ரூ.50 ஆயிரம் அடிப்படை ஊதியம்+25 ஆண்டு சர்வீஸ் இருந்தால்! EPS திட்டத்தில் ஓய்வூதியம் எவ்வளவு?
சென்னை: ரூ 50 ஆயிரம் அடிப்படை ஊதியம், 25 ஆண்டுகள் சர்வீஸ் இருந்தால் ஓய்வூதியம் எவ்வளவு கிடைக்கும் என்பதை பார்க்கலாம். மத்திய அரசு பணிகளுக்கு 60 வயதிலும் மாநில அரசு பணிகளுக்கு 58 வயதிலும் ஓய்வூதியம் வழங்கப்படுகிறது.
அரசு பணிகளிலோ அல்லது தனியார் பணிகளிலோ நாம் பணியாற்றும் போது வாழ்வாதாரத்திற்கு ஊதியம் முக்கியமானது. அது கூலி வேலையாக இருந்தாலும் வாழ்க்கைக்கு தேவையான ஊதியம் கிடைக்கப்பட வேண்டும்.

அந்த வகையில் ஓய்வு பெற்றவர்களுக்கும் தங்கள் எதிர்காலத்திற்கு ஓய்வூதியம் என்ற ஒன்று எவ்வளவு கிடைக்கும் என்பதை பொருத்துதான் நமது வாழ்க்கை சக்கரம் எப்படி ஓடும் என்பதை கணிக்க முடியும். தனியார் துறையில் ஒருவரின் அடிப்படை ஊதியம் ரூ 50 ஆயிரம் என்று வைத்துக் கொள்வோம்.
அவர் ஊழியர் ஓய்வூதிய திட்டம் என்பதன் கீழ் 20, 25, 30 ஆண்டுகள் சேவைக்குப் பிறகு அவர் எவ்வளவு ஓய்வூதியம் பெற முடியும் என்பதை பார்க்கலாம். ஒவ்வொரு ஊழியருக்கு EPFO கணக்கு இருக்கும். அந்த கணக்கில் ஊழியரின் ஊதியத்தில் இருந்து 12 சதவீத தொகையை டெபாசிட் செய்கிறார்கள்.
அதே அளவு தொகையை அந்த நிறுவனமும் டெபாசிட் செய்யும். ஊழியர் டெபாசிட் செய்யும் தொகையில் ஒரு பகுதி இபிஎஃப் கணக்கிற்கும் ஒரு பகுதி இபிஎஸ் கணக்கிற்கும் (ஊழியர் ஓய்வூதிய திட்டம்) செல்லும். இந்த நிறுவனத்திலிருந்து ஓய்வு பெற்ற பிறகு ஊழியர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்படும்.
அனைத்து ஊழியர்களும் 10 ஆண்டுகள் பணி முடிவுக்கு பிறகு இபிஎஸ் திட்டத்தின் கீழ் ஓய்வூதியம் பெற தகுதி பெறுகிறார்கள். இது தவிர, 50 வயதில் முன்கூட்டியே ஓய்வு பெற்றாலும், அப்போதும் ஓய்வூதியம் பெறலாம். ஆனால் இதில் ஓய்வூதியத் தொகை குறையும்.
வழக்கமான ஓய்வூதியத்திற்கும் 58 வயது தேவை. இபிஎஃப்ஓவிற்கு வழங்கப்படும் 12 சதவீதம் இரு பகுதிகளாக பிரிக்கப்படும். 8.33 சதவீதம் ஊழியர் ஓய்வூதியத் திட்டத்திற்கும் 3.67 சதவீதம் ஊழியர் வருங்கால வைப்பு நிதிக்கும் செல்லும். ஊழியர் ஓய்வூதிய திட்டத்தின்படி உங்களுக்கு அடிப்படை ஊதியம் ரூ 50 ஆயிரம் என இருந்தால் 20, 25, 30 ஆண்டுகள் பணிபுரிந்திருந்தால் அந்த நபருக்கு ஓய்வூதிய கணக்கீடு ரூ 15 ஆயிரம் இருக்கும்.
20 ஆண்டுகள் பணியாற்றியிருந்தால் ஓய்வூதியம் = (15,000 * 20)/70= ரூ 4,285 மாதம் கிடைக்கும்.
25 ஆண்டுகள் பணியாற்றியிருந்தால் ஓய்வூதியம் = (15,000 * 25)/70= ரூ 5,357 மாதம் கிடைக்கும்.
30 ஆண்டுகள் பணியாற்றியிருந்தால் ஓய்வூதியம் = (15,000 * 30)/70= ரூ 6,428 மாதம் கிடைக்கும்.
ஒரு ஊழியர் இறந்துவிட்டால் இபிஎஸ் திட்டத்தின் கீழ் நாமினிக்கு ஓய்வூதியம் கிடைக்கும். ஊழியர்கள் தங்கள் கணவன், மனைவி, குழந்தைகள், பெற்றோர் இவர்களில் ஒருவரை நாமினியாக பரிந்துரைப்பர். அதன்படி யாரை பரிந்துரைக்கிறார்களோ அவர்களுக்கு ஓய்வூதியம் கிடைக்கும்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications