விஜய்க்கு ஆளுநர் விதித்த கெடு நாளையுடன் முடிவு! தமிழகத்தில் அடுத்தது என்ன?

Subscribe to Oneindia Tamil

சென்னை: பெரும்பான்மையை நிரூபிக்க நாளை வரை ஆளுநர் நேரம் கொடுத்துள்ள நிலையில் விஜய்யின் அடுத்த கட்ட நகர்வு என்னவாக இருக்க போகிறது என்ற கேள்வி எழுந்துள்ளது.

தமிழ்நாடு சட்டசபைத் தேர்தலில் 234 தொகுதிகளில் எந்தக் கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காத நிலையில், தமிழக அரசியல் களம் தீவிர பரபரப்பில் சுழன்று கொண்டிருக்கிறது. 108 இடங்களை வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், ஆட்சி அமைக்க உரிமை கோரி ஆளுநருக்கு கடிதம் எழுதியிருந்தார்.

tvk Vijay

அந்த கடிதத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க இரண்டு வார கால அவகாசம் தேவை என்று கோரிக்கை வைத்திருந்தார். ஆனால் ஆளுநர் மே 10 ஆம் தேதி வரை மட்டுமே கால அவகாசம் கொடுத்திருந்தார்.

இந்நிலையில், பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் வழங்கிய கெடு நாளையுடன் (மே 10) முடிவடைகிறது. ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர், பெரும்பான்மை ஆதரவை நிரூபித்த பின்னரே முதலமைச்சராகப் பதவியேற்க அழைப்பு வழங்கப்படும் என்று தெளிவாக தெரிவித்துள்ளார்.

மாநிலத்தில் ஒரு நிலையான அரசின் அவசியத்தை வலியுறுத்திய ஆளுநர், தேவையான பெரும்பான்மை ஆதரவு முறையாக நிரூபிக்கப்படும் வரை அடுத்தகட்ட நடவடிக்கைகளை எடுக்கப் போவதில்லை என்றும் கூறியுள்ளார்.

இரண்டு முறை நேரில் சந்திப்பு

மே 6, 7 தேதிகளில் இரண்டு முறை ஆளுநர் அர்லேகரை சந்தித்த விஜய், ஆட்சி அமைக்க உரிமை கோரினார். ஆட்சியமைத்துவிட்டு சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிப்போம் என தவெக விஜய் தரப்பு ஆளுநரிடம் முறையிட்டதாகக் கூறப்பட்டது. ஆனால், ஆட்சியமைக்க பெரும்பான்மை ஆதரவு தேவை என ஆளுநர் வலியுறுத்தியதாக தகவல் வெளியாகியிருக்கிறது.


118 - மந்திர எண்ணும் இன்னும் தொலைதூரமும்

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளின்படி தவெக 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. ஆனால் 118 இடங்கள் இருந்தால் மட்டுமே பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க முடியும். திமுகவிலிருந்து விலகி 5 இடங்களை வென்ற காங்கிரஸ் தவெகவிற்கு ஆதரவு அளித்திருக்கிறது. காங்கிரஸ் ஆதரவு கிடைத்த பின்னரும் மேலும் 6 உறுப்பினர்களின் ஆதரவை பெற தவெக தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறது. அதற்காக விடுதலை சிறுத்தைகள், இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளிடம் தவெக ஆதரவு கேட்டது.

இதையடுத்து மார்க்சிஸ்ட், கம்யூனிஸ்ட், விசிக உள்ளிட்ட கட்சிகளிடம் ஆதரவு கேட்டிருந்தனர். இந்த நிலையில் கம்யூனிஸ்ட்கள் ஆதரவு கொடுத்துவிட்டதால் தவெகவின் பலம் 116 ஆக உயர்ந்தது.

இதனிடையே திருமாவளவனின் நிலைப்பாடு குறித்து விசிக நிர்வாகிகளுடன் அவர் ஆலோசனை நடத்தியிருந்தார். இதனிடையே விசிக தங்களது ஆதரவு கடிதத்தை ஆளுநர் மாளிகைக்கு மெயில் அனுப்பியதாக சொல்லப்பட்டது.

அது போல் கம்யூனிஸ்ட்கள் ஆதரவு அளித்ததால் ஐயூஎம்எல் கட்சியும் ஆதரவு அளித்ததால் விஜய்க்கு சபாநாயகர் நீங்கலாக 119 பேரின் ஆதரவு இருந்ததாக சொல்லப்பட்டது. இதனால் படுகுஷியில் ஆட்சி அமைக்க உரிமை கோரி மூன்றாவது முறையாக ஆளுநர் அர்லேகரை விஜய் சந்தித்திருந்தார்.

இதனால் தமிழகம் முழுவதும் தவெகவினர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். ஆனால் ஐயூஎம்எல் ஆதரவு தரவில்லை என தகவல் வெளியானது. அது போல் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனும் ஆதரவு தருவதற்கு பதிலாக நேற்று ஸ்டாலினை சந்தித்து பேசியதாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில் அவருடைய நிலைப்பாடு குறித்து இன்று அறிவிப்பதாக கூறியுள்ளார். இதனால் விஜய்யை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

உச்ச நீதிமன்றம் - கடைசி ஆயுதம்

தனிப்பெரும் கட்சியான தவெகவை ஆளுநர் அர்லேகர் ஆட்சி அமைக்க அழைக்காதது பெரும் விமர்சனங்களை எழுப்பி வருகிறது. இதனால் தவெக உச்சநீதிமன்றத்திற்கு செல்ல திட்டமிட்டதாக தெரிகிறது. இது தொடர்பாக மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வியுடன் தவெகவினர் பேசி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 1994 'எஸ்.ஆர். பொம்மை' வழக்கில், பெரும்பான்மையை ராஜ்பவனில் அல்ல, சட்டசபையில்தான் நிரூபிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது என்ற வழக்கு முன்னுதாரணம் தவெக வழக்கறிஞர் குழுவின் மிக முக்கியமான ஆயுதமாக இருக்கும்.

குடியரசுத் தலைவர் ஆட்சி நிழல்

விஜய் அடுத்த சில நாட்களில் பெரும்பான்மையை நிரூபிக்கத் தவறினால், தமிழ்நாட்டில் சட்டப்பிரிவு 356-ன் கீழ் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்படலாம்.

நாளை என்ன நடக்கும்?

மே 10 ஆம் தேதி நாளை தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு திருப்புமுனை நாளாக அமையவிருக்கிறது. 118 எம்.எல்.ஏக்கள் பட்டியல் ஆளுநர் மேசையில் வைக்கப்படுமா, இல்லை தமிழகம் குடியரசுத் தலைவர் ஆட்சியை நோக்கி நகருமா - என்ற கேள்விக்கு விடை நாளை கிடைக்கும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+