இரு அணிகள் இணைப்புக்கு பிறகு பரபரக்கும் ஈபிஎஸ்- ஓபிஎஸ் இடையிலான சந்திப்பு.. பின்னணி என்ன?
சென்னை: முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும் துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வமும் இன்று சந்தித்து ஆலோசனை கூட்டம் நடத்தியது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.
தமிழக சட்டசபைத் தேர்தலுக்கு முன்னரே அரசியலில் இருந்து ஒதுங்கியிருப்பதாக சசிகலா இரவோடு இரவாக ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தார். இந்த அறிக்கையால் எங்கே சசிகலாவால் அதிமுகவில் குழப்பம் வந்துவிடுமோ என கருதிய அதிமுக நிர்வாகிகள் சற்றே நிம்மதி பெருமூச்சுவிட்டனர்.
தேர்தலில் அதிமுக தோல்வி அடைந்தது. இதையடுத்து எதிர்க்கட்சித் தலைவர் யார் என்ற போட்டி ஈபிஎஸ்- ஓபிஎஸ் இடையே வந்தது. இருவரும் நேருக்கு நேராக கருத்து மோதலில் ஈடுபட்டதாக தெரியவந்தது.

சசிகலா தொண்டர்கள்
தனித்தனியாக அறிக்கையை வெளியிட்டு வந்தனர். இந்த நிலையில் சசிகலா தொண்டர்களுடன் பேசும் 5 ஆடியோக்கள் வெளியாகின. இந்த ஆடியோக்கள் வேண்டுமென்றே லீக் செய்யப்பட்டவை. இதில் பேசிய சசிகலா தான் விரைவில் வந்து கட்சியை சீரமைப்பேன், ஜெயலலிதா இருந்த போது கட்சி எப்படி இருந்ததோ அப்படி வைத்திருப்பேன்.

மனதிற்கு வேதனை
அதிமுகவில் நிர்வாகிகள் சண்டையிடுவது மனதிற்கு வேதனையை தருகிறது என்றெல்லாம் பேசியிருந்தார். இதன் மூலம் சசிகலா அதிமுகவை கபளீகரம் செய்ய ஆயத்தமானது கண் கூடாகவே தெரிந்தது. அதிமுகவை சசிகலா கைப்பற்றுவதற்குள் ஏற்கெனவே சண்டையிட்டு கொண்டுள்ள நிர்வாகிகள் ஒன்றிணைந்து கருத்தொற்றுமையுடன் இருந்தால் சசிகலா தலையீட்டை தவிர்க்கலாம் என நாம் ஒன் இந்தியா தமிழ் தளம் சார்பில் செய்தி வெளியிட்டிருந்தோம்.

எடப்பாடி பழனிச்சாமி
அதில் மோதல் போக்குடன் இருக்கும் எடப்பாடி பழனிச்சாமியும் ஓ பன்னீர் செல்வமும் ஒற்றுமையாக இருந்தால் நடுவே சசிகலா வருவதை தடுக்கலாம் என கூறியிருந்தோம். இந்த நிலையில் சென்னையில் இன்றைய தினம் எடப்பாடி பழனிச்சாமியும் ஓ பன்னீர் செல்வமும் சந்தித்து ஆலோசனை நடத்தினர்.

அதிமுக உறுப்பினர்
இதில் என்னவெல்லாம் பேசப்பட்டிருக்கலாம் என்பது குறித்து பார்ப்போம். சசிகலா அதிமுக உறுப்பினர் இல்லாத நிலையிலும் வேண்டுமென்றே குழப்பத்தை ஏற்படுத்த ஆடியோக்களை ரிலீஸ் செய்து வருகிறார். இதனால் கட்சியில் ஒற்றுமையாக செயல்பட்டு சசிகலாவோ அவரது குடும்பத்தினரோ உள்ளே நுழையாமல் பார்த்துக் கொள்வது எப்படி என்பது குறித்து ஆலோசித்திருக்கலாம்.

அதிமுக
ஒரு வேளை சசிகலா அதிமுகவை கைப்பற்ற வந்தால் அப்போது அதிமுக மூத்த நிர்வாகிகளை தங்கள் பக்கம் இழுக்க வாய்ப்பு இருக்கிறது. அதை தடுக்க என்னவெல்லாம் செய்வது? சசிகலா பக்கம் முக்கிய நிர்வாகிகள் சாயாமல் இருக்க என்ன செய்வது போன்ற விஷயங்களை விவாதித்திருக்கலாம் என தெரிகிறது.
-
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்!












Click it and Unblock the Notifications