அடித்து ஆடும் அதிமுக! விஜயகாந்த் சைட் வேற கோபமாமே.. திமுக சான்ஸே இல்லை! பாஜகவிற்கு வந்த புது சிக்கல்
அதிமுக பாஜக இடையிலான மோதல் கடந்த சில நாட்களாக அடுத்த கட்டத்தை அடைந்து உள்ளது.
சென்னை: அதிமுக - பாஜக இடையிலான மோதல் காரணமாக 2024ல் பாஜக யாருடன் கூட்டணி வைக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது.
கடந்த சில நாட்களாக அதிமுகவை பாஜகவும், பாஜகவை அதிமுகவும் நேரடியாக எதிர்க்க தொடங்கி உள்ளன. ஈரோடு கிழக்கு சட்டசபை தேர்தல் முடிந்த பின்புதான் அதிமுக - பாஜக இடையிலான மோதல் தொடங்கியது.
தேர்தல் முடிந்ததும் பாஜக தலைவர் அண்ணாமலை அதிமுகவின் ஒற்றை தலைமை குறித்து நேரடியாக பேச தொடங்கினார், அதில், இடைத்தேர்தலில் பணநாயகம் வென்றுவிட்டது. அதிமுக ஒன்று சேராததே தேர்தல் தோல்விக்கு காரணம். தேர்தலில் யார் நிற்க வேண்டும். யாரை வேட்பாளராக நிறுத்த வேண்டும் என தேர்தலுக்கு முன்பே அதிமுகவில் பிரச்சினை எழுந்தது.

அண்ணாமலை
இதை நாங்கள் முன்பே சொன்னோம். ஆனால் எங்கள் மீது கோபம் அடைந்தனர். இரட்டை இலை சின்னத்தில் நிற்க வேண்டுமா அல்லது சுயேச்சை சின்னத்தில் நிற்க வேண்டுமா என்ற குழப்பமும் இருந்தது. இடைத்தேர்தலில் வலிமையுடன் போட்டியிட வேண்டும் என பாஜக அப்போதே கூறியது. மேலும் ஒரே சின்னத்தில் ஒரு கட்சியை சேர்ந்த வேட்பாளர் நிற்க வேண்டும் என்பதை பாஜக முன்பே கூறியது. ஆளும்கட்சியை எதிர்க்க எவ்வளவு பலம் தேவை என்பதை இடைத்தேர்தல் உணர்த்துகிறது, என்று அண்ணாமலை கூறி இருந்தார். அவர் ஒற்றை தலைமைக்கு எதிராக பேசுகிறாரே என்ற கேள்விகளை எழுப்பியது. இந்த பேட்டியில் இருந்தே அண்ணாமலை - எடப்பாடி பழனிசாமி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக கூறப்பட்டது.

பதிலடி
இந்த மோதல் நெருப்பு வராத புகையாக இருந்த நிலையில், பாஜகவில் இருந்த நிர்மல் குமார் தற்போது அதிமுகவில் இணைந்துள்ளார். அண்ணாமலையை கடுமையாக விமர்சனம் செய்துவிட்டு நிர்மல் குமார் அதிமுகவில் இணைந்து இருப்பது பல்வேறு விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது. நிர்மல் குமாரை தொடர்ந்து வரிசையாக நேற்றும், இன்றும் பாஜகவின் முக்கிய நிர்வாகிகள் பலர் வரிசையாக அதிமுகவில் இணைந்து உள்ளனர். இந்த விவகாரத்தில் கருத்து சொன்ன அமர் பிரசாத் ரெட்டி, ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் ஜனநாயக மரபுகளை காலில் போட்டு மிதித்து, முழுமையாக மக்களை விலை கொடுத்து வாங்கிய இரு பெரும் திராவிட இயக்கங்கள், ஜனநாயகம் குறித்து வாய் கிழிய பேசலாமா? இனி, அந்தச் சொல்லை இரு கட்சியினரும் பயன்படுத்தாமல் இருப்பதே அச்சொல்லுக்கான மரியாதை! அதிமுக ஒரு கூட்டணி கட்சியாக இருந்து கொண்டு இதை செய்திருக்ககூடாது. அண்ணாமலை தலைமைக்கு கீழ் பாஜக தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்கும்.நாலாண்டு காலம் 420க்களாக வலம் வந்தவர்கள் கதையெல்லாம் ஊரறிந்த விவகாரம். அப்படி இருக்கையில், கொள்கையற்ற கட்சி மாறி-பிழைப்புவாதிகளை வைத்து, அடுத்தவரை கேவலப்படுத்தி ரசிக்கும் கேவலமானவர்கள் தலைமைப் பொறுப்புக்குத் தகுதியானவரா?, என்று கேள்வி எழுப்பி உள்ளார்.

