Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஜனநாயகன் பட சென்சார் வழக்கில் இனி என்ன ஆகும்? நீதிபதிகள் சொன்ன தீர்ப்பின் அர்த்தம் என்ன? எளிமையான விளக்கம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஜனநாயகன் (Jana nayagan)திரைப்படம் வெளியாவதில் மீண்டும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஜனநாயகன் திரைப்படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்கிய தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்துள்ள இரு நீதிபதிகள் அமர்வு, வழக்கின் விசாரணையை மீண்டும் தனி நீதிபதிக்கே அனுப்பி வைத்துள்ளது. இந்த வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பு என்ன? அதன் அர்த்தம் என்ன? என்று இங்கே பார்க்கலாம்

Jana nayagan

1. Jana nayagan Case: தீர்ப்பு வழங்கியது யார்? - இது இரண்டு நீதிபதிகள் அமர்வு. தலைமை நீதிபதி மணீந்திர மோகன் ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி ஜி. அருள்முருகன் ஆகியோர் தீர்ப்பு வழங்கினர்.

2. தீர்ப்பின் முதல் முக்கிய அம்சம் - படத்திற்கு இப்போது வெளியாக அனுமதி தரப்படவில்லை.

3. படத்தை மறு தணிக்கை செய்யவும் CBFCக்கு உத்தரவிடவில்லை. இல்லை ஏதாவது சர்டிபிகேட் கொடுக்க வேண்டும் என்றும் உத்தரவிடவில்லை.

3. ஜனநாயகன் படத்திற்கு உடனடியாக யு/ஏ சான்றிதழ் தர வேண்டும் என்று தனி நீதிபதி உத்தரவிட்டு இருந்த நிலையில் அதை உயர் நீதிமன்ற இரண்டு நீதிபதிகள் அமர்வு ரத்து செய்துள்ளது.

4. கவனிக்க வேண்டிய விஷயம் - படத்தின் வழக்கு மீண்டும் தனி நீதிபதியிடம் அனுப்பப்பட்டு உள்ளது. முன்னதாக விஜயின் ஜனநாயகன் படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்க உயர் நீதிமன்ற தனி நீதிபதி உத்தரவு பிறப்பித்தது. ஜனநாயகன் திரைப்படத்திற்கு U/A தணிக்கை சான்றிதழ் வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஆனால் ஜனநாயகன் படம் தணிக்கைக்கு அனுமதி அளித்த உயர் நீதிமன்ற தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து உடனே மேல்முறையீடு செய்யப்பட்டது.

அந்த வழக்கில்தான் தற்போது ஜனநாயகன் தரப்பிற்கு எதிராக தீர்ப்பு வந்துள்ளது. 2 நீதிபதிகள் அமர்வு இந்த தீர்ப்பை வழங்கி உள்ளது. படத்திற்கு எதிராக CBFC உறுப்பினர் எழுதிய கடிதம் ஒன்றே இந்த படம் சிக்கலுக்கு உள்ளாவதற்கு காரணம். 5 உறுப்பினர்களில் 1 நபர் படம் தவறாக இருப்பதாக கூறியதால் அதன் சான்றிதழ் நிறுத்திவைக்கப்ட்டது.

5. ஜனநாயகன் வழக்கு மீண்டும் தனி நீதிபதி அமர்வு முன் விசாரிக்கப்படும். ஆனால் இந்த முறை CBFC வாதங்களும் கேட்கப்படும். எல்லோரின் வாதங்களும் கேட்ட பின்பே வழக்கில் தீர்ப்பு வழங்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்ற 2 நீதிபதிகள் அமர்வு தீர்ப்பு வழங்கி உள்ளது.

6. அதாவது ஜனநாயகன் வழக்கு மீண்டும் ஆரம்பத்திலேயே இருக்கிறது. மீண்டும் தனி நீதிபதி விசாரணை - அதன்பின் மேல்முறையீடு போனால் 2 நீதிபதிகள் அமர்வில் மேல்முறையீடு, அதன்பின் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு என்று செல்ல முடியும்.

7. அதாவது வழக்கில் இன்னும் பல படிநிலைகள் செல்லலாம். இதனால் படம் வெளியாக சிக்கல் ஏற்படும்.

8. ஜனநாயகன் படத்தில் மத உணர்வுகளைப் புண்படுத்தும் காட்சிகள் மற்றும் ஆயுதப் படைகளைக் சித்தரிப்பது தொடர்பான ஒரு புகார் கிடைத்ததே படத்தை எதிர்க்கு முடிவுக்கு ஒரே காரணம் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது. 'ஜன நாயகன்' திரைப்படம் பாதுகாப்புப் படைகளின் சில சின்னங்களைப் பயன்படுத்தியுள்ளது. இத்தகைய காட்சிகளைக் கையாளும்போது, பாதுகாப்புப் படைகளைச் சேர்ந்த நிபுணர்களுடன் கலந்தாலோசித்திருக்க வேண்டும். இது விதிமுறைகளுக்குப் புறம்பானது. மேலும் தேர்தல் விதிமுறைகள் இன்னும் 50 நாட்களில் வருவதால்.. படம் வெளியாகாமல் கூட போகலாம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+