Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

திமுக நம்பர் 1.. மலரும் தாமரை? அப்போ அதிமுக? இதுவரை வந்த கருத்து கணிப்புகள் சொல்வது இதுதான்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: லோக்சபா தேர்தல் தொடர்பாக பல்வேறு கருத்து கணிப்புகள் வெளியாகி வருகின்றன. அதில் எல்லாம் தமிழ்நாட்டில் திமுகதான் பெரும்பான்மை இடங்களை வெல்லும் என்று கணிப்புகள் உறுதி செய்கின்றன. இதுவரை வெளியான கருத்து கணிப்புகள் முடிவுகளை இங்கே பார்க்கலாம்.

இதுவரை வெளியான தேர்தல் கருத்து கணிப்புகள் குறித்து இங்கே பார்க்கலாம்.

What will happen in Tamil Nadu Lok sabha Prediction survey you should know

சர்வே 1 - சாணக்யா கருத்து கணிப்பு: சாணக்யா செய்தி சேனல் சார்பாக ஒரு கருத்து கணிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. மக்களவைத் தேர்தலில் உங்கள் ஓட்டு யாருக்கு? என்று இதில் கேட்கப்பட்டு உள்ளது. அதில் திமுகவிற்கு வாக்களிப்போம் என்று 32 சதவிகிதம் பேர் குறிப்பிட்டுள்ளனர். அதிமுகவிற்கு வாக்களிப்போம் என்று 21 சதவிகிதம் பேர் குறிப்பிட்டுள்ளனர்.

அதே சமயம் பாஜகவிற்கு வாக்களிப்போம் என்று 22 சதவிகிதம் பேர் குறிப்பிட்டுள்ளனர். இதில் அதிமுகவை விட பாஜக ஒரு சதவிகிதம் கூடுதல் வாக்குகளை பெற்றுள்ளது.பாஜகவுடன் கூட்டணி இல்லாமல் அதிமுக மூன்றாவது இடத்திற்கு செல்லும் என்று இந்த கருத்து கணிப்பு தெரிகிறது. அதே சமயம் திமுக மீண்டும் லோக்சபா தேர்தலில் அதிக இடங்களை பெறும் என்று கணிப்பு தெரிவிக்கின்றன.

அதிமுகவிற்கு எச்சரிக்கை மணியாக இந்த கருத்து கணிப்பு முடிவுகள் மாறி உள்ளன.

சர்வே 2 - டைம்ஸ் நவ் - மேட்ரைஸ் என்சி: டைம்ஸ் நவ் - மேட்ரைஸ் என்சி சார்பாக கருத்து கணிப்பு மேற்கொள்ளப்பட்டு உள்ளது.. தமிழ்நாடு (மொத்த இடங்கள்- 39):

- பாஜக: 1
- திமுகவின் இந்தியா கூட்டணி - 36
- அதிமுக: 2
- மற்றவை: 0

மொத்தமாக ரிசல்ட் என்ன: மக்களவையின் ஒட்டுமொத்த கணிப்பு:

மொத்த இடங்கள்: 543

பாஜக கூட்டணி: 366
இந்தியா கூட்டணி: 104
மற்றவை: 73

மீண்டும் பாஜக ஆட்சி: இதன் மூலம் பாஜக மீண்டும் முழு பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்கும் என்று கணிக்கப்பட்டு உள்ளது. 3வது முறையாக பாஜக ஆட்சி அமைக்கும் என்று கணிக்கப்பட்டு உள்ளது.

தமிழ்நாட்டில் தோல்வி: அதே சமயம் தமிழ்நாட்டில் பாஜக படுதோல்வி அடையும் என்று கணிக்கப்பட்டு உள்ளது. தமிழ்நாடு (மொத்த இடங்கள்- 39): லோக்சபா தொகுதி கணிப்புகள் படி பாஜக: 1 இடத்தில் மட்டுமே வெல்லும். திமுகவின் இந்தியா கூட்டணி - 36 இடங்களில் வெல்லும். 39 இடங்களில் இருந்து 3 இடங்களை திமுக இழக்கும் என்றாலும், பெரும்பான்மை இடங்களில் திமுகவே வெல்லும். அதிமுக: 2 இடங்களில் வெல்லும். கடந்த முறை ஒரு தொகுதியில் வென்ற அதிமுக இந்த முறை 2 இடங்களில் வெல்லும்.

பாஜக முந்தும்: திமுக கூட்டணி லோக்சபா தேர்தலில் 59.7 சதவிகிதம் வாக்குகளை பெறும் என்று கணிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. அதேபோல் பாஜக 20.6 சதவிகிதம் வாக்குகளை பெறும் என்று கணிக்கப்பட்டு இருக்கிறது. மேலும் அதிமுக 16 சதவிகித கருத்து கணிப்புகளை பெறும் என்று கணிக்கப்பட்டு உள்ளது.

அதாவது இந்த முறை பாஜக அதிமுகவை விட அதிக வாக்குகள் பெறும். முதல்முறையாக பாஜகவின் வாக்கு வங்கி அதிமுகவை முந்தும். தமிழ்நாட்டில் பாஜக இரண்டாம் இடத்தை பெறும் என்று கணிக்கப்பட்டு உள்ளது.

சர்வே 3 - பிரஷாந்த் கிஷோர் : அரசியல் ஆலோசகர் பிரஷாந்த் கிஷோர் கணிப்புப்படி, வங்காளத்தில் பா.ஜ.க, சிறப்பாக செயல்பட வாய்ப்பு உள்ளது. தமிழகத்தில், பா.ஜ.க, முதல் முறையாக, இரட்டை இலக்கத்தை எட்டக்கூடும். தெலுங்கானாவிலும், பா.ஜ.க, சிறப்பாக செயல்படும். ஆனால் 370 இடங்கள் என்பது சாத்தியம் இல்லை.

தேசிய அளவில் பாஜக தனியாக 370 எல்லாம் எடுக்க சான்ஸ் குறைவு. பிரதமர் நரேந்திர மோடி பாராளுமன்றத்தில் இந்த எண்ணிக்கையைப் பற்றி பேசினார். ஆனால் இது பாஜக தொண்டர்களுக்கான இலக்கு என்று நான் நினைக்கிறேன், நிஜத்தில் சாத்தியம் அல்ல, என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

சர்வே 4 - இந்தியா டிவி-சிஎன்எக்ஸ் : தமிழ்நாடு, புதுச்சேரி உட்பட தென் மாநிலங்களில் மொத்தமுள்ள 130 மக்களவைத் தொகுதிகளில் எதிர்க்கட்சிகளின் கூட்டணியான இந்தியா கூட்டணி 60 இடங்களையும், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக என்டிஏ 38 இடங்களை வெல்லக்கூடும் என்று இந்தியா டிவி-சிஎன்எக்ஸ் கருத்துக் கணிப்பு தெரிவிக்கிறது.

திமுக ஆளும் தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 39 தொகுதிகளில் திமுகவின் இந்திய கூட்டணி 30 இடங்களிலும், தேசிய ஜனநாயகக் கூட்டணி 5 இடங்களிலும், அதிமுக 4 இடங்களிலும் வெற்றிபெறலாம் என சர்வே கணித்துள்ளது.

கட்சி வாரியாக, திமுக 20 இடங்களிலும், அதிமுக மற்றும் பாஜக தலா 4 இடங்களிலும், காங்கிரஸ் 6 இடங்களிலும், பாமக ஒரு இடத்திலும், மற்றவர்கள் 4 இடங்களிலும் வெற்றி பெறலாம்.

மண்டல வாரியான கணிப்புகள்:: சென்னை மொத்தம் 6 (திமுக கூட்டணி 5, அதிமுக 1), வட தமிழகம் மொத்தம் 7 (திமுக 6, என்.டி.ஏ. 1), மேற்கு தமிழ்நாடு மொத்தம் 9 (திமுக 6, என்.டி.ஏ. 2, அதிமுக 1), தென் தமிழ்நாடு மொத்தம் 10 (திமுக 7, தே.மு.தி.க. 2, அதிமுக 1), காவிரி டெல்டா மொத்தம் 7 (திமுக 6, அதிமுக 1).

சர்வே 5 - தந்தி டிவி: தந்தி டிவி சார்பாக தமிழ்நாட்டிலும் புதுச்சேரியிலும் கருத்து கணிப்புகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன. அதன் முடிவுகள் தற்போது வெளியாகி உள்ளன.

தந்தி டிவி சார்பாக 2024ல் பிப்ரவரி மாதம் எடுக்கப்பட்ட சர்வேயில் உங்கள் தொகுதியில் வெற்றிபெற போவது யார் ? என்ற கேள்விக்கு.

திமுக 43 சதவிகிதம் வாக்களித்துள்ளனர்.

அதிமுக 33 சதவிகிதம் வாக்களித்துள்ளனர்

பாஜக 12 சதவிகிதம் வாக்களித்துள்ளனர்

நாம் தமிழர் 8 சதவிகிதம் வாக்களித்துள்ளனர்

மற்றவை 4 சதவிகிதம் வாக்களித்துள்ளனர்

தந்தி டிவி சார்பாக 2024ல் பிப்ரவரி மாதம் எடுக்கப்பட்ட சர்வேயில் நீங்கள் யாருக்கு வாக்களிப்பீர்கள்? என்ற கேள்விக்கு.

திமுக 42 சதவிகிதம் வாக்களித்துள்ளனர்

அதிமுக 30 சதவிகிதம் வாக்களித்துள்ளனர்

பாஜக 13 சதவிகிதம் வாக்களித்துள்ளனர்

நாம் தமிழர் 8 சதவிகிதம் வாக்களித்துள்ளனர்

மற்றவை 7 சதவிகிதம் வாக்களித்துள்ளனர்

இதில் பாஜக 14 தொகுதிகளில் இரண்டாம் இடம் பிடிக்கும் என்றும் இந்த கணிப்பில் கூறப்பட்டு உள்ளது.

சர்வே 6: 2024 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தல்களுக்கான ஏபிபி சிவோட்டர் கருத்துக் கணிப்புத் தரவுகளின்படி, திராவிட முன்னேற்றக் கழகமும் அதன் கூட்டணிக் கட்சிகளும் 39 மக்களவைத் தொகுதிகளையும் தமிழ்நாட்டில் கைப்பற்றி வெற்றி பெறும் என்று கணிக்கப்பட்டு உள்ளது. பாஜக கூட்டணி, அதிமுக கூட்டணிக்கு ஒரு இடம் கூட கிடைக்காது என்று கணிக்கப்பட்டு உள்ளது.

காங்கிரஸ், சிபிஐ, சிபிஐ(எம்), விசிக, ம.தி.மு.க., மக்கள் நீதி மய்யம், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கொங்கு தேச மக்கள் கட்சி ஆகியவற்றுடன் தேர்தலுக்கு முந்தைய கூட்டணியை திமுக அமைத்து உள்ளது. இந்த கூட்டணி 39 தொகுதிகளையும் மொத்தமாக கைப்பற்றும் என்று கணிக்கப்பட்டு உள்ளது.

வாக்கெடுப்புத் தரவுகள், வாக்குப் பங்கின் அடிப்படையில், 54.7% சதவீதத்துடன், திமுக மீண்டும் தமிழ்நாட்டில் முதலிடம் பிடிக்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. மாறாக, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் (அதிமுக) 27.8% வாக்குகளைப் பெற்று இரண்டாவது இடத்தைப் பிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மூன்றாவது இடம் 10.9% வாக்குகளுடன் NDA க்கு லாபமாக இருக்கும், மற்ற கட்சிகள் 6.8% வாக்குகளைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சர்வே 7: தமிழ்நாட்டில் திமுக 30 இடங்களில் வெற்றிபெறும் என்று நியூஸ் 18 கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதே சமயம் பாஜக கூட்டணி 5 இடங்களில் வெற்றிபெறும் என்று நியூஸ் 18 கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அதிமுக கூட்டணி 4 இடங்களில் வெற்றிபெறும் என்று நியூஸ் 18 கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. திமுக கூட்டணிக்கு 51 வாக்கு சதவிகிதம் கிடைக்கும். பாஜக கூட்டணிக்கு 13 சதவிகித வாக்குகள் கிடைக்கும். அதிமுக கூட்டணிக்கு 17 சதவிகிதம் கிடைக்கும் என்று நியூஸ் 18 கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

சர்வே 8: லோக்சபா தேர்தல் தொடர்பாக ஏபிபி - சி வோட்டர் கருத்து கணிப்புகளை மேற்கொண்டு உள்ளன.

தமிழ்நாடு - 39 இடங்கள்.

திமுக இந்தியா கூட்டணி- 39(52%)
பாஜக கூட்டணி - 00(19%)
அதிமுக - 00(23%)

லோக்சபா தேர்தலில் தமிழ்நாட்டில் உள்ள 39 இடங்களில் எல்லா இடங்களிலும் திமுக கூட்டணி வெற்றிபெறும் என்று கணிப்பில் கூறப்பட்டு உள்ளது. அதிமுக வசம் இருந்த ஒரு தொகுதியான தேனியும் திமுக பக்கம் செல்லும் என்று கணிக்கப்பட்டு உள்ளது.

திமுகவின் வாக்கு சதவிகிதம் 52 வரை செல்லும் என்று கணிக்கப்பட்டு உள்ளது. பாஜக கூட்டணி - 00(19%) வாக்கு சதவிகிதம் பெறும் என்று கணிக்கப்பட்டு உள்ளது. பாஜகவை விட அதிகமாக அதிமுக - 00(23%) வாக்குகளை பெறும் கணிப்பு தெரிவித்துள்ளது.

பல்வேறு லோக்சபா தேர்தல் கணிப்புகளில் தமிழ்நாட்டில் பாஜக 2- 10 இடங்கள் வரை கூட வெல்லும் என்று கணிப்புகள் தெரிவித்தன. ஆனால் இப்போது தேர்தலுக்கு 1 வாரம் கூட இல்லாத நிலையில் எல்லா இடங்களிலும் ஆளும் திமுகவே வெல்லும் என்று கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

சர்வே 9" லோக்போல் நடத்திய சர்வேயில் தமிழ்நாட்டில் உள்ள 39 இடங்களில் எல்லா இடங்களிலும் திமுக கூட்டணி வெற்றிபெறும் என்று கணிப்பில் கூறப்பட்டு உள்ளது. அதிமுக வசம் இருந்த ஒரு தொகுதியான தேனியும் திமுக பக்கம் செல்லும் என்று கணிக்கப்பட்டு உள்ளது

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+