அண்ணாமலை
இது போக அண்ணாமலையும் அதிமுகவை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். அதில், பாஜகவினரை இழுத்தால்தான் திராவிட கட்சிகள் வளரும் என்ற நிலை வந்துவிட்டது. அந்த அளவிற்கு திராவிட கட்சிகளின் நிலை உள்ளது. திராவிட கட்சிகளை நம்பித்தான் பாஜக இருந்தது என்று கூறி வந்தனர். திராவிட கட்சிகளில் இருந்து ஆட்களை அழைத்து நாங்கள் கட்சி நடத்தியதாக கூறி வந்தனர். ஆனால் இப்போது பாருங்கள். பாஜகவை நம்பி திராவிட கட்சிகள் உள்ளன. திராவிட கட்சிகள் இப்போது யாரை நம்பி இருக்கிறார்கள். எங்களின் இரண்டாம் கட்ட, மூன்றாம் கட்ட தலைவர்கள் அங்கே சென்று கொண்டு இருக்கிறார்கள். அவர்களை திராவிட கட்சிகளும் ஏற்றுக்கொண்டு உள்ளன. எங்களின் வயசு என்ன? அவர்களின் வயசு என்ன? எங்களை நம்பி அவர்கள் இருக்கிறார்கள்.. நாங்கள் எத்தனை முறை ஆட்சியில் இருந்திருக்கிறோம். அவர்கள் எத்தனை முறை இருந்துள்ளனர். தமிழ்நாட்டில் நாங்கள் வளர்ந்து இருக்கிறோம் என்பதைத்தான் இது காட்டுகிறது. ஒவ்வொரு வினைக்கும் எதிர்வினை இருக்கும், கட்சியில் இருந்து போனால் தான் புதியவர்களுக்கு பொறுப்பு தர முடியும். அப்படித்தான் புதிய தலைவர்களுக்கு பதவி அளிக்க முடியும் என்று பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

உடைகிறதா?
இதனால் தமிழ்நாட்டில் பாஜக - அதிமுக கூட்டணி உடைகிறதோ என்று கேள்வி எழுந்துள்ளது. அதிமுக இப்படி பாஜக நிர்வாகிகளை தூக்கி அடித்து ஆட தொடங்கி உள்ளதால் அதிமுக - பாஜக கூட்டணி உடைக்கிறதோ என்ற கேள்வி எழுந்துள்ளது. அப்படியே கூட்டணி உடைந்தாலும் பாஜக என்ன செய்யும் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. ஏனென்றால் திமுகவுடன் பாஜக கூட்டணி வைக்க முடியாது. திமுக பாஜகவை கடுமையாக எதிர்த்து வருகிறது. மேலும் காங்கிரசுடன் திமுக நெருக்கமாக இருந்து வருகிறது. இதனால் கண்டிப்பாக திமுக - பாஜக கூட்டணி உருவாகாது. அதனால் மூன்றாவது கூட்டணி அமைக்க மட்டுமே பாஜகவிற்கு வாய்ப்பு உள்ளது. இதில் தேமுதிக இணைவதும் சந்தேகம்தான். தேமுதிக பாஜகவுடன் நட்பாக இல்லை, அதிலும் நேற்று விஜயகாந்தை விமர்சனம் செய்யும் வகையில் அண்ணாமலை பேசியது தேமுதிகவை அப்செட் ஆக்கி உள்ளது. நாம் தமிழரும் கூட்டணி வைக்காது. இதனால் மிச்சம் இருப்பது அமமுக, பாமக மற்றும் சில சிறிய கட்சிகள்தான். இவர்களுடன் சேர்ந்து பாஜக மூன்றாவது அணி அமைக்குமோ என்ற கேள்வி எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications