முறையான திட்டம்! இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் இதுதான் தேவை! டெல்லிக்கு பிளானோடு போகும் ஸ்டாலின்
சென்னை; டெல்லியில் நடக்க போகும் இந்திய கூட்டணி கட்சிகளின் கூட்டத்திற்கு முதல்வர் ஸ்டாலின் முறையான திட்டத்துடன் செல்வதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
முதல்வர் ஸ்டாலின், ஜூன் 1ஆம் தேதி டெல்லி செல்கிறார். அன்றைய தினம் டெல்லியில் நடைபெறும் இந்திய கூட்டணி தலைவர்கள் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க உள்ளார்.

டெல்லி கூட்டம்: ஜூன் 1-ம் தேதி எதிர்கட்சிகளின் கூட்டணியான இந்திய கூட்டணி முக்கிய ஆலோசனை கூட்டம் நடத்த உள்ளது. இந்திய கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் டெல்லியில் கூடுவார்கள் என்று முடிவு எடுக்கப்பட்டு உள்ளது.
தேர்தல் நடத்தப்பட்ட விதம், தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள், மோடியின் செயல்பாடு, ரிசல்ட் வந்த பின் என்ன செய்வது, ரிசல்ட் எதிராக வந்தால் என்ன செய்யலாம், ரிசல்ட் இந்திய கூட்டணிக்கு ஆதரவாக வந்தால் யாரை பிரதமராக்குவது என்றெல்லாம் ஆலோசனைகள் நடக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
இறுதிக்கட்ட தேர்தல்: தேசிய அளவில் லோக்சபா தேர்தல் தீவிரம் இன்னும் முடியவில்லை. லோக்சபா தேர்தலுக்கான கொண்டாட்டங்கள், பிரச்சாரங்கள் மிக தீவிரமாக நடந்தபடியே இருக்கின்றன. இறுதிக்கட்ட வாக்குபதிவிற்கான பிரச்சாரங்கள் தீவிரமாக நடந்து வருகின்றன.
தற்போதைய மக்களவை தேர்தலில் ஏழாவது மற்றும் கடைசி சுற்று வாக்குப்பதிவு நடைபெறும் நாளில்.. அதாவது ஜூன் 1-ம் தேதி எதிர்கட்சிகளின் கூட்டணியான இந்திய கூட்டணி முக்கிய ஆலோசனை கூட்டம் நடத்த உள்ளது.
ஸ்டாலின் பிளான்: டெல்லியில் நடக்க போகும் இந்திய கூட்டணி கட்சிகளின் கூட்டத்திற்கு முதல்வர் ஸ்டாலின் முறையான திட்டத்துடன் செல்வதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்த கூட்டத்திற்கு சனிக்கிழமை காலை செல்லும் ஸ்டாலின், ஜூன் 2ஆம் தேதி டெல்லியில் இருந்து புறப்பட்டு சென்னை திரும்புகிறார் முதல்வர் ஸ்டாலின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து முடிவு எடுக்க இந்தியா கூட்டணி கட்சி தலைவர்கள் ஒன்று கூடுகிறார்கள்
பிரதமர் வேட்பாளர் யார் என்பது குறித்து இந்திய கூட்டணியின் தலைவர் சார்பாக முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.
இதற்கு ஸ்டாலின் பக்கா பிளானோடு சென்றுள்ளதாக கூறப்படுகிறது. அதாவது தமிழ்நாட்டிற்கு எது தேவை. தமிழ்நாட்டிற்கு என்னவெல்லாம் முக்கியம் என்பதை மனதில் வைத்துக்கொண்டு முறையான திட்டமிடலுடன் ஸ்டாலின் செல்ல இருக்கிறாராம்.
10 வருடம்: கடந்த 10 வருடமாக தமிழ்நாட்டிற்கு மத்திய அமைச்சர் இல்லை. இணை அமைச்சர்கள் மட்டுமே இருந்தனர். இந்த நிலையில் நேரடியாக தமிழ்நாட்டிற்கு 3 பெரிய துறைகளின் மத்திய அமைச்சர்கள் தேவை.
சில இணை அமைச்சர்கள் தேவை. மத்திய துறைகளில் முக்கிய பொறுப்புகள் தேவை என்று திமுக காய் நகர்த்த உள்ளதாம். அதோடு அட்டர்னி ஜெனரலாக திமுகவிற்கு நெருக்கமான ஒருவரை கொண்டு வருவது பற்றியும் ஸ்டாலின் பேச உள்ளாராம்.
இது போக தேசிய அளவில் இந்திய கூட்டணி வெற்றிபெற்றால் தமிழ்நாட்டில் இருந்து 3-4 அமைச்சர்கள் வர வேண்டும். பெரிய துறைகளை நாம் எடுக்க வேண்டும். யாரை அமைச்சர் ஆக்கலாம். யாருக்கு வாய்ப்பு கொடுக்கலாம் என்றும் ஸ்டாலின் ஆலோசனைகளை செய்து இருக்கிறாராம். முதல்வர் உடன் எம்பி டிஆர் பாலு செல்வார் என்றும் கூறப்பட்டு உள்ளது.
-
தாத்தா காலத்து பாலிடிக்ஸ் வேலைக்கு ஆகாது! உதய் போடும் மாஸ்டர் ப்ளான்! இனி Gen Z ஸ்டைல் தானாமே! -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
"இது அதுல்ல?.. ஜனநாயகத்தை சிதைப்பதில் பாஜகவும் தவெகவும் ஒண்ணு” - திமுக சரமாரி அட்டாக்! -
“முஸ்லீம் மக்களை காப்பாற்றும் லட்சணம் இதுதானா?" TVK + IUML கட்சிகளை லெஃப்ட் ரைட் வாங்கிய திமுக -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்! -
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
இந்த லட்சணத்துல உங்களுக்கு பொ.செ பதவி வேற வேணுமா? தேர்தல் தோல்விக்குப் பின் ஸ்டாலின் ஆவேசம்












Click it and Unblock the Notifications