத்தாகுமா என்பது குறித்து அதிகாரிகள் எந்தவொரு தகவலையும் பகிரவில்லை. அமெரிக்காவில் நவ. மாதம் தேர்தல் நடக்கும் நிலையில், தேர்தலுக்குப் பிறகு அமெரிக்காவின் முக்கிய நிறுவனங்கள் பெரிய முதலீடுகள் குறித்த முடிவுகளை எடுக்கும் என்று தொழில்துறை வட்டாரங்கள் கூறுகின்றன.
முதலீட்டாளர் மாநாட்டின் நிலை என்ன: முன்னதாக சர்வதேச முதலீட்டாளர் மாநாட்டில் போடப்பட்ட ஒப்பந்தங்களின் அடிப்படையில் கடந்த வாரம் முதல்வர் ஸ்டாலின் ரூ.17,616 கோடி முதலீட்டில் 19 திட்டங்களைத் தொடங்கி வைத்தார். மேலும், ₹51,157 கோடி முதலீட்டில் 28 திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். தமிழகத்தில் முதலீடு செய்யும் நிறுவனங்களுக்கு நடைமுறையை எளிமையாக்க நேரடியாக தொழில்துறை அமைச்சர் தலைமையிலான உயர்மட்டக் குழு கண்காணித்து வருகிறது. இதன் காரணமாகவே முதலீடுகள் சீக்கிரம் வந்துள்ளது.
கடந்த ஜனவரி மாதம் நடந்த மாநாட்டில் போடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் செயின்ட் கோபேன், ஹூண்டாய், செம்ப்கார்ப் மற்றும் ஸ்விங் ஸ்டெட்டர், ஆகியவை முதலீட்டிற்கான பணிகளைத் தொடங்கிவிட்டன. அதேபோல மருந்து நிறுவனமான ஓம்ரான் சென்னையில் தனது ஆலையில் சோதனை முறையில் உற்பத்தியைத் தொடங்கிவிட்டது குறிப்பிடத்தக்கது.
-
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
எல்லாம் ஓவர்.. நெருங்கும் கிளைமேக்ஸ்.. பாஜக தலைமை மேஜர் முடிவு.. இன்று வெளியாகும் வேட்பாளர் பட்டியல் -
ராகுலிடம் போன டாக்குமெண்ட்! நள்ளிரவில் நடந்த மீட்டிங்! இன்று வெளியாகும் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
சூடுபிடிக்கும் தேர்தல் களத்தில்.. கொட்டி தீர்க்க போகுது மழை.. 2 நாட்களுக்கு குளுகுளு கிளைமேட் தான்! -
RTE admissions: தனியார் பள்ளிகளில் இலவச கல்வி! ஆர்டிஇ சேர்க்கை எப்போது? யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? -
தமிழகத்தின் 44 தனித்தொகுதிகளில் 90% வேட்பாளர்கள் தகுதி நீக்கம்? அர்ஜுன் சம்பத் பொதுநல வழக்கு -
இன்னும் 2 நாட்கள்தான் இருக்கு! காங்கிரஸ், பாஜக வேட்பாளர்கள் தேர்வு செய்வதில் ஏன் இழுபறி? -
Spot the difference: இந்த இரு படங்களுக்கிடையே 3 வித்தியாசங்களை கண்டுபிடியுங்கள்! சவாலுக்கு ரெடியா? -
ஏழை மாணவர்களுக்கு சூப்பர் சான்ஸ்.. தனியார் பள்ளிகளில் LKG முதல் இலவசம்.. ஹென்றி சொன்ன தேதியை பாருங்க -
இன்று முதல் புதிய வருமான வரி விதிகள் அமல்! சம்பளதாரர்கள் கவனிக்க வேண்டிய 'டாப் 10' மாற்றங்கள்! -
இடி, மின்னலுடன் கனமழை.. ஆரஞ்சு அலர்ட் கொடுத்த வானிலை மையம்! மக்களே உஷார்












Click it and Unblock the Notifications