நல்லவேளை கோயம்பேடுக்கு போச்சு! பிராட்வேயில் மட்டும் பேருந்து நிலையம் இருந்திருந்தால் என்னவாகும்?
சென்னை: சென்னை பிராட்வேயில் பேருந்து நிலையம் இருந்திருந்தால் என்னவாகும்? என்பதை நினைத்து பாருங்கள்.
சென்னை பிராட்வேயிலிருந்து கோயம்பேடுக்கு பேருந்து நிலையம் மாற்றப்பட்டது. இதற்காக பலர் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில் தற்போது அங்கிருந்தும் கிளாம்பாக்கம் சென்றுவிட்டது. இன்னும் விட்டால் செங்கல்பட்டுக்கே சென்றுவிடுமோ என பலர் பேசி வருகிறார்கள்.

இப்படிப்பட்ட சூழலில் பூக்கடை பேருந்து நிலையம் குறித்து டீக்கடை எனும் எக்ஸ் வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: 80&90 களில் சென்னை வருபவர்கள் பிராட்வே பேருந்து நிலையம் ஒரு காலத்தில் மாறும் என்று சொன்னால் நம்பி இருக்கவே மாட்டார்கள். அவ்வளவு ஸ்டேட்டர்ஜிக் முக்கியத்துவம் கொண்ட இடமாக பிராட்வே பேருந்து நிலையம் இருந்தது.
தென் மாவட்டங்களில் இருந்து வருபவர்கள் அங்கே உள்ள கடைகளில் பொருள் வாங்கி லாரிகளில் புக் செய்துவிட்டு போவார்கள். எலக்ட்ரிக்கல் ஐட்டங்கள், துணிமணிகள் ஹார்டுவேர் சமாச்சாரங்கள் என எல்லா மொத்த கடைகளுமே அங்கு தான் இருந்தன.
சென்னை தலைமைச் செயலகத்திற்கு தங்கள் குறை சம்பந்தமாக வருபவர்களுக்கும் பிராட்வே மிக எளிதான ஆப்ஷன். முக்கியமாக உயர் நீதிமன்றம் பேருந்து நிலையத்தின் பின்னால் தான் இருந்தது. தென் மாவட்ட மக்கள் தங்கள் வழக்குகளுக்காக வந்து போக மிக எளிதான இடமாக இருந்தது.
தீபாவளி சமயங்களில் எல்லாம் ரங்கநாதன் தெருவை விட பிராட்வே பேருந்து நிலையம் தான் கூட்டம் அதிகமாக இருக்கும். அங்கே பந்தர் தெருவில் பட்டாசுகளை வாங்கிக் கொண்டு எங்கே கூட்ட நெரிசலில் உராய்வில் வெடித்து விடுமோ என்ற பயத்துடன் பலர் கடப்பார்கள்.

அங்கே இருக்கும் உணவகங்கள் எல்லாம் கொடி கட்டி பறந்தன. தென்மாவட்ட மக்கள் உணவு சுவை கொண்டவர்கள். ஒரு இடம் பிடித்து விட்டால் மீண்டும் அங்கேயே வருவார்கள். இது எங்க வழக்கமான ஹோட்டல் என்ற பேச்சை அப்போது கேட்க முடியும்.
சரவணபவன் 90களில் பிராட்வேயில் திறந்த போது அங்கு நின்ற கூட்டத்தை பார்த்து எல்லோரும் பிரமித்து இருக்கிறார்கள். டோக்கன் கொடுப்பதையே பலமுறை நிப்பாட்டி இருக்கிறார்கள். அந்த அளவிற்கு மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியாக இருந்தது.
96ல் கலைஞர் நான்காவது முறையாக ஆட்சிக்கு வந்த போது, அந்த ஆண்டு சென்னையில் ஒரு பெரிய மழை பெய்தது. பிராட்வே பகுதியே ஸ்தம்பித்து நின்றது. ஏற்கனவே இட நெரிசல், குப்பை கூளங்கள், மழையால் வந்த சாக்கடை நீர் என அந்த ஏரியாவே அல்லோகலப்பட்டது.
முழங்கால் அளவு தண்ணீர், சகதியுடன் மக்கள் பேருந்துகளில் ஏறினார்கள். பஸ்கள் அனைத்தும் சகதியாய் ஓடின. அப்போதுதான் கலைஞர் இந்த பேருந்து நிலையம் இங்கே இருந்தால் சரி வராது என யோசித்து மாற்ற முனைந்தார். அப்போது கொத்தவால் சாவடி பூக்கடைகள் அனைத்தும் அங்கே இருந்தன. அதனால் அதையும் சேர்த்து கோயம்பேட்டிற்கு இடப்பெயர்வு செய்தார்.
சென்னை பிராட்வே பகுதி மூச்சு விட அந்த இடம் பெயர்வு காரணமாக இருந்தது. அதை முதலில் அந்தப் பகுதி வர்த்தகர்கள், காய்கறி பூ வியாபாரிகள் அனைவரும் எதிர்த்தார்கள். இன்றைய சூழலில் யோசித்துப் பாருங்கள், பிராட்வேயில் பேருந்து நிலையம் இருந்தால் என்னவாயிருக்கும் என்று. இவ்வாறு அந்த நெட்டிசன் கேள்வி எழுப்பியிருக்கிறார்.
-
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications