மேல்முறையீட்டை காட்டிலும் வலுவான ஆயுதம் தினகரனிடம் இருக்கே!
Recommended Video

சென்னை: ஆர் கே நகர் போல் வெற்றியை தனக்கே உரித்தாக்கிக் கொள்ளும் வகையில் மேல்முறையீடு செய்யாமல் இடைத்தேர்தலை சந்திக்கும் அதிரடி முடிவை தினகரன் எடுத்துள்ளார்.
தகுதிநீக்க வழக்கில் இன்று வெளியான தீர்ப்பு குறித்து தமிழகமே எதிர்பார்ப்பில் இருந்தது. தீர்ப்பு 18 பேருக்கு சாதகமாக வந்தால் அதிமுக அரசு கவிழும் என கருதப்பட்டது.
அதுபோல் அரசுக்கு சாதமாக வந்தால் அதிமுக அரசு தப்பும் என்று கூறப்பட்டு வந்தது. இந்நிலையில் தீர்ப்பு வெளியானது. அதில் சபாநாயகர் எடுத்த முடிவில் எந்த தவறும் இல்லை. எனவே தகுதிநீக்கம் செல்லும் என்று நீதிபதி தீர்ப்பளித்தார்.

என்னென்ன
இந்த விவகாரத்தில் தினகரனுக்கு முன்னால் இருப்பது 3 ஆப்ஷன்கள்தான். அவை மேல்முறையீடு செய்வது, இடைத்தேர்தலை சந்திப்பது, மூன்றாவது ஆப்ஷன் இரண்டையும் செய்வது ஆகும்.

முடிவு
உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தாலும் உயர்நீதிமன்றம் கூறிய தீர்ப்பையே உறுதி செய்தாலும் செய்யலாம். எனவே மேல்முறையீடு செய்யாமல் இருப்பதே சரி என தினகரன் தரப்பு முடிவு செய்யலாம்.

வாரி குவிப்பது
மற்றொன்று இடைத்தேர்தலை சந்திப்பது என்பதாகும். மேல்முறையீடு செய்து காலத்தை வீணடிப்பதற்கு பதில் 20 தொகுதி இடைத்தேர்தலிலும் பங்கேற்று ஆர் கே நகர் போன்று வெற்றியை வாரி குவிப்பது என நினைக்கலாம்.

தினகரன் திட்டம்
இந்த இரண்டை தவிர்த்து மூன்றாவது ஆப்ஷனை தேர்வு செய்வது சந்தேகமே. ஏனெனில் ஆர் கே நகரில் தினகரன் மிகவும் சாதுர்யமாக ஒரு சுயேச்சை வேட்பாளராக இரு மாபெரும் கட்சிகளை பின்னுக்கு தள்ளினார். அதுபோல் இந்த 20 தொகுதிகளிலும் போட்டியிட்டு வெற்றிகாணலாம் என்பதே தினகரனின் திட்டமாக உள்ளது. இதையே இன்று அவர் தனது பேட்டியிலும் கூறியுள்ளார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